புதன், 1 டிசம்பர், 2010

எங்கள் தலைவர் வீரமணி வாழ்க !வாழ்கவே !

ஒரே தலைவர் ஒரே கொள்கை ஒரே கொடி
68 ஆண்டுகள்
அனுபவப் புன்னகை - அந்தக்
கொள்கை மறவருக்கோ
அகவை - 78

யாருக்கும்
ஏற்படும்
அதிசயப் புன்னகை

பொன்
வண்ணத்
தலைவருக்கா
இத்தனை வயது...?


கேள்விக் குறிகள்
மக்கள்
மனதில்
வியப்புக் குறிகளாய்
எழுகின்றன

அவர்கள்
அவர்களாகவே
பேசும் மொழி

தலைவரைத்
தொலைக்காட்சிகளில்
பார்த்தேன்

வாழ்விணையர்
விழாவிலும்
பார்த்தேன்

நேரிலும் பார்த்தேன்

என்னமாய்த்
தோற்றப் பொலிவு

மல்லிகைப் புன்சிரிப்பு

அலைபாய்கிற
கம்பீரம்

அதே
இனிய குரல்

வாதப் பிரதிவாத
சொற்போர்

அய்யா
பெரியாரை
அடிக்கடி
நினைவூட்டும்
கூர்வாள்

வேகத் தடைகளையும்
தாண்டி ஓடுகிற
எந்திர நடை

உண்மையை
யார், மறுப்பது...?

தமிழர்
உள்ளங்களில்
உள்ளபடி - அவர்

உள்ளங்கை
நெல்லிக் கனி.

பெரியாரை
வரிவிடாது
வாசிப்பதும்
வளர்ப்பதுமே - இவர்

இளமைக்கு இரகசியம்.
இவர் ஆற்றும் பணி
பெரியாரை
உலகு தொழ, முக்கியம்!

தலைவர்
வீரமணியின்
பரிமாணங்கள்
தமிழர்கள்
காக்கவேண்டிய, சரித்திரம்

இவருக்கு
இந்தியன் பீனல் கோட்
தெரியும்.

யூனிகோடும்
தெரியும்.

இவர்
விழித்திருக்கிறபோது
தமிழை
தமிழனை
எவனால் அழித்துவிட முடியும்?

தொலைநோக்குப்
பார்வை
அறிவியல் நோக்கு
எந்நேரமும்
தமிழ்
தமிழரைப் பற்றிய
சிந்தனை

யூனிகோட்
மூலம்
தமிழில்
கிரந்த எழுத்தா...?

யாரவன்
சிறீரமண சர்மா...?

வெகுண்டெழுந்த
இனத் தலைவர்
முறையிட்டார்; முதல்வரிடம்!

முதல்வரும்
முறைப்படி விரைவாகச் செயல்பட்டார்.

செந்தமிழை
அழிக்க
ஆரியர் செய்த
சூழ்ச்சி
தமிழர்தலைவர் தம்
முயற்சியால், முறிந்தது.

உலகத்
தமிழரெல்லாம்
இன்று கொண்டாடும்
ஒற்றைத் தமிழர்- நம்
தமிழர் தலைவர்

தமிழுக்கு
தமிழருக்கு
இடர்வரின்
வருமுன் காப்பார்.

ஆரிய
ஆழிப் பேரலை
அபாயத்திலிருந்து
தமிழை, மீட்டவர்

உலகம் கொண்டாடுகிறது
இவர்தாம்
தமிழர் தலைவர்...!

இவர்
வாழ்க
 பல நூறாண்டுகள்...!



 -வழக்கறிஞர் மகேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக