வியாழன், 30 டிசம்பர், 2010

இன எழுச்சி: திருப்பத்துரை குலுக்கிய மாபெரும் ஆர்பாட்டம்

இன எழுச்சி: திருப்பத்துரை குலுக்கிய மாபெரும் ஆர்பாட்டம்: " &n..."

திருப்பத்துரை குலுக்கிய மாபெரும் ஆர்பாட்டம்

                             திணறியது   திருப்பத்தூர் !
                             மத்திய அரசின் நுழைவு தேர்வை எதிர்த்து

           மாபெரும் கண்டன ஆர்பாட்டம் !

  500 க்கும் மேற்ப்பட்ட கழக தோழர்கள் கழக கொடிகளை         ஏந்தி உணர்ச்சி முழக்கமிட்டபடி பங்கேற்றனர் .

டிசம்பர் 30
மத்திய அரசின் நுழைவு தேர்வை எதிர்த்து திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடைபெற்றது .இவ் ஆர்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞ்சரணி தலைவர் வி.ஜி.இளங்கோவன் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் முன்னிலை வகித்தார் . 300 க்கும் மேற்ப்பட்ட தோழர்களும் 100 க்கும் மேற்ப்பட்ட மகளிரணியினரும் 100 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்


பெரியார் சிலைக்கு மாலை


முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட இளைஞ்சரணி தலைவர் வி.ஜி.இளங்கோவன் ஒலிமுழக்கங்களுக்கு இடையில் மாலை அணிவித்து  ஆர்பாட்டத்தினை தொடங்கி வைத்தார் .


மாவட்ட மாணவரணி அமைப்பாளர்  எ.சிற்றரசன் கழகத்தால் அனுமதிக்கப் பட்ட முழக்கங்களை முழங்க அனைவரும் கொடிகளை உயர்த்தி உணர்ச்சி முழக்கமிட்டனர் .
ஆர்பாட்ட விளக்க உரை
ஆர்பாட்டத்தினை விளக்கி சுந்திரம்பள்ளி பெரியார் பெருந்தொண்டர் வையாபுரி ,திருப்பத்தூர் தமிழ் சங்க பொறுப்பாளர் சாமி .பிரபாகரன் .,புலவர் அண்ணாமலை ,திருப்பத்தூர் முன்னால் நகர் மன்ற உறுப்பினர் M .N .அன்பழகன் ,விசமங்களம் தி.மு.க பொறுப்பாளர் மணி ,ஊற்றங்கரை நகர திராவிடர் கழக தலைவர் இர.வேங்கடம் ,கிருட்டினகிரி தி.மு.க.மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர் இறுதியாக மாவட்ட தலைவர் கே.கே.சி.எழிலரசன் அவர்கள் ஆர்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி உரையாற்றி முழக்கமிட்டார்
பங்கேற்றோர்
இந் நிகழ்ச்சியில் முன்னால் ரோட்டரி சங்க தலைவர் பரந்தாமன்,தொழிலதிபர்அண்ணா.அருணகிரி ,மாவட்ட இணை செயலாளர் அரங்க .ரவி ,மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் ,மாவட்ட மாவட்ட மகளிரணி தலைவர் அகிலா,செயலாளர் கவிதா ,கே.கே.சி.கமலாஅம்மாள் ,ஆசிரியை அழகுமணி ,இந்திராகாந்தி ,சுப்புலட்சுமி ,மாவட்ட ப.க.தலைவர்  தமிழ்ச்செல்வன் ,மாவட்ட மாணவரணி தலைவர் கமல் ,ஆனந்தன் ,மத்தூர் ஒன்றிய தலைவர் முருகேசன் ,பெரியராணி பயிற்ருனர் திராவிடராசன் ,கட்டரசம்பட்டி குமார் ,ராமச்சந்திரன் ,காவேரி ,முன்னால் மாவட்ட செயலாளர் பழ.பிரபு ,சித.அருள் ,இர .அன்பு .தீ.பொன்னுசாமி ,காளிதாஸ்,கனகராஜ் ,,திருப்பதி,வெற்றிகொண்டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி,, சாமி. அரசிளங்கோ,சி.சாமிநாதன் ,அண்ணா,அப்பாசாமி,துரை,தமிழ்குடிமகன் ,உள்ளிட்ட ஏராளமான திருப்பத்தூர் ,ஜோலார்பேட்டை ,கந்திலி ,ஊற்றங்கரை ,மத்தூர் ஒன்றிய தோழர்கள் பங்கேற்றனர்
திணறிய காவல் துறை
எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருப்பத்தூர் சாலையில் காவல்துறை எதிர்பார்பிற்கும் அதிகமாக தோழர்கள் குவிந்ததால் போக்குவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை திணறியது .கழக தோழர்களின் உணர்சிகரமான முழக்கங்களையும் ,கட்டுபாடுடன் ஆர்பாட்டத்தை நடத்தும் பாங்கினையும் பொது மக்கள் பாராட்டினர்

வெள்ளி, 17 டிசம்பர், 2010

தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம மற்றும் வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா




       
தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம் மற்றும் 
                                    வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா
நாள் ;ஜனவரி 2 ஞாயிற்று கிழமை காலை 10 மணியளவில்
இடம் ;ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடம் ஊற்றங்கரை

வரவேற்புரை ;மானமிகு;சி.சாமிநாதன் துணை தலைவர் விடுதலை வாசகர் வட்டம்

மாத அறிக்கை வாசித்தல்:மானமிகு .அண்ணா.அப்பாசாமி .பொருளாளர் விடுதலை வாசகர் வட்டம்

விழா அறிமுக உரை :மானமிகு .பழ.பிரபு செயலாளர் விடுதலை வாசகர் வட்டம்

தலைமை :மானமிகு ;கே .ஆர்.கே .நரசிம்மன் சட்ட மன்ற உறுப்பினர் பருகூர்

முன்னிலை ;மானமிகு ;ஜெ.எஸ்..ஆறுமுகம் ஊரரட்சிக் குழு தலைவர் ஊற்றங்கரை
மானமிகு .முருகேசன் மாவட்ட கல்வி அதிகாரி (ஓய்வு)
மானமிகு ;வரதராசு தலைமை ஆசிரியர் (ஓய்வு)
மானமிகு பழ.வெங்கடாசலம் மண்டல செயலாளர்
மானமிகு .தணிகை .ஜி.கருணாநிதி மாவட்ட  தி.மு.க.இலக்கிய
அணி செயலாளர்





                        

                  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு  
                    
மானமிகு ;கே.கே.சி எழிலரசன் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்
                                                                                         

                        பாராட்டு பெறுபவர் :                 மானமிகு .வே.சந்திரசேகரன் தாளாளர் வித்யா மந்திர் கல்வி நிறுவனகள்

                        பாராட்டி நினைவு பரிசு வழங்குபவர்கள்
டி.எஸ் .திருநாதன், இரா.வேங்கடம் ,இர,திருநாவுக்கரசு ,சி,என்.சுப்பிரமணி,சு.விவேகானந்தன் ரஜினி சங்கர் ,சரவணன் ,தண்டி.சரவணன்

                        கருத்துரை
          ''நற்றமிழர் வாழ்வில் தை திங்களும் தை புத்தாண்டும் ''
மானமிகு :முனைவர் .துரை.சந்திரசேகரன்

துணை பொது செயலாளர் திராவிடர் கழகம்


விழா தொகுப்பு:மானமிகு;முனி .வெங்கடேசன்

நன்றிஉரை :மானமிகு :கோ புயல் துணை செயலாளர் திராவிடர் கழகம் 
அனைவரும் வருக !
-ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்

வியாழன், 16 டிசம்பர், 2010

திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு வாரீர் என்று அழைக்கவும் வேண்டுமோ!


இயக்க வரலாற்றில் எத்தனையோ மாநாடுகளை நாம் நடத்தியதுண்டு. பிறக்க விருக்கும் 2011ஆம் ஆண்டு சனவரி திங்கள் 7, 8, 9 ஆகிய நாள்களில் திருச்சிராப் பள்ளியில் நடக்க இருக்கும் உலக நாத்திகர் மாநாடு சந்தேகம் இல்லாமல் மிக வித்தியாச மான மாநாடாகும்.
திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து இந்த மூன்று நாள் மாநாடுகளை நடத்துகிறது.
பன்னாட்டு (International) மாநாடு என்பதால் அதற்கேற்ற வசதிகளுடனும், ஏற்பாடுகளுடனும் இந்த மாநாடு நடைபெறப் போகிறது.
இந்தியாவில் மும்பை, விஜயவாடா போன்ற இடங்களில் இதற்கு முன் நடந்த துண்டு. இங்கிலாந்தைச் சேர்ந்த பார்பரா ஸ்மோக்கர் என்ற அம்மையார் குறிப்பிட்டது போல உலக நாத்திக அமைப்புகளின் தலைமையிடம் தந்தை பெரியார் பிறந்த - திராவிடர் கழகம் செயல்படும் தமிழ்நாடு தானே!
தமிழ்நாட்டில் நடக்காமல் வேறு எந்த நாட்டில் நடந்தாலும், அதன் உண்மைத் தன்மை பொலிவு பெறாதே!
கடந்த ஓராண்டு காலமாகத் தொடர்பு கொண்டும் திட்டமிட்டும் பணிகள் அமைதி யாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
உலக நாத்திக, மனித நேய அமைப்புடன் (IHEU - International Humanist and Ethical Union) திராவிடர் கழகம் இணைக் கப்பட்டுள்ளது (Affiliated).
இந்த அமைப்பு நடத்திய பல மாநாடுகளில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்றதுண்டு.
தமிழ்நாட்டில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் நடத்திய பல்வேறு மாநாடுகளில் வெளிநாட்டுப் பகுத்தறி வாளர்கள், உலக நாத்திக மய்யத்தைச் சேர்ந்தவர்கள் பங்கு கொண்டுள்ளனர்.
நாத்திக இயக்கம் மக்கள் இயக்கமாக நடைபெறுவது தமிழ்நாட்டில்தான் - தந்தை பெரியார் அவர்களே இதற்கு மூலகாரணம். தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப் பட்ட திராவிடர் கழகம் பெரியார் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் முழு மூச்சாகச் செயல்பட்டுக் கொண்டு இருப்பதை நேரில் பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர்.
பொது இடங்களில் கடவுள் மறுப்பு வாசகக் கல்வெட்டுகளையும், தந்தை பெரியார் சிலைகளையும் கண்டு ஆச்சரியக் குறியாக நின்றார்கள்.
வரும் சனவரியில் நடப்பதோ முழுக்க முழுக்க அவர்களின் மனித நேய அமைப்பின் (IHEU) அனுமதியோடு, அங்கீகாரத்தோடு நடக்க இருப்பதால், அதன் தன்மை பல வகைகளிலும் புதுமையான, பொருள்மிக்க நிகழ்ச்சி நிரலுடன (Agenda) அமையும்.
அதே நேரத்தில் நமது தனித் தன்மைகள் மிடுக்காக ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.
திருச்சி மாநாகரிலும், வல்லம் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்), திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களிலும் நிகழ்ச்சி கள் மாறிமாறி நடக்கும்.
மனித நேய அமைப்புகளின் முன்னாள் தலைவர் லெவி ஃபிராகல் (நார்வே), பெக்கா எலோ (பின்லாந்து), ராய் பிரவுன் (சுவிட் சர்லாந்து) போன்ற உலகம் அறிந்த நாத்திக அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் கலந்து கொள்கின்றனர்.
அறிவியல் கண்காட்சி, புத்தகக் கண் காட்சிகள் இடம் பெறும். திருச்சியில் எழுச்சி மிக்க மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் உன்னதமாக இருக்கப் போகிறது.
இரண்டாம் நாள் பேரணி முடிந்த நிலையில், திருச்சியில் உழவர் சந்தையில் பல லட்ச மக்கள் கூடுவர் என்று எதிர்பார்க்கும் பொது மாநாடு நடைபெற உள்ளது. வெளிநாட்டு அறிஞர்களுடன், கலைஞானி கமலகாசன், நாத்திக நன்னெறிச் செம்மல் இனமுரசு சத்யராஜ் போன்றவர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல துறைகள், அமைப்புகளைச் சார்ந்த வெளிப்படையான பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், பேராசிரி யர்கள் கருத்துகளை வழங்கிடக் காத்திருக் கின்றனர்.
மூன்று நாள் மாநாடுகளிலும் திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு முத்திரை பொறிக்க உள்ளார்.
மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று தந்தை பெரியார் பற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 52 ஆண்டுகளுக்கு முன் தொலைநோக்கோடு பாடினார்.
அந்த உண்மையின் வீச்சை விரிவாக உலக நாத்திகப் பேரறிஞர்கள் நேரில் காணவிருக்கின்றனர்.
கழகக் குடும்பத்தினரே,
பகுத்தறிவாளர்த் தோழர்களே!
இந்த வாய்ப்பை நாம் நழுவவிடலாமா?
இத்தகைய உலக மாநாட்டை நம் வாழ்வில் வேறு எப்பொழுதுதான் காணப்போகிறோம்? நம் காலத்தில் கணீர்என ஒலித்து நடை போடும் இந்த மாநாட்டில் நாம் நடைபோட வேண்டாமா? நம் பிள்ளைகள் பார்த்துக் களிக்க வேண்டாமா?
பல மாதங்களுக்கு முன்பே இம்மாநாட்டிற் கான அறிவிப்புக் கொடுத்தாகிவிட்டது. உங்கள் பயணத்தை நீங்கள் உறுதியாக முடிவு செய்திருப்பீர்கள் அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.
பெரியார் தமிழர் மண்ணில் போட்ட விதை உலகம் பூராவும் பூத்துக் குலுங்குகிறதே என்று மூடநம்பிக்கையின் மொத்த வியாபாரிகள் புழுங்கத்தான் செய்வார்கள்.
புரியாமல் மூளை மூடிக்கிடந்தவர்களின் முகத்தில் பகுத்தறிவு வெளிச்சம் பாய்ந்து, புது மனிதர்களாகப் புன்னகைத்து மலரும் வாய்ப்புக் கூட உண்டு. எனவே அரை குறையாக இருப்பவர்களைக் கூட கைபிடித்து அழைத்து வாருங்கள் - இது ஒரு மனிதத் தொண்டு என்பதை மறவாதீர்கள்!
விஷயங்களால்தான் மனிதன் அறிவு பெற முடியுமே தவிர, விஷயங்களே காதிற்கு எட்டாமல் செய்துவிட்டால் எப்படி மனிதன் அறிவாளியாக முடியும்? அதைத் தான் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்து வருகின்றன (விடுதலை, 14.7.1970)
என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.
விஷயங்களைத் தெரிந்து கொள்ள, விஷயங்களை விளங்க வைக்க உற்றா ரோடும், உறவினரோடும், நண்பர்களுடனும் குடும்பம் குடும்பமாக முற்றுகையிடுவோம், வாரீர்! வாரீர்!!

புதன், 1 டிசம்பர், 2010

எங்கள் தலைவர் வீரமணி வாழ்க !வாழ்கவே !

ஒரே தலைவர் ஒரே கொள்கை ஒரே கொடி
68 ஆண்டுகள்
அனுபவப் புன்னகை - அந்தக்
கொள்கை மறவருக்கோ
அகவை - 78

யாருக்கும்
ஏற்படும்
அதிசயப் புன்னகை

பொன்
வண்ணத்
தலைவருக்கா
இத்தனை வயது...?


கேள்விக் குறிகள்
மக்கள்
மனதில்
வியப்புக் குறிகளாய்
எழுகின்றன

அவர்கள்
அவர்களாகவே
பேசும் மொழி

தலைவரைத்
தொலைக்காட்சிகளில்
பார்த்தேன்

வாழ்விணையர்
விழாவிலும்
பார்த்தேன்

நேரிலும் பார்த்தேன்

என்னமாய்த்
தோற்றப் பொலிவு

மல்லிகைப் புன்சிரிப்பு

அலைபாய்கிற
கம்பீரம்

அதே
இனிய குரல்

வாதப் பிரதிவாத
சொற்போர்

அய்யா
பெரியாரை
அடிக்கடி
நினைவூட்டும்
கூர்வாள்

வேகத் தடைகளையும்
தாண்டி ஓடுகிற
எந்திர நடை

உண்மையை
யார், மறுப்பது...?

தமிழர்
உள்ளங்களில்
உள்ளபடி - அவர்

உள்ளங்கை
நெல்லிக் கனி.

பெரியாரை
வரிவிடாது
வாசிப்பதும்
வளர்ப்பதுமே - இவர்

இளமைக்கு இரகசியம்.
இவர் ஆற்றும் பணி
பெரியாரை
உலகு தொழ, முக்கியம்!

தலைவர்
வீரமணியின்
பரிமாணங்கள்
தமிழர்கள்
காக்கவேண்டிய, சரித்திரம்

இவருக்கு
இந்தியன் பீனல் கோட்
தெரியும்.

யூனிகோடும்
தெரியும்.

இவர்
விழித்திருக்கிறபோது
தமிழை
தமிழனை
எவனால் அழித்துவிட முடியும்?

தொலைநோக்குப்
பார்வை
அறிவியல் நோக்கு
எந்நேரமும்
தமிழ்
தமிழரைப் பற்றிய
சிந்தனை

யூனிகோட்
மூலம்
தமிழில்
கிரந்த எழுத்தா...?

யாரவன்
சிறீரமண சர்மா...?

வெகுண்டெழுந்த
இனத் தலைவர்
முறையிட்டார்; முதல்வரிடம்!

முதல்வரும்
முறைப்படி விரைவாகச் செயல்பட்டார்.

செந்தமிழை
அழிக்க
ஆரியர் செய்த
சூழ்ச்சி
தமிழர்தலைவர் தம்
முயற்சியால், முறிந்தது.

உலகத்
தமிழரெல்லாம்
இன்று கொண்டாடும்
ஒற்றைத் தமிழர்- நம்
தமிழர் தலைவர்

தமிழுக்கு
தமிழருக்கு
இடர்வரின்
வருமுன் காப்பார்.

ஆரிய
ஆழிப் பேரலை
அபாயத்திலிருந்து
தமிழை, மீட்டவர்

உலகம் கொண்டாடுகிறது
இவர்தாம்
தமிழர் தலைவர்...!

இவர்
வாழ்க
 பல நூறாண்டுகள்...!



 -வழக்கறிஞர் மகேந்திரன் 

புதன், 3 நவம்பர், 2010

தீபாவளி வணிகம்

தீபாவளி வணிகம்

பேராசிரியர் மு. நாகநாதன் எம்.ஏ.எம்.எல்.பிஎச்.டி.டி.லிட்.
துணைத் தலைவர் மாநிலத் திட்டக்குழு

அறிவுக்கும், பொருளுக்கும் எப்படி எல்லாம் இழப்பு இந்தத் தீபாவளியால் ஏற்படுத்தினர் என்பதைப் பொருளாதாரப் பேராசிரியரான டாக்டர் மு. நாகநாதன் விளக்கியுள்ளார்.

மக்களைப் போதையில் வீழ்த்துவது-தான் மதம் என்பதை காரல் மார்க்சு 1844ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டார். போதைப் பொருள் உண்பதால் நோய்கள்தான் உண்டாகும். மதம் என்னும் போதையால் நமது நாட்டில் உருவான நோய்கள் பல. அந்த நோய்களில் அதிகச் செலவினை மக்களுக்கு ஏற்படுத்தும் முதன்மையான நோய் தீபாவளியாகும். பாரப்பனரகள் புகுத்திய சமுதாய நோயான தீபாவளி என்ற சொல்லே சமஸ்கிருதச் சொல்-லாகும். தீபாவளியின் அடிப்படை எங்கிருந்து புறப்பட்டது என்பதை ஆய்ந்து பார்த்தால் பல உண்மைகள் வெளிப்படும்.

சமண மதத்தில் இருந்து திருடப்பட்டு கருத்துத் திரிபு செய்த ஒரு புனைந்துரைதான் தீபாவளி. 2500 ஆண்டுகளுக்கு முன்பு சமண முனிவரான வர்த்தமானர் என்று-அழைக்கப்படுகிற மகாவீரர் 72 ஆண்டு-கள் வாழ்ந்தவர். ஒரு ஆசிரியர் நிலையில் தமது கொள்கைகளை மக்களிடம் 30 ஆண்டுகள் எடுத்துக் கூறினார். வர்த்த-மானர் சொற்பொழிவு ஆற்றிக்-கொண்டிருக்கும் போது விடியற்-காலையில் சொற்பொழிவு மேடை-யிலேயே இறந்து விட்டார். இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் ஒளி விளக்குகளை வரிசையாக ஏற்றி சமணர்கள் விழா எடுக்கின்றனர்.

கடவுள் இல்லை என்று முதன்முதலில் உலகிற்குக் கூறிய சிறந்த பகுத்தறி-வாளரான மகாவீரரின் நினைவு நாளைத் திசை திருப்பி பொய்யுரை-களை புனைந்து தீபாவளியை இந்து மதத்தோடு பார்ப்பனர்கள் இணைத்-தார்கள். ஆனால், தீபாவளி என்ற சொல்லுக்கு சமஸ்கிருத மொழி அளிக்கும் விளக்கம் விளக்குகளின் வரிசை என்பதாகும். இந்தக் கூற்றினை இன்றளவும் அவர்களால் மறுக்க முடிய-வில்லை. சமஸ்கிருதச் சொல் அகராதி இந்த விளக்கத்தைச் சான்று பகர்-கின்றது. தீபாவளிக்கு இரண்டாவது விளக்கமும் ஒன்று உண்டு. 17ஆம் நூற்றாண்டில் மொகலாய மன்னர் ஜகாங்கீர் ஆட்சிக்காலத்தில் இந்தியக் குறுநில மன்னர்கள் கைது செய்-யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்-தார்கள். பத்தாவது சீக்கீய மத குருவான குரு கோபிந்த சிங் இம்மன்னர்களை விடுதலை செய்து அமிர்தசரசு நகருக்குத் திரும்பிய நிகழ்வை நினைவு கொள்ளும் வகையில்,

சீக்கியர்களால் தீபாவளி இன்றும் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் சீக்கிய மக்கள் மெழுகுவத்தியையும் விளக்குகளையும் ஏற்றி விழாக் கொண்டாடுகிறார்கள்.

ஆரியர்கள் திராவிடர்களை வென்று உயர்ந்துவிட்டார்கள் என்று ஜாதி ஆணவத்தைக் காட்டுவதற்காகவும் திராவிடர்களை இழிவுப்படுத்துவ-தற்காகவும் புனைந்துரைக்கப்பட்ட பல கதைகளில் தீபாவளியும் ஒன்றாகும். இந்தக் கட்டுக்கதைகூட ஆரியர்களின் சொந்த மூளையிலிருந்து உதிக்கவில்லை. மேற்கூறிய சமண சீக்கியத்தின் நிகழ்வுகள் தீபாவளியின் உண்மையான தோற்றத்தைப் பறைசாற்றுகின்றன.

எனவேதான் தந்தை பெரியார் 1929ஆம் ஆண்டிலேயே ஈரோட்டில் உண்மை நாடுவோர் சங்கத்தில் ஆற்றிய சொற்பொழிவில் தீபாவளியின் திருட்டுத்தனத்தை _ ஆபாசத்தை எடுத்துக் கூறினார். விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்ட-வனான நரகாசுரன் என்பவன் வருண-னுடைய குடையைப் பிடுங்கிக்-கொண்-டதால் விஷ்ணு கடவுள் நரகாசுரனைக் கொன்றானாம். இதைக் கொண்டாடு-வதற்காக இத்தீபாவளிப் பண்டிகை கொண்டாடுகிறோம். இதில் ஏதாவது புத்தி உள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதை எண்ணிப் பாருங்கள் என்று தீபாவளிப் பண்டி-கையின் ஆபாசத்தைத் தோலுரித்துக் காட்டினார். காலந்தோறும் பொய்களை விற்றே வயிறு வளர்த்த பார்ப்பனியம் தீபாவளியில் இராமனையும் புகுத்த தவறவில்லை.

இலங்கையை ஆண்ட இராவணனைத் தோற்கடித்து அயோத்திக்குத் திரும்பிய நிகழ்வைப் போற்றும் விழா தீபாவளி என்றும் ஒரு கதையைக் கட்டினார்கள். இவ்வாறாகத்-தான் தீபாவளி நமது சமூக அமைப்பில் பொய்யாகப் புகுத்தப்பட்டது. ஒரு நிலையில் திராவிட ஆரியப் போராட்-டத்தின் எதிரொலியாகவும் தீபாவளி அமைகிறது. திராவிடர்கள் இந்த மண்ணிற்கு உரிமையானவர்கள். தொன்மையான நாகரிகத்தை உலகில் உருவாக்கியவர்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகர வாழக்கையை மேற்கொண்ட-வர்கள் என்பதற்கு ஆதித்தநல்லூர் அரிக்காமேடு, மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற அகழ்வாராய்ச்சிகள் உலகிற்கு உண்மையை எடுத்துரைக்-கின்றன. பன்னாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்று இயல் அறிஞர்களும் தற்போது அறிவியல் தடயங்கள் வழியாக ஆய்ந்து. திராவிட எழுத்துகளின் வரி வடிவங்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலும் தொன்மையா-னது என்று ஆய்வுக்கருத்துகளைச் சுட்டுகின்றனர்.

உண்மை இவ்வாறிருக்க பொய் போற்றப்படுகிறது. எந்தக் கல்-வெட்டிலும் தீபாவளி என்ற சொல்லோ அல்லது விழாவோ இருந்ததாகச் சான்றுகள் ஏதுமில்லை. திராவிட நாகரிகத்திலிருந்து மொழி, கலை, பண்பாட்டுக் கூறுகளைத் திருடியும் திருத்தியும் சமஸ்கிருத மொழியில் ஆரியம் அடிக்கும் அளவிறந்த கொட்-டங்கள் பலப்பல. இதில் ஒன்றுதான் தீபாவளி. இதைத் தமிழர்கள் உணர-வில்லை. ஆரியப் பண்டிகைக்குத் தங்-களுடைய செல்வத்தையும் சேமிப்பையும் செலவிட்டு பொருளாதார இழப்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். பட்டுத் துணி, பட்டாசு என்று செலவிட்டு, அறிவு வளர்ச்சிக்குத் தேவையான நூல்கள், கணினிகள் தமிழர்கள் வாங்குவதில்லை.

காசைக் கரியாக்கி சுற்றுச்சூழலையும் கெடுக்கும் இந்தக் கொடுஞ் செயல் இன்றும் தொடர்கிறது. கல்வி வளர்ச்சியும், அறிவியல் கண்டுபிடிப்புகளும், தகவல் தொழில்-நுட்பப்புரட்சியும் வளர்ந்து வரும் இக்காலத்திலும் மூடநம்பிக்கையையும் முட்டாள்தனத்தையும் தொலைக்காட்சி தொடங்கி ஏடுகள்வரை தீபாவளியின் புகழ் பாடுகின்றன. பொருளாதாரம் என்றால் என்ன என்பதை விளக்கும் பல கோட்பாடுகள் உள்ளன. பொருளாதாரம் என்பது குறைத்துச் செலவிடுவதுதல்ல; அறி-வுடன் செலவை மேற்கொள்வது-தான் (Economy is not less spending but wise spendint) என்ற ஒரு விளக்கமும் உண்டு. இந்த விளக்கத்தை அறிந்த-வர்கள் புரிந்தவர்கள் தீபாவளியைப் புறக்கணிப்பார்கள்.

பொருளாதாரக் காரணங்களை எடுத்துக்கூறி தந்தை பெரியார் 1931ஆம் ஆண்டில் தீபாவ-ளியைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தந்தை பெரியார் துணி, பலகாரங்கள், பட்டாசு, மது வகைகள் ஆகியவற்றில் பணத்தை ஏழை மக்கள் செலவிடுகிறார்கள் என்று கவலையைத் தெரிவித்துக் கண்டனம் தெரிவித்தார். இந்து சமயம் நெறி சார்ந்ததல்ல. அது ஒரு வணிகம். அதுவும் பார்ப்பனர்கள் புகுத்திய தொழில் வணிகம் என்பதை பல ஆய்-வாளர்கள் இன்று எடுத்துரைக்கின்-றார்கள். இவ்வரிசையில் இந்து சமய சந்தையைப்பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை (Exploring the Market of Hindu Religion) இணையதளத்தில் இடம் பெற்-றுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பணியாற்றும் பொருளாதார ஆய்வாளர்-களான இ`தா தத்தா ராய் துகின், கே.தாஸ் ஆகியோர் இணைந்து இக்கட்டுரையை எழுதியுள்ளார்கள். பெருகி வரும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களாலும் அங்கு சென்று வழிபடும் பக்தர்களாலும் ஏற்படும் பொருளாதார நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஆய்வு மேற்கொண்டு புள்ளி-விவரங்களைத் திரட்டி சில கருத்துகளை வெளியிட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. காளி பூசைதான் இம்மாநிலத்தின் பெரும் விழாவாகக் கொண்டாடப்-படுகிறது என்றும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மத்தியில் கோயில்களுக்குள் ஒரு போட்டிச் சந்தை உருவாகி வருவதாக இவ்வாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அரசர்கள், பணக்-காரர்கள் கட்டிய கோயில்களுக்கும் அந்தந்த வட்டார எல்லைக்குள் உரு-வான கோயில்களுக்கும் நடைபாதையில் உருவான கோயில்களுக்கும் கடும் சந்தைப்போட்டி நடைபெறுகிறது என்று குறிப்பிடுகிறார்கள. இருப்பினும் மத விழாக்களால் கோயில்களால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. மதம் வணிகமாகிறது என்பதுதான் இக்கட்டுரையின் முடிவாகும். தீபாவளி-யும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஒரு வணிக மோசடி!

துணி, நகை, பட்டாசு, செருப்புக் கடைகளில் சிறப்புத் தள்ளுபடிகள் என்று தமிழ்நாட்டிலும் தீபாவளி ஒரு வணிக மோசடியாகவே மாறி வருகிறது. தீபாவளி மலர் வெளியிடும் பார்ப்பன ஏடுகளில் வணிகப் போட்டிக்காக கடவுள்களின் படங்களைவிட நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள்தான் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. தீபாவளி தன் தடம் மாறி சாதாரண மக்களின் பணத்தைப் பறிக்கும் வணிகமாக மாறிவிட்டது. எனவேதான் அறிஞர் அம்பேத்கர் அவர்கள் இந்து மதத்தின் புதிர்கள் என்ற நூலில் இந்து மதத்தின் மோசடிகளை ஆணித்தர-மாகச் சுட்டியுள்ளார்.

இந்த நூலுக்கு இன்று வரை யாராலும் சான்றுகளுடன் மறுப்புக் கூற முடியவில்லை. இந்நூலின் முன்னுரையில் பார்ப்பனர்களின் வணிகம்தான் இந்து மதம் எனறு அறிஞர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். மேலும், மும்பைக்கு அருகே உள்ள கல்யாண் என்ற இடத்தில் மலையின் உச்சியில் புகழ் மிக்க இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலமான தர்கா அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த இடத்திற்கு இசுலாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள். காணிக்-கைகளை செலுத்துவார்கள். இந்த தரகாவில் இசுலாமியர்களின் உடை-களை அணிந்துகொண்டு மதச் சடங்கு-களைச் செய்து பணத்தைப் பெறுபவர் ஒரு பாரப்பனர். பணத்திற்காகதான் இந்த பணியை மேற்கொள்கிறார்.

மதமோ மதம் அல்லாததோ,. பார்ப்-பானுக்குத் தேவையானது தட்சணை-தான். பார்ப்பனர்கள் மதத்தை ஒரு வணிகமாகவும் வர்த்தகமாகவும் மாற்றிவிட்டார்கள் (The person in Kalyan near Bombay there is a famous Darga of Pir called Bawa Malangsha on the top of a hill. It is a very famous Darga. Every year a Urs (pilgrimages) is held and offerings are made. The person who officiates at the Darga as a priest is a Brahmin, sitting neat it, wearing the clothes of muslims and receiving monies offered at the Darga. This he did for the sake of money. Religion or no religion what the Brahmin wants is Dakshina. Indeed the Brahmins have made religion a matter of trade and commerce.) என்று அறிஞர் அம்பேத்கர் உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.

தீபாவளியும் இந்து மத வணிகம்-தானே. மேலும், தமிழர்களை, திராவி-டர்களை இழிவுபடுத்தும் ஆண்டு-தோறும் நிகழும் ஒரு சடங்குதானே. பட்டாசுத் தொழிற்சாலைகளில் தீ விபத்துகள், மீண்டும் மீண்டும் உயிரி-ழப்புகள், தீபாவளிக்கு முன்பும் பின்பும் பல விபத்துகள் இந்தச் சடங்கை-யொட்டித் தொடர்கின்றன. தீபாவளி முடிந்தவுடன் பட்டாசு வெடிப்பால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

காவல் துறைக்குத் தலைவலி. அரசிற்கோ பொருளிழப்பு. காரணம், தீபாவளியை ஒட்டி நடக்கும் இந்த வணிகத்திற்கு வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் காவல் துறை தேவைப்படுகிறது. கூட்ட நெரிசலில் களவும் பொருளிழப்பும் காவல் துறை இருந்தும் தடுக்க முடியவில்லை. பட்டாசுச் சத்தம் பிறந்த குழந்தைகள், முதியோர். நோயுற்றோரின் அமை-தியைக் கெடுக்கின்றன. பட்டாசால் வெளியிடப்படுகிற புகை அமிலங்கள் ஏற்கெனவே உயர்ந்து வரும் காற்றின் மாசு அளவைப் பெருக்குகின்றன.

சமூகத்தின் அனைத்து மக்களின் நலன்-களையும் பொருளாதார இழப்புகளை-யும் ஏற்படுத்துகிற தீபாவளியால் யாருக்குப் பயன்? தீபாவளி, ஏழை நடுத்தரக் குடும்பங்களின் தேவையற்ற செலவினைப் பெருக்கி கடனாளியாக்-குகிறது. மூடநம்பிக்கைகளை வளர்க்-கிறது. ஆரியத்தை உயர்த்துகிறது. திராவிடரை இழிவுபடுத்துகிறது. மக்களுக்கு பொருளாதார இழப்பினை ஏற்படுத்தி இடர்களை உருவாக்கி வருகின்ற ஒழிக்கப்படவேண்டிய சமுதாய நோய்களில் ஒன்றுதான் தீபாவளியாகும்.

செவ்வாய், 2 நவம்பர், 2010

சூரியனை அணைக்கின்ற காற்று உண்டா ?

பெரியவராய் நான் ஏற்று மதிப்ப தெல்லாம்
        பெரியாரை மட்டும் தான் .பிறரோ  இங்கு
பெரியவரைய்த் தெரிகின்றார் உருவத்  தாலே ;
       சிரியவராய்த் தெரிகின்றார்  நடத்தை  யாலே .
வரிபுலி போல் நடமாடி கொள்கை  யோடு
      விடபிடியாய்  வாழ்ந்தவரே பெரியார் .இங்கே
சரிநிகர் எவருண்டு அவரை போலே ?
      சூரியனை அணைக்கின்ற காற்று உண்டா ?

நாத்திகனாய் நான் வாழ்ந்து வருவதாலே
     மண் வெறியோ  ,மொழி வெறியோ  எனக்கு இல்லை
 காத்திருந்து பிறர்மீது பதுங்கி பாயும்
      சாதிவெறி சமயவெறி என்றும் இல்லை
சாத்திரத்தை நம்பியவர் கெட்ட துண்டு
     சரித்திரத்தை நம்பியவர் கெட்ட தில்லை
ஆத்திரத்தை வளர்ப்பதுதான் தீயோர் பாதை
     பகுத்தறிவை  வளர்ப்பது தான்  நல்லோர்  பாதை

கற்பனையின் விளைவே தான் மூடபக்தி
      கட்டுக்கதை  வடிவம்தான் புராணமெல்லாம்
கற்பனையில் பொய் வளரும் .குனிந்து நிற்கும்
     தலை நிமிர ஒரு  போதும் வாய்பு இல்லை
கற்பனையால் திராவிடர்கள் அசுர  ரானார்
      அன்னியராம்  ஆரியரோ தேவ  ரானார்
நற்பயனே இலக்கியத்தில் தேவை .என்றும்
    நன்மை தரும் சிந்தனையே நமக்கு தேவை

-----------''கவிதை         துறைமுகம் சுரதா '' நுலில்
                                                                     கவிஞர் .சாகுல் அமித்

சனி, 30 அக்டோபர், 2010

திராவிடர்கழக தலைமையை தலைமுறைதலைமுறையாக நேசிக்கும் பார்ப்பன குடும்பம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேடையில் நடேச அய்யர் என்பவர் இருந்தார் .அவர் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்தார் .அந்த ஊரில் ''அய்யர் ஓட்டல் ''என்றால் மிக பிரபலம் .கடந்த 5 ஆண்டுக்கு முன்னர் வரை அந்த ஓட்டல் மிக சிறப்பாக இயங்கி வந்தது .தந்தை பெரியார் எப்போது அவ் வழியே   வந்தாலும் ,அல்லது திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும்போதும் நடேச அய்யர் அய்யாவை சந்திப்பார் அல்லது அய்யா நடேச அய்யரை சந்திப்பார் .எப்போதும் சிங்காரபேடையில் அய்யாவுக்கு அவர் ஓட்டலில் தான் உணவு .
அய்யா மறைவுக்கு பின்னர் ஆசிரியர் தலைமை பொறுப்பு ஏற்ற பின்னும் உறவு இன்னும் வலுவாக தொடர்ந்தது .ஆசிரியர் வீரமணி கழக நிகழ்சிகள் ,மண விழா,பொது நிகழ்வுகள் என்று அந்த பகுதிக்கு எப்போது வந்தாலும் பழம் ,நெய் ,பலகாரம் ஆகியன கொண்டு வந்து கொடுத்து அன்பை பரிமாறி செல்வர் .1999 ஆம் ஆண்டு நடேச அய்யர் மறைவுற்றார் .தகவல் அறிந்த ஆசிரியர் வீரமணி சமூகநீதி பிரச்சார பயணம் மேற்கொண்ட போது சிங்காரபேட்டை வந்த போது நடேச அய்யர் இல்லத்திற்கே சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் .
                நடேச அய்யர் மறைவுக்கு பின்னர் அவரது மகன் தண்டபாணி அதே முறையை பின் பற்றி வருகிறார் .திராவிடர் கழக தோழர்களும் அப் பகுதிக்கு ஆசிரியர் வருகிறார் என்றால் அவர்களுக்கு தகவல் தெரிவித்து விடுகின்றனர்

            அண்மையில் நடைபெற்ற திருப்பத்தூர் திராவிடர் எழுச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த ஆசிரியர் வீரமணியை சுண்டல் ,பழம், நெய்யுடன்  மாவட்ட தலைவர் எழிலரசன் இல்லத்தில் சந்தித்தார் தண்டபாணி .இருவரும் அன்பை பரிமாறி கொண்ட காட்சியை புதிதாக காணும் தோழர்கள் சிலர் ஆச்சிரியப்பட்டு போனார்கள் .இது தலைமுறைகளை தாண்டிய நட்பு ,இங்கு தான் மனித நேயம் பூத்து குழுங்குவதை காண முடியும் !

புதன், 27 அக்டோபர், 2010

தீபாவளி தேவையா ?தமிழர்களே சிந்திபீர் !

தீபாவளி தேவையா ?தமிழர்களே சிந்திபீர் !

தீபாவளி, தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும். பார்ப்பனீயத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. இந்தியாவில் கேரளா போன்ற மாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை .தீபாவளியைக் குறிக்கும் வெடி, அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ் நாட்டிற்கு 15ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை . விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளி) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை ஆனாலும் தீபாவளியை ஏன் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது .
உள்ளபடியே தீபாவளி பண்டிகை ஓர்
பொருளாதாரப் பேரழிவு!
சுற்றுச்சூழல் சீர்கேடு!
சுகாதாரக் கேடு! உயிர்ப்பலி!
ஆரிய ஆபாசப் பண்டிகை!
தீபாவளியைப் பற்றி பல கதைகள் உண்டு. வடநாட்டவரைப் பொறுத்தளவில் (குஜராத்திகள், மார்வாரிகள்) தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள். அவர்களது புத்தாண்டின் தொடக்க நாள். வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள். வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்குரிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். இன்னும் சில இனத்தவருக்கு தீபாவளி நாள் இராமன் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள். தமிழர்களைப் பொறுத்தளவில் தீபாவளி நாள் நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள்.
தீபாவளி கொண்டடப்படுவதற்கு பல கதைகள் உண்டு .புராணப்படி 
ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.தேவர்களின் முறையீட்டின்மீது மகா-விஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமி-யுடன் கலவி செய்தது. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.  விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்-தார்கள்.இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்(?!).இது ஒரு கதை .
இதை ஆராய்வோம்பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்த-போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டி-னால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?இப் பண்டிகை கொண்டாடும் யாராவது இதை பற்றி சிந்திகிறர்களா?
மற்றொரு புராண கதை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்  !
நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான். அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார்.
ஆனால் நரகாசுரனை கொல்வது திருமாலுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் நரகாசுரமன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான். உடனே காத்தல் கடவுளான திருமால் பெரிய சதித் திட்டம் தீட்டுகிறார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே திருமால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார். உண்மையில் அப்படி அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. எல்லாம் நடிப்பு. இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து திருமாலின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறார்.
உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறார். ”எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்”" என்கிறான் நரகாசுரன்.இப்படி பல விதமான கதைகள் அடிப்படையில் தேவர் -அசுரர் போராட்டத்தில் தேவர்களின் வெற்றி பெற்றதை குறிக்கும் நாள் தான் தீபாவளி .
நரகாசுரன் ஒரு திராவிட அரசனாகவும் திராவிடத்தை (வங்கத்தை)ச் சேர்ந்த ஒரு பிராகஜோதிஷம் என்னும் நகரை ஆண்டவனாகவும் அதே புராணங்களில் காணப்படுகின்றான். கதை எப்படியிருப்பினும், இவனும் - நரகாசுரனும், இரண்யாட்சன், இரண்யன், இராவணன், சூரபதுமன் முதலிய திராவிடர் தலைவர்களோடு ஒருவனாக மதிக்கப்பட வேண்டியவன் ஆவான். இவன் தன்னைப் பெற்ற தகப்பனால், தாயால் கொல்லப்பட்டதாகக் கதை கூறுகிறது. காரணம் தேவர் களுக்குத் தொல்லை கொடுத்ததால் என்கிறது புராணம்.
''இன்று நாம் (திராவிடர்கள் - தமிழர்கள்) இரண்யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கின்றோமோ அது போலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட நம் தலைவனை தேவர் கூட்டம் கொன்றதற்கு நாம் துக்கப்பட வேண்டுமே ஒழிய மகிழ்ச்சியடைவது மடமையும் இழிவும், மான ஈனமுமாகும்.''என்கிறார் அறிவாசான் பெரியார் .
 “தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று”"
என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய ‘தமிழர் சமயம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
“தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை”" எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாமெழுதிய “மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு”" என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.“தீபாவளி சமணசமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால தினமே தீபாவளியாகும். தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை” (தீபம் – விளக்கு, ஆவலி – வரிசை )
என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்”" என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
“ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி”
என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தான் எழுதிய “தமிழர் மதம்”" என்ற நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர் -“ஆரியரின் இந்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன்-இராவணனன் மதலான நிகரற்த தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்”
(வேளாளர் நாகரிகம் – பக்கம் 60).என்கிறார்

இவர்கள் எல்லோரையும் விட இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தரே சொல்லி இருக்கிறார் '' தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.''
(இராமாயணச் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் 587-589)என்று .எதிரியே இறந்தாலும் அவன் மரணத்திற்காக வருத்தப்படுவது தான் திராவிடர்  பண்பு மகிழ்ச்சி அடைந்து கொண்டாடுவது ஆரிய குணம் !இதை அறியா தமிழர்கள் பண்டிகை கொண்டடுகிறர்களே? என்ன சொல்வது !

சுற்றுசுழல் கேடு 

                  
             இப் பண்டிகை அறிவுக்கு பொருந்தாதது மட்டும் அல்ல சுற்றுசூழலுக்கும் கேடு விளைவிக்கிறது .பண்டிகையின் போது வெடிக்படும் பட்டாசுகளால் ஒலி ,காற்று,நீர் ஆகியன மாசுபடுகிறது .புவியும் வெப்பமடைகிறது
பட்டாசுகளில் காரீயம் (lead ),மக்னிசியம ,துத்தநாகம் ,சோடியம் ,பொட்டசியம,செம்பு ,காட்மியம், பாஸ்பரஸ் (PO4 ),சல்பர்,நைட்ரைட் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் தன்மை உடைய ,எரித்தால் மனிதர் உடலுக்கு கேடு செய்யும் புகையை தரும் இராசயனகள் பட்டாசுகளில் கலக்கப் படுகின்றன

ஒலி மாசு 

                  
 சராசரி ஒலி கேட்பு திறன் 60 dB.இன்னும் ஒரு 10db அதிகரிப்பதாக :ஒலி மாசுகொண்டால் ஒலி அளவு இரு மடங்கு தீவிரப்படுத்தப்படும் .ஆனால் பெரும்பான்மையான பட்டாசுகள் 80db ஒலி எழுப்பும் தன்மை கொண்டதாக இருக்கிறது .அதிகமான ஒலி ,ஒலி கேட்பு திறனை குறைப்பதுடன் மாரடைப்பு ,இரத்தக்கொதிப்பு ,தூக்கமின்மையை உருவாக்குகிறது
ளினால் ஏற்படும் மாசினால் கண் .மூக்கு,தொண்டை பிரச்சனைகள் ஏற்படுகின்றன காற்றில் கரைந்துள்ள துகள்களின் அளவு 100 ppm அளவிற்கு தாண்டும் போது
                    

காற்று மாசுபடுதல் 

                    
                    தீபாவளி பண்டிகையில் வெடிக்கப்படும் பட்டசுக
தலைவலி ,மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுகிறன சல்பர் டை ஆக்சைடு எளிதில் காற்றில் கரைந்து நுரையீரலை தாக்கி மூச்சு குழல் சம்பந்த பட்ட வியாதிகளை உருவாக்குகிறது . நைட்ரஜன் டை ஆக்சை டு காற்றில் கரைந்து சளி ,ஆஸ்த்மா போன்ற வியாதிகளை உருவாக்குகிறது

குழந்தை தொழிலாளர்களின் குருதியில் நடக்கும் பண்டிகை 

சிவகாசியில் சிறிதும் பெரிதுமாக சுமார் 500 பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த 500 தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் மட்டும் சுமார் 20,000 முதல் 40,000 வரை இருக்ககூடும் என்று NGO நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசு தரும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000.                   



             இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 90 விழுக்காட்டில் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு கரியாகி விடுகிறது. இந்த ஒரு நாள் கூத்துக்காக சிவகாசி வருடம் முழுக்க உழைக்கிறது. பல மழலைகள் தங்கள் மழலைப் பருவத்தை இழந்து தவிக்கின்றனர். பலக் குழந்தைகள் பட்டாசு தயாரிக்கும் பொழுது நேரும் விபத்துக்களாலும், பல வித நோய்களாலும் மரணமடைகின்றனர்.
  
         குழந்தை தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள் தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் தான் அதிகம். குழந்தை தொழிலாளர்களை அதிக அளவில் புகுத்த காரணம், இவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கலாம். ஆனால் நிறைய வேலை வாங்கலாம். ஒரு நாள் முழுக்க ஒரு குழந்தை பட்டாசு செய்தால் அதிகபட்ச சம்பளாமாக 30-50 ரூபாய் கிடைக்கும். 50 என்பதே கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தொகை தான்.பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்று தான் வேலைப்பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே இருந்து பட்டாசு செய்யலாம். அதன் மூலம் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்பதாக வெளிஉலகுக்கு பட்டாசு முதலைகள் காண்பிப்பார்கள்.
      
                         பட்டாசு செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் கூட இருக்காது. வீட்டின் அடுப்பறை நெருப்பு பட்டாசு மேல் பட்டு பல நேரங்களில் பல மழலைகள் இறந்து போகின்றனர். இங்கு நடக்கும் பல விபத்துக்கள் மூடிமறைக்கப்படுகிறன. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் சில விபத்துக்களாவது சிவகாசியில் நடக்கும். ஆனால் வெளியூலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கப்படும்.
         
        பட்டாசு சுற்றும் பொழுது மருந்துப் பெருட்களுடன் வாழ்வதால் குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகளின் கற்பப்பை வளர்ச்சி குறைந்து போவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வொரு நாளும் இந்த குழந்தைகளின் வாழ்நாள் கேள்விக்குறியுடன் தான் தொடங்குகிறது.
                        
                         இப்படி பல குழந்தைகளின் பரிதாப வாழ்க்கையின் வெளிப்பாடு தான்  தீபாவளி மத்தாப்புகளும், புஸ்வானங்களும், காதைப் பிளக்கும் அணுகுண்டுகளும்.
                       
                   ஒவ்வொரு மத்தாப்பின் ஒளியிலும் தெரிவது அழகான வண்ணங்களாக இருந்தாலும் அதற்கு பின் இருப்பது என்னவோ சிகப்பு நிறம் தான்... ஆம் அது சிவகாசி பிஞ்சுகளின் ரத்தம்..
                      
                      இப்படி அறிவுக்கு பொருந்தாத ,இனத்திற்கு எதிரான ,உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ,சுற்று சூழலுக்கு எதிரான ,குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் ஒரு பண்டிகை நமக்கு தேவைதானா? தமிழர்களே ! சிந்தியுங்கள்





திராவிடர் எழுச்சி மாநாட்டுக் காட்சிகள்

திராவிடர் எழுச்சி மாநாட்டுக் காட்சிகள்

செவ்வாய், 26 அக்டோபர், 2010

திருப்பத்தூர் மாடலை மற்றவர்களும் பின்பற்றவேண்டும்


தந்தையை விஞ்சிய தனயனாக கே.கே.சி. எழிலரசனின் சாதனை!
மக்கள் தொடர்பும்-செல்வாக்கும்-கூட்டு முயற்சியும்தான் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்கள்
இந்த திருப்பத்தூர் மாடலை மற்றவர்களும் பின்பற்றவேண்டும்
தலைமுறை இடைவெளியில்லாத தந்தை பெரியாரின்
தொண்டறம் தொடர்கிறது - அனைவருக்கும் பாராட்டுகள் - தமிழர் தலைவர் அறிக்கை -

வேலூர் திருப்பத்தூரில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு மற்றும் மண்டல திராவிடர் எழுச்சி மாநாடு ஆகியவற்றின் வெற்றி குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மிக மகிழ்ந்து பாராட்டி எழுதியுள்ள அறிக்கை வருமாறு:
வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூரில் 23.10.2010 அன்று காலை நடைபெற்ற திராவிடர் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டமும், மாலையில் நடைபெற்ற மண்டல மாநாடும் கழக வரலாற்றில் ஒரு தனி சரித்திரம் படைத்தன என்றால், அது மிகையாகாது!
மக்கள் திருவிழா மாலையில்; கழகக் குடும்பங் களின் சங்கமம் காலையில் என்ற நிலையில் அமைந்த அந்த நிகழ்ச்சிகள் என்றென்றும் நம் நெஞ்சைவிட்டு நீங்காதவையாகும்!
வாணியம்பாடி தொடங்கி - திருப்பத்தூர்வரை
வாணியம்பாடி தொடங்கி திருப்பத்தூர் சுற்று வட்டாரங்கள்வரை கழகக் கொடிகள் அனைவரையும் வரவேற்றன!
எங்கெங்கு காணினும் கருஞ்சட்டை வீரர் - வீராங்கனைகள் பல்லாயிரக்கணக்கில்!
கிராமப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பல்லா யிரவர் பந்தல் போடப்பட்ட மாநாட்டில் மாபெரும் மக்கள் கடலாகக் குவிந்து விட்டனர்! நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்குத் தொடங்குமுன்பே இருக்கைகள் போதவில்லை - அமர்ந்தவர்கள் பல பகுதி மக்கள் - மகளிர் கூட்டமும் கணிசமானவை என்ற அளவில் ஒரு பொதுத் திருவிழாபோல் கூடி விட்டனர்!
எழிலரசனின் மக்கள் தொடர்பு
மாவட்டத் தலைவர் கே.கே.சி. எழிலரசனின் மக்கள் தொடர்புக்கும், மகத்தான செல்வாக்குக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது இம்மாநாடு!
கழக இளைஞரணியில் சுயமரியாதைச் சுடரொளி சோலையார்பேட்டை கே.கே. சின்னராசு அவர்களால் கழகக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு, சேர்க்கப் பட்டு படிப்படியாக கழகத்திலும் உயர்ந்து, நகரத்திலும் வளர்ந்துள்ளார்!
இளைஞர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைத் தால், அது மிகப்பெரும்பாலான வாய்ப்புகளில் வீண் போவதில்லை. வெற்றியாக அமையும்.
இயக்கத்தில் இளைஞர்கள் பஞ்சமா?
பல பேர் நினைப்பதுண்டு - தந்தை பெரியார் அவர்கள் இயக்கத்தில் இளைஞர்கள் அதிகம் இல்லை என்று. அது ஒரு தவறான கருத்து என்பதை கழகத் தின் செயற்பாடுகளை, நடவடிக்கைகளை நாடு தழுவிய அளவில் பார்க்கும் பொதுவான எவர்க்கும் விளங்க வைக்கும்.
இளைஞர்கள்மீது தந்தை பெரியார் அவர்களுக் குள்ள பாசம், அன்பு, நம்பிக்கையும் அதிகம் என்பதற்கு இதோ இரண்டு ஆதாரங்கள்:
இதோ பெரியார் பேசுகிறார்!
1929 ஜனவரியில் நடைபெற்ற வட ஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் மாநாட்டினைத் திறந்து வைத்து தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற் பொழிவில் (13.1.1929 குடிஅரசு இதழில் உள்ளது),
எனது இயக்கத்தையும், தொண்டையும் எனது உடல்நலிவிலும் சரீரத் தளர்ச்சியும், எதிரிகள் தொல் லையும் ஒரு சிறிதும் தடை செய்ய முடியாமல், என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி, வெற்றிக்கொடியை நாட்டி வருவதற்குப் பெரிதும் உதவியாய் இருந்து வருவது, இந்த வாலிப இயக்கமேயாகும். உண்மை யிலேயே, இப்போதைய வாலிபர்களிடம் எனக்கு அளவுக்கு மேற்பட்ட நம்பிக்கை இல்லாதிருக்குமானால், என்னுடைய கடையை வெகுநாளைக்கு முன்பே சுருட்டிக்கட்டிக் கொண்டு வேறு ஏதாவது துறையில் மூழ்கி இருப்பேன்.
ஆதலால், இந்த வாலிப இயக்கம்தான் நமது நாட்டிற்கு மாத்திரமல்லாமல் வெளிநாட்டிற்கும், சுதந் திரமும், விடுதலையும், சுயமரியாதையையும் வாங்கிக் கொடுக்கப் போகின்றது. எப்படி எனில், எந்த ஒரு நாட்டிற்கும் அரசியல் தலைவனோ, பாஷைப் பண்டிதனோ, சாஸ்திரியோ முயற்சித்து உண்மையான சுதந்திரமோ, விடுதலையோ வாங்கிக் கொடுத்ததாக சரித்திர காலந்தொட்டு நமக்கு ஆதாரங்கள் கிடையாது. எங்கும் வாலிபர் கிளர்ச்சிதான் விடுதலை அளித்திருக்கின்றது. ஒவ்வொரு விடுதலை முயற்சியும் முதலில் கட்டுப்பாட்டை உடைத்தெறிந்த பின்தான் வெற்றி பெற்றிருக்கின்றது!
(பழைமை) கட்டுப்பாடுகளை உடைப்பதற்கு வாலிபர் களால்தான் முடியுமே ஒழிய மற்றவர்களால் சுலபத்தில் சாத்தியப்படாது. ஆதலால் நான் முழுவதும் இந்த வாலிபர்களையே மனப்பூர்வமாக நம்பி இருக்கிறேன்.
(13.1.1929, குடிஅரசு)
சின்னப் பையன்கள்தாம்...
இரண்டாவது, அதே மாவட்டம் திருப்பத்தூரில் 1933 ஜனவரியில் நடந்த வடஆற்காடு ஜில்லா சுயமரியாதை மாநாட்டில் ஆற்றிய சொற்பொழி (13.1.1933, குடிஅரசு)வில் குறிப்பிடுகிறார்:
தோழர்களே, இந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்த தோழர் கே.எம். பாலசுப்பிரமணியம் பி.ஏ.பி.எல்., அவர்கள் தான் ஒரு சின்னப் பையன் என்றும், தன்னைத் தலைமைப் பதவியில் உட்கார வைத்து நான் வேடிக்கை செய்கிறேன் என்றும் சொன்னார்.
இந்த இயக்கம் இன்று ஏதாவது ஓரளவுக்காவது மதிக்கத் தகுந்த அளவுக்குப் பயன்பட்டு வருகிறது என்று சொல்லப்படுமானால், அதற்குக் காரணம் இந்த மாதிரி சின்னப் பையன்களே காரணமாகும். இப்படிப்பட்ட சின்னப் பையன்கள் இந்த இயக்கத்தில் இருப்பதனா லேயேதான் எனக்கு ஒருபுறம் வயது வளர்ந்தாலும், வாலிபமும் கூடவே வளர்ந்து வருகிறது. எனது சகவாசம் முழுவதும் சின்னப் பையன்களிடமே இருப்பதால்தான், சின்னப் பையன் தன்மை எனக்கு இன்னமும் இருந்தும், வளர்ந்தும் வருகிறது. என் ஆசையெல்லாம் நான் எப் போதும் சின்னப் பையன்கள் மாதிரியே இருக்கவேண்டு மென்பதோடு, பெரிய ஆளுகள் மாதிரி ஆகக்கூடாது என்பதுமாகும்!
என்னே, அற்புதமான இளைஞர்களுக்கு இயக்கத்தில் அங்கீகாரம், சிவப்புக் கம்பள வரவேற்பு மாட்சிதான் என்னே, பார்த்தீர்களா?
அத்தகைய ஓர் ஆற்றல் வாய்ந்த இளமைத் தலை மையும், அவரைச் சுற்றியுள்ள இளைய நண்பர்கள், நல விரும்பிகளின் ஒத்துழைப்பிலும் இப்படிப்பட்ட சாதனையை லகுவில் அனாயசமாக அந்தக் குழுவினர் (கூநயஅ) செய்து முடித்து முதற்பரிசை தட்டிச் சென்றது.
தலைமுறை இடைவெளி இல்லை
(1) விடுதலைக்கு 800 சந்தாக்களை அந்த மேடையில் அளித்தது.
(2) எடைக்கு எடை (இரு மடங்கு) பணம் தந்தது, அதை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்துக்குப் பயன்படுத்தச் சொன்னது,
(3) உள்ளூரில் இடம் வாங்கி பெரியார் நூலகம், படிப்பகம் அமைப்பதற்கு அச்சார நன்கொடைகள்.
(4) குடிஅரசு வெளியீட்டு விழா -
இவை எல்லாவற்றையும்விட வாழும் இயக்க வீரர் - வீராங்கனைகளை மாவட்டம் முழுவதும் தேடிப் பிடித்து, விருது வழங்கிப் பாராட்டியது!
வேர்களைத் தேடிப் பெருமைப்படுத்திய விழுதுகளின் கடமை உணர்வின் மாட்சிதான் என்னே!
அவர்களும் அங்கே 60-க்கு மேற்பட்ட, மறைந்தும் மறையாத கொள்கை லட்சிய வீரர்கள் - வீராங்கனை களான சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீர வணக்கம் என்று படங்களை அமைத்ததானது - தலைமுறை இடைவெளியில்லாத பெரியார் தம் தொண்டறம் இன்றும் தொடருகிறது; என்றும் தொடரும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டாகும்.
தந்தையை விஞ்சிய தனயன்!
தோழர் எழிலரசன், தன் தந்தையை விஞ்சிய சாதனை யாளராக உயருவதற்கு அவரது நல்ல நண்பர்கள் குழாமே, காரணம்! கட்சி, ஜாதி, மத பேதமின்றி அவர்கள் பெரியார் பற்றாளர்கள் - அவர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார் இந்த இளைஞர்!
ஒத்துழைத்த பெருமக்களுக்குப்
பாராட்டு - நன்றி!
அவருக்குத் துணையாக மாவட்டச் செயலாளர் மானமிகு கா. மகேந்திரன் - நல்ல இளைஞரணி தோழர்கள் இப்படி பலப் பலர்!
திருவாளர்கள் என்.கே.ஆர். சூர்யகுமார் எம்.எல்.ஏ., எஸ். இராஜேந்திரன் (தி.மு.க. நகர செயலாளர்), பி. கணேஷ்மல் (தலைவர், காமராஜர் அறக்கட்டளை), ஏ.அண்ணாதுரை (திருப்பத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர்), கு. இராஜமாணிக்கம் (கந்திலி ஒன்றியக் குழுத் தலைவர்), பொன்குணசேகரன் (மத்தூர் முன் னாள் ஒன்றிய குழுத்தலைவர்), ஏலகிரி எ.வி. செல்வம் (மாவட்டக் கவுன்சிலர்), ஆர். குலோத் துங்கன் (மாவட்டக் கவுன்சிலர்), இரா. லட்சுமிகாந்தன் (மாவட்ட கவுன்சிலர்), தணிகை ஜி. கருணாநிதி (தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர்), டி.வி. மாதவன் (ரோட்டரி முன்னாள் தலைவர்), டி. மதியழகன், தோழர் பரந்தாமன், அண்ணா அருணகிரி (தொழிலதிபர்), மாவட்டத் துணைச் செயலாளர் எம்.கே.எஸ். இளங் கோவன், மாவட்ட இளைஞரணி தலைவர் வி.ஜி. இளங்கோ, திருமதி அகிலா தலைமையில் அமைந்த ஆற்றலும், ஆர்வம் வாய்ந்த மகளிரணியினர், ம. கவிதா (மகளிரணி செயலாளர்), அண்ணா சரவணன், பழ. வெங்கடாசலம், மா. பன்னீர்செல்வம், எம். வெற்றி கொண்டான், ந. கமல், வ. ஆறுமுகம், சித. வீரமணி, அரங்க.இரவி, மா.சி. பாலன், கே.சி.எ. சிற்றரசு, ஜி. அருண், காளிதாஸ், எ.டி.ஜி. சித்தார்த்தன், புலவர் அண்ணாமலை இப்படி பல அணித் தோழர்கள், தோழியர்கள் ஒட்டுமொத்த கூட்டுழைப்பு மாபெரும் வெற்றியை அறுவடை செய்து, முதலிடத்தைப் பெற காரணமாக அமைந்தது.
அனைவருக்கும் நமது இதயமார்ந்த மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள் - வாழ்த்துகள்!
இது பணியின் முடிவல்ல; தொடக்கமே!
திருப்பத்தூர் மாடல்
தொய்வின்றி இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்து திருப்பத்தூர் மாடல் என்று எல்லோரும் பின்பற்ற முன்வரும் அளவுக்கு மேலும் உழைக்கத் திட்ட மிடுங்கள்!
சதா இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது இயக்கம்! மறவாதீர்!!

தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை