வெள்ளி, 6 செப்டம்பர், 2013

வ.உ.சி பார்ப்பன் அல்ல ..?



செப்டம்பர் 5 தான் வ.உ.சி.க்கும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கும் பிறந்த நாள் .வ.உ.சி அவர்கள் திருச்சியில் சட்டக்கல்வி பயின்று
வழக்குரைஞர் ஆனவர் . 1906 - ம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களுக்கு போட்டியாக 'வாணிபம் செய்வதற்காக  சுதேசி நாவாய்ச் சங்கம் ' என்ற அமைப்பை துவங்கி அதன் செயலராக பணி புரிந்து. காலியா, லாவோ என்ற இரு கப்பல்களை தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு விட்டவர்  , இந்திய சுதந்திர போராட்டத்தில்  தமிழர் வ.உ.சியின் தியாகம் ,உழைப்பு போற்றத்தகுந்தது

திருத்தணியில் பிறந்த ஆந்திர பார்பானான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இந்திய சுதந்திர போராட்டத்திற்க்கான அவரது பங்களிப்பை இன்னமும் ஆரய்ச்சி செய்து கொண்டு இருகிறார்கள்.அவருக்கும் இந்திய சுதந்திர போராட்டத்திற்க்கும் சம்பந்தம் இல்லதனாலேயே பூணூல் கயிற்றை பிடித்து   இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவர் ,இந்தியாவின் பாரத் ரத்னா விருது பெற்ற முதல் குடியரசு தலைவர் என்கிற பெருமையெல்லாம் பெற்ற மனிதர் .இந்தியா என்றால் இந்து. இந்து என்றால் இந்தியா’ என்பது போல் உலகெங்கும் இந்து மத வேதங்களை, புராணங்களை, இதிகாசங்களை இந்திய தத்துவங்களாக பிரச்சாரம் செய்தவர். அதனாலேயே அவர் தத்துவமேதை என்று கொண்டாடப்பட்டவர்.இது ஒன்று போதாதா பார்ப்பனர்கள் தூக்கி கொண்டாட ? ராதாகிருஷ்ணன் ஆசிரியராக இருந்து ஜனாதிபதி ஆனார் என்பதற்காய் அவர்   பிறந்த நாளை இந்தியா முழுதும் ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவு போட்டு விட்டார்கள். 
     வ.உ.சி அவர்கள் சிறையில் இருந்த போது வ.உ.சி அவர்கள் துணைவியார் மீனாட்சி அம்மையார் அவர்கள் ஆங்கில அரசுக்கு ஒரு கடிதத்தை எழுதினார் இவ்வாறு. "எனது கணவரை கல்லுடைக்கவும் செக்கு இழுக்கவும் செய்து கொடுமைப்படுத்துவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, எனவே கண்காணாத இடமான அந்தமான் சிறைக்கு கொண்டு சென்று விடுங்கள் " என்று கடிதம் எழுதினார். அந்த அளவிற்கு கல் உடைப்பது, செக்கிழுப்பது போன்ற பல கொடுமைகள் அவருக்கு வழங்கப்பட்டன . சிறையிலிருந்து திரும்பிய போது வ.உ.சியின் குடும்ப வறுமை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சியிடம் ஒப்படைக்கு மாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள். கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை. இது தான் இந்த நாடு வ.உ.சி க்கு செய்தது
       இன்றைக்கு யார் நினைத்து போற்றப் படவேண்டுமோ அவர் மறக்கப் பட்டிருக்கிறார் பின்னுக்கு தள்ளப்படிருக்கிறார் ஒரே காரணம் தான் ! ஜாதி ....ஜாதி ...ஜாதி ....வ.உ.சி பார்ப்பன் அல்ல தமிழன்