புதன், 27 அக்டோபர், 2010

தீபாவளி தேவையா ?தமிழர்களே சிந்திபீர் !

தீபாவளி தேவையா ?தமிழர்களே சிந்திபீர் !

தீபாவளி, தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும். பார்ப்பனீயத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. இந்தியாவில் கேரளா போன்ற மாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை .தீபாவளியைக் குறிக்கும் வெடி, அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ் நாட்டிற்கு 15ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை . விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளி) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை ஆனாலும் தீபாவளியை ஏன் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது .
உள்ளபடியே தீபாவளி பண்டிகை ஓர்
பொருளாதாரப் பேரழிவு!
சுற்றுச்சூழல் சீர்கேடு!
சுகாதாரக் கேடு! உயிர்ப்பலி!
ஆரிய ஆபாசப் பண்டிகை!
தீபாவளியைப் பற்றி பல கதைகள் உண்டு. வடநாட்டவரைப் பொறுத்தளவில் (குஜராத்திகள், மார்வாரிகள்) தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள். அவர்களது புத்தாண்டின் தொடக்க நாள். வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள். வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்குரிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். இன்னும் சில இனத்தவருக்கு தீபாவளி நாள் இராமன் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள். தமிழர்களைப் பொறுத்தளவில் தீபாவளி நாள் நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள்.
தீபாவளி கொண்டடப்படுவதற்கு பல கதைகள் உண்டு .புராணப்படி 
ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.தேவர்களின் முறையீட்டின்மீது மகா-விஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமி-யுடன் கலவி செய்தது. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.  விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்-தார்கள்.இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்(?!).இது ஒரு கதை .
இதை ஆராய்வோம்பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்த-போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டி-னால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?இப் பண்டிகை கொண்டாடும் யாராவது இதை பற்றி சிந்திகிறர்களா?
மற்றொரு புராண கதை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்  !
நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான். அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார்.
ஆனால் நரகாசுரனை கொல்வது திருமாலுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் நரகாசுரமன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான். உடனே காத்தல் கடவுளான திருமால் பெரிய சதித் திட்டம் தீட்டுகிறார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே திருமால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார். உண்மையில் அப்படி அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. எல்லாம் நடிப்பு. இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து திருமாலின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறார்.
உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறார். ”எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்”" என்கிறான் நரகாசுரன்.இப்படி பல விதமான கதைகள் அடிப்படையில் தேவர் -அசுரர் போராட்டத்தில் தேவர்களின் வெற்றி பெற்றதை குறிக்கும் நாள் தான் தீபாவளி .
நரகாசுரன் ஒரு திராவிட அரசனாகவும் திராவிடத்தை (வங்கத்தை)ச் சேர்ந்த ஒரு பிராகஜோதிஷம் என்னும் நகரை ஆண்டவனாகவும் அதே புராணங்களில் காணப்படுகின்றான். கதை எப்படியிருப்பினும், இவனும் - நரகாசுரனும், இரண்யாட்சன், இரண்யன், இராவணன், சூரபதுமன் முதலிய திராவிடர் தலைவர்களோடு ஒருவனாக மதிக்கப்பட வேண்டியவன் ஆவான். இவன் தன்னைப் பெற்ற தகப்பனால், தாயால் கொல்லப்பட்டதாகக் கதை கூறுகிறது. காரணம் தேவர் களுக்குத் தொல்லை கொடுத்ததால் என்கிறது புராணம்.
''இன்று நாம் (திராவிடர்கள் - தமிழர்கள்) இரண்யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கின்றோமோ அது போலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட நம் தலைவனை தேவர் கூட்டம் கொன்றதற்கு நாம் துக்கப்பட வேண்டுமே ஒழிய மகிழ்ச்சியடைவது மடமையும் இழிவும், மான ஈனமுமாகும்.''என்கிறார் அறிவாசான் பெரியார் .
 “தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று”"
என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய ‘தமிழர் சமயம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
“தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை”" எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாமெழுதிய “மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு”" என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.“தீபாவளி சமணசமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால தினமே தீபாவளியாகும். தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை” (தீபம் – விளக்கு, ஆவலி – வரிசை )
என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்”" என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
“ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி”
என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தான் எழுதிய “தமிழர் மதம்”" என்ற நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர் -“ஆரியரின் இந்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன்-இராவணனன் மதலான நிகரற்த தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்”
(வேளாளர் நாகரிகம் – பக்கம் 60).என்கிறார்

இவர்கள் எல்லோரையும் விட இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தரே சொல்லி இருக்கிறார் '' தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.''
(இராமாயணச் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் 587-589)என்று .எதிரியே இறந்தாலும் அவன் மரணத்திற்காக வருத்தப்படுவது தான் திராவிடர்  பண்பு மகிழ்ச்சி அடைந்து கொண்டாடுவது ஆரிய குணம் !இதை அறியா தமிழர்கள் பண்டிகை கொண்டடுகிறர்களே? என்ன சொல்வது !

சுற்றுசுழல் கேடு 

                  
             இப் பண்டிகை அறிவுக்கு பொருந்தாதது மட்டும் அல்ல சுற்றுசூழலுக்கும் கேடு விளைவிக்கிறது .பண்டிகையின் போது வெடிக்படும் பட்டாசுகளால் ஒலி ,காற்று,நீர் ஆகியன மாசுபடுகிறது .புவியும் வெப்பமடைகிறது
பட்டாசுகளில் காரீயம் (lead ),மக்னிசியம ,துத்தநாகம் ,சோடியம் ,பொட்டசியம,செம்பு ,காட்மியம், பாஸ்பரஸ் (PO4 ),சல்பர்,நைட்ரைட் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் தன்மை உடைய ,எரித்தால் மனிதர் உடலுக்கு கேடு செய்யும் புகையை தரும் இராசயனகள் பட்டாசுகளில் கலக்கப் படுகின்றன

ஒலி மாசு 

                  
 சராசரி ஒலி கேட்பு திறன் 60 dB.இன்னும் ஒரு 10db அதிகரிப்பதாக :ஒலி மாசுகொண்டால் ஒலி அளவு இரு மடங்கு தீவிரப்படுத்தப்படும் .ஆனால் பெரும்பான்மையான பட்டாசுகள் 80db ஒலி எழுப்பும் தன்மை கொண்டதாக இருக்கிறது .அதிகமான ஒலி ,ஒலி கேட்பு திறனை குறைப்பதுடன் மாரடைப்பு ,இரத்தக்கொதிப்பு ,தூக்கமின்மையை உருவாக்குகிறது
ளினால் ஏற்படும் மாசினால் கண் .மூக்கு,தொண்டை பிரச்சனைகள் ஏற்படுகின்றன காற்றில் கரைந்துள்ள துகள்களின் அளவு 100 ppm அளவிற்கு தாண்டும் போது
                    

காற்று மாசுபடுதல் 

                    
                    தீபாவளி பண்டிகையில் வெடிக்கப்படும் பட்டசுக
தலைவலி ,மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுகிறன சல்பர் டை ஆக்சைடு எளிதில் காற்றில் கரைந்து நுரையீரலை தாக்கி மூச்சு குழல் சம்பந்த பட்ட வியாதிகளை உருவாக்குகிறது . நைட்ரஜன் டை ஆக்சை டு காற்றில் கரைந்து சளி ,ஆஸ்த்மா போன்ற வியாதிகளை உருவாக்குகிறது

குழந்தை தொழிலாளர்களின் குருதியில் நடக்கும் பண்டிகை 

சிவகாசியில் சிறிதும் பெரிதுமாக சுமார் 500 பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த 500 தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் மட்டும் சுமார் 20,000 முதல் 40,000 வரை இருக்ககூடும் என்று NGO நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசு தரும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000.                   



             இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 90 விழுக்காட்டில் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு கரியாகி விடுகிறது. இந்த ஒரு நாள் கூத்துக்காக சிவகாசி வருடம் முழுக்க உழைக்கிறது. பல மழலைகள் தங்கள் மழலைப் பருவத்தை இழந்து தவிக்கின்றனர். பலக் குழந்தைகள் பட்டாசு தயாரிக்கும் பொழுது நேரும் விபத்துக்களாலும், பல வித நோய்களாலும் மரணமடைகின்றனர்.
  
         குழந்தை தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள் தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் தான் அதிகம். குழந்தை தொழிலாளர்களை அதிக அளவில் புகுத்த காரணம், இவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கலாம். ஆனால் நிறைய வேலை வாங்கலாம். ஒரு நாள் முழுக்க ஒரு குழந்தை பட்டாசு செய்தால் அதிகபட்ச சம்பளாமாக 30-50 ரூபாய் கிடைக்கும். 50 என்பதே கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தொகை தான்.பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்று தான் வேலைப்பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே இருந்து பட்டாசு செய்யலாம். அதன் மூலம் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்பதாக வெளிஉலகுக்கு பட்டாசு முதலைகள் காண்பிப்பார்கள்.
      
                         பட்டாசு செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் கூட இருக்காது. வீட்டின் அடுப்பறை நெருப்பு பட்டாசு மேல் பட்டு பல நேரங்களில் பல மழலைகள் இறந்து போகின்றனர். இங்கு நடக்கும் பல விபத்துக்கள் மூடிமறைக்கப்படுகிறன. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் சில விபத்துக்களாவது சிவகாசியில் நடக்கும். ஆனால் வெளியூலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கப்படும்.
         
        பட்டாசு சுற்றும் பொழுது மருந்துப் பெருட்களுடன் வாழ்வதால் குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகளின் கற்பப்பை வளர்ச்சி குறைந்து போவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வொரு நாளும் இந்த குழந்தைகளின் வாழ்நாள் கேள்விக்குறியுடன் தான் தொடங்குகிறது.
                        
                         இப்படி பல குழந்தைகளின் பரிதாப வாழ்க்கையின் வெளிப்பாடு தான்  தீபாவளி மத்தாப்புகளும், புஸ்வானங்களும், காதைப் பிளக்கும் அணுகுண்டுகளும்.
                       
                   ஒவ்வொரு மத்தாப்பின் ஒளியிலும் தெரிவது அழகான வண்ணங்களாக இருந்தாலும் அதற்கு பின் இருப்பது என்னவோ சிகப்பு நிறம் தான்... ஆம் அது சிவகாசி பிஞ்சுகளின் ரத்தம்..
                      
                      இப்படி அறிவுக்கு பொருந்தாத ,இனத்திற்கு எதிரான ,உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ,சுற்று சூழலுக்கு எதிரான ,குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் ஒரு பண்டிகை நமக்கு தேவைதானா? தமிழர்களே ! சிந்தியுங்கள்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக