செவ்வாய், 4 மே, 2010

புதுடில்லி விழாவில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சி

அன்றாடம் பெரியார் கொள்கை பரப்ப முதல்வரின் பணி விலை மதிப்பற்றது
புதுடில்லி விழாவில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சி


புதுடில்லி, மே 4_ புதுடில்லியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் பெரியார் மய்யம் திறப்பு விழா மே 2 ஆம் தேதி மாலை எழிலுறவும், எழுச்சியுறவும் நடை-பெற்றது.

விழாவில் முதல்வர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு மய்யத்-தைத் திறந்து வைத்து உணர்ச்சியும், உருக்கமும் மேலிட உரை நிகழ்த்-தினார்.

மய்யம் உருவாகப் பெற வீரமணி அவர்கள் ஆற்றிய அளப்பரிய பணிகளை வெகுவாகப் புகழ்ந்து உரைத்த முதல்வர் கலைஞர் அவர்-கள், உரையை நிறைவு செய்ததும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீர-மணி அவர்கள் குறிப்பிட்டதாவது:

ஈரோட்டுக் குருகுலத்தில் படித்த காரணத்தால் முதல்வர் கலைஞர் அவர்கள், குருதட்சணை செலுத்-தும்போது, ஏற்கெனவே 95 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறேன். அத்து-டன் 5 லட்சம் ரூபாய் சேர்த்து காணிக்கையை 1 கோடி ரூபாயாகக் கொடுக்கிறேன் என்று கூறியதற்கு ஆழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தொகையை மேலும் ஒரு பெரியார் மய்யம் தொடங்கிட அச்-சாரமாகப் பயன்-படுத்துவோம். அதற்-காக முதல்வர் கலை-ஞர் அவர்-களுக்கு மனப்பூர்வமான நன்றி-யைத் தெரிவித்துக் கொள்-கிறோம்.

முதல்வர் கலைஞர் அவர்கள் மேலும் 5 லட்சம் ரூபாய் கொடுப்ப-தாகச் சொன்னார்கள். அதனைவிட தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைப் பரப்பிட, அரசின் மூலமாக கலைஞர் அவர்கள் அன்-றாடம் செய்து வருகின்ற பணி விலை மதிப்பற்றது. அதற்கு எங்களு-டைய ஆழ்ந்த நன்றி எப்போதும் உண்டு. பெரியார் கொள்கை பரப்-பிட முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிடும் பணிக்கு நாங்கள் என்றைக்கும் நன்றி காட்டுவோம்.

இவ்வாறு கி.வீரமணி அவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்து குறிப்பிட்டார்.

மே 10 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்


ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடாது என்பது பார்ப்பனர்களின் சூழ்ச்சியே!

மத்திய அரசை வலியுறுத்தி மே 10 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில்

திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்! தமிழர் தலைவர் அறிக்கை





2011 இல் நாடு தழுவிய அளவில் எடுக்கப்பட உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிபற்றிய விவரமும் சேர்க்கப்படவேண்டும் - சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இது மிகவும் அவசியமாகும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 10 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் இது தொடர்பாக வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:



புதுடில்லியில், புதிய பெரியார் மய்யம் என்ற 5 அடுக்குக் கட்டடம் 2.5.2010 அன்று தமிழ்நாடு முத-லமைச்சர் கலைஞர் அவர்களால் திறக்கப்பட்டவுடன், அடுத்த நாளே (3.5.2010) அதன் கருத்தரங்கக் கூடத்தில் முதல் சமூகநீதி கருத்தரங்கம் நடைபெற்றது.



சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே. ராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார். பல்துறை அறிஞர்களாகிய, டாக்டர் எஸ். இராசரத்தினம், டி.பி. யாதவ் (முன்னாள் மத்தியக் கல்வி அமைச்சர்) ஆகியோர் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் பேரவை அமைப்பாளர் திரு. அனுமந்த்ராவ் எம்.பி. நிறைவுரை நிகழ்த்தினார். நான் கருத்தரங்கிற்குத் தலைமை வகித்தேன்.



முக்கிய தீர்மானங்கள்



பிரபல கருநாடக சமூகநீதிப் போராளி ரவிவர்மகுமார் (கருநாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவர், மூத்த வழக்கறிஞர்), உச்ச-நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், சமூகநீதிக்கான வழக்-கறிஞர் கழகத்தின் நிருவாகத் தலைவருமான சுப்-பாராவ், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் தேசிய யூனியன் பொதுச்செயலாளர் திருமதி கீதா, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன், அகில இந்திய பிற்படுத்தப்பட்-டோர் ஊழியர் நலச் சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்-செயலாளர் கோ. கருணாநிதி (யூனியன் வங்கி), பகுத்தறி-வாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ. குமரேசன் முதலியோர் பங்கேற்றதில் முக்கிய 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



அதில் உடனடியாக, இப்போது 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (சென்சஸ்) ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். மக்கள் தொகை யில் 80 விழுக்காடு உள்ள மக்களின் உண்மைக் கணக்கெடுப்பு - சமூகநீதிக் கண்ணோட்டத்தில் தேவைப்படுகிறது. அப்போதுதான் சமூகநீதி _ இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்பது ஒரு முக்கிய தீர்மானம் ஆகும்.



சாத்தியமில்லையா?



அதனைத் தட்டிக் கழித்து, மத்திய அரசின் அதிகார-வர்க்கம் குறுக்குசால் ஓட்டி, அதை இப்போது நடத்த சாத்தியமில்லை என்று ஒரு சூழ்ச்சிப் பொறியின்மூலம், உயர்ஜாதி வர்க்கத்தின் ஏகபோக ஆதிக்கம் கல்வி, உத்தியோகத்தில் இருப்பதை மறைத்து, அதனை நிரந்-தரமாக்கிட முயலுகிறது!



வேண்டாம் என்பவர்கள் ஜாதி ஒழிப்பு வீரர்களா?



ஆகா! இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஜாதி வாரியாக கணக்கெடுக்கக் கோரிக்கையா? என்று ஏதோ மிகப்-பெரிய ஜாதி ஒழிப்பு வீரர்களைப்போல், பார்ப்பன ஏடு-களும், தலைவர்களும், அவர்களால் கையகப்படுத்தப்-பட்டுள்ள பார்ப்பனரல்லாத, கீழ்ஜாதி தலைவர்களில் சிலரும் கேட்டு தங்களது ஞானத்தை விளம்பரப்படுத்திக் கொள்கின்றார்கள்.



நாட்டில் ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டதா?



நாம் அவர்களைப் பார்த்துக் கேட்கும் கேள்விகள் இதோ:



1. நாட்டில் ஜாதியே இல்லையா? ஒழிந்துவிட்டதா?



2. இந்த 63 ஆண்டுகால சுதந்திரத்தில் ஜாதி ஒழிப்-புச் சட்டம் கொண்டு வந்தார்களா? நடைமுறைப்-படுத்தப்பட்டதா? இல்லையே!



3. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி (Caste) என்ற சொல் இடம் பெற்றுள்ளது என்பதை இவர்கள் யாராவது மறுக்க முடியுமா?



4. நாட்டில் திருமணங்களில் 90 விழுக்காடு ஜாதி பார்த்துத்தானே நடைபெறுகிறது?



5. பார்ப்பனர்கள், ஜாதி வாரி சென்சஸ் கூடாது என்று கூறும் மேதாவிலாசங்கள் தங்கள் முதுகில் பூணூல் தொங்குகிறதே _ அது எதற்காக? முதுகு சொறிந்து கொள்வதற்கா?



பின் ஏன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு மட்டும் நெருப்புக் கோழி மனப்பான்மை?



சிக்கல் என்ன?



நடைமுறை சாத்தியமானதல்ல இப்போது என்று கூறும் மத்திய அரசின் அமைச்சர், அதிகாரிகளைக் கேட்கிறோம்.



அதில் என்ன சிக்கல்? ஒன்றுமில்லையே!



ஏற்கெனவே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீட்டுப் பட்டியல் மாநிலங்களில் உள்ளது. (S.C., S.T., OBC) இதுபோல பள்ளிச் சான்றிதழ்களில் உள்ளது! அந்த யதார்த்தத்தை உணர்ந்து பதிவு செய்வதில் என்ன கஷ்டம்? கல்வி நிறுவனங்களில் சேரும்போது, தவறான தகவல் தர முனைந்தால், ஆள் மாறாட்டம், ஜாதி மாறாட்டம் சான்றிதழில் பொய்க்கூற்று என்று கூறி வழக்குப் போட்டுத் தண்டிக்கும் நிலையில், இதற்கென என்ன தனி ஏற்பாடு?



1931 ஆம் ஆண்டிற்குப் பிறகு அம்முறை மாற்றப்பட்டு விட்டது என்பது போதுமான அறிவார்ந்த காரணமல்ல. வெறும் எண்ணிக்கை எடுப்பது என்பதற்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவா?



முக்கிய தகவல்கள் இல்லாமல் மொட்டைத் தாதன் குட்டையில் வீழ்ந்தான் என்பது போன்ற தகவலால் என்ன லாபம்?



சமூகநீதி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்-காகவே இந்த ஜாதியைத் தவிர்க்கும் சூழ்ச்சியான இம்முயற்சி!



அனைத்துப் பெரும்பான்மை மக்களும் இதனை எதிர்த்து, ஜாதி வாரியான சென்சஸ் எடுக்க மத்திய அரசினை வற்புறுத்திடவேண்டும்.



நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்!



நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் லாலுபிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பிரதான எதிர்க்கட்சியாகிய பா.ஜ.க.விலும், ஆளும் காங்கிரசிலும் இந்தக் குரல் வேகமாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது!



மாவட்டத் தலைநகரங்களில் 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்



இதை மக்களுக்கு முன்னெடுத்துச் சென்று மத்திய அரசினை வற்புறுத்தும் மக்கள் அறப்போராட்டத் திட்டம் உடனடியாக செயல்படவேண்டும் என்று முடிவு எடுத்ததனை செயல்படுத்த,



திராவிடர் கழகம் சார்பில், அதன் தோழர், தோழியர்கள் வரும் 10.5.2010 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசினை வற்புறுத்தும் ஆர்ப்பாட்டமும் நடைபெறும்!



நான், மே 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் தஞ்சையில் கலந்துகொள்ளவிருக்கிறேன். கழகப் பொறுப்பாளர்கள், சமூகநீதியாளர்கள் அனைவரும் ஆங்காங்கே சிறப்பான வகையில் நடத்திட வேண்டுகிறோம். இடையில் இருக்கும் நாள்கள் குறைவு! உடனே செயல்படத் தொடங்குங்கள்!





தலைவர்,

திராவிடர் கழகம்.



சென்னை

4.5.2010

திருக்குறள் பற்றி பெரியார்

நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! பார்ப்பனர்கள் குறளுக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள் என்பதை? அவர்கள் பகவத் கீதையை அச்சுப் போட்டு இனாமாக வழங்கி வருவதும் உங்களுக்குத் தெரியாததல்லவே! இது ஏன் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா? கிருஷ்ணன் கதையின் மூலம் நாலு சாதி முறை உண்டென்பதையும், அதில் பார்ப்பனர்களே முதல் சாதியினர் என்பதையும் கடவுளுக்கும் பெரியவர் பார்ப்பனர் என்ற தத்துவத்தையும் கூறியிருப்பதோடு, எப்படியும் அதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு உண்டு - வருணதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்று ஒப்புக் கொண்டிருப்பது தான் அதற்குக் காரணம் என்பதை உணருங்கள்!




வேதாந்திகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் கீதையில் 1000 வரிதெரிந்திருப்பது ஏன்? குறளில் 2 வரி கூடத் தெரியாதது ஏன் என்பதையும் காவி வேட்டி கட்டிக் கொண்டு ஒரு சில திராவிடர்கள் கூட கீதைப் பிரச்சாரம் செய்து வருவது ஏன் என்பதையும் யோசித்துப் பாருங்கள்! கீதை எவ்வளவு அக்கிரமத்திற்கும் முக்காடு போட்டு விடும் - காவியுடையைப் போல். ஏன்? கீதைக்குத் தலைவனான கிருஷ்ணனே - அக்கிரமத்தின் தலைவ னான காரணத்தால்.



தோழர்களே! நாம் எதிர்க்கும் நான்கு சாதி முறையைக் கடவுளின் பேரால் வலியுறுத்தத்தான் கீதையும், கிருஷ்ண பஜனையும் என்பது நினைவிருக்கட்டும்.



கீதை படிப்பவர்கள் எத்தகைய தர்மத்தையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், பகவானே இதைச் செய்துள்ள போது சாதாரண மனிதனான நான் எம்மாத்திரம்? என்றோ, எல்லாம் பகவான் செயல் என்றோ - நான் ஏன் பார்ப்பான் என்று கிருஷ்ணனிடம் கேட்டுத் தெரிந்து கொள் என்றோ சுலபமாகப் பதில் கூறி விடலாம்.



ஆனால் குறளைப் படித்தாலோ- தர்மத்தின்படி நடக்க வேண்டும். பித்தலாட்டம் செய்ய முடியாது. பித்தலாட்டம் செய்பவரைக் கண்டா லும் பொறுத்துக் கொண்டிருக்க முடி யாது.



குறளிலும் இன்றைய நிலைக்குப் புறம்பான கருத்துகள் சில இருக்கலாம். அவற்றை மாற்றிவிட வேண்டியது தான். அத்தகைய மாற்றத்திற்கு இடம் தருவதுதான் குறள்.



குறளை முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது எனலாம். காய்கறி, தானியம் இவை அபரி மிதமாகக் கிடைக்குமானால் மாமிசம் தின்ன வேண்டிய அவசியம் தான் என்ன இருக்கிறது?



முகமது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களைக் குறளில் அப்படியே காணலாம். முஸ்லீம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காண முடியாது. அது மனுதர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்றே திடமாகச் சொல்லலாம். மனு தர்மச் சூத்திரங்களுக்கு நேர்மாறான கருத்துகளைக் கொண்ட குறள் அடிகளை ஏராளமாகத் திருக்குறளிலிருந்து எடுத்துக்காட்டலாம்.
மனித சமுதாயத்திற்கே நல்வழிகாட்டி நன்னெறியூட்டி நற்பண்புகளையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள
-பெரியார்

திங்கள், 3 மே, 2010

தி.க. - தி.மு.க. இரட்டைக் குழல் துப்பாக்கிகள்தான்!

பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகம் செல்வாக்கோடு இருக்குமா என்ற கேள்விக்கு


சிறப்பாக இருக்கும் என்ற விடைதான் இளவல் வீரமணி! பெரியாரின் தாக்கம் எல்லா இடங்களிலும் ஏற்பட்டாகவேண்டும் தி.க. - தி.மு.க. இரட்டைக் குழல் துப்பாக்கிகள்தான்!

பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு கோயிலுக்குப் போகாதீர்கள்

தி.மு.க. தோழர்களுக்கு நான் இடுகின்ற கட்டளையாகும்!





இதோ குருதட்சணையாக ரூபாய் 5 லட்சம்!

டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவில் முதலமைச்சர் கலைஞரின் இலட்சிய சங்கநாதம்



[image]



[image]





புதுடில்லி, மே 3- தந்தை பெரியார் அவர்களின் தாக்கம் எல்லா இடங்களிலும் ஏற்பட்டாகவேண்டும். தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்தான் - பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு என்னுடைய கழகத் தோழர்கள் கோயிலுக்குப் போகக்கூடாது. இது என்னுடைய வேண்டுகோள் அல்ல, கட்டளையாகும் என்றார் முதலமைச்சர் கலைஞர்.



புதுடில்லியில் நடைபெற்ற பெரியார் மய்யம் திறப்பு விழாவில் (2.5.2010) முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-



புதுடில்லியில் பெரியார்- மய்யம் கொண்டிருக்கிறார் என்று தம்பி திருமாவளவன் இங்கே உரைத்தார். நான் அதை வழிமொழிகிறேன்.



ஏனென்றால், - வழிமொழிகிறேன் என்று சொல்லு-வதற்குக் காரணம்; நான் நினைத்ததை அவர் உரைத்தார். எனவே நான் அதை வழிமொழிகிறேன்.



பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்ட-மாட்டார். தாண்டினாலும் ஆந்திரப்பிர-தேசம், கருநாடகம், கேரளா என்கின்ற அளவோடு நின்று-விடுவார் என்று எதிர்பார்த்திருந்த பழைமை-வாதி-களுக்கு_- மதவாதிகளுக்கு வியப்பூட்டும் வகை-யிலே நம்முடைய ஆருயிர் இளவல்- தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அயராத முயற்சியினாலும், தொடர்ந்த தொண்டாலும், அறவழிப் பணியினாலும் டில்லிப் பட்டணத்திலே பெரியார் மய்யம் கொண்டு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஏன், அய்ந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது என்றும் சொல்லலாம். மய்யம் கொண்டு புயல் வீசினால், அதனால் புயல் வீசிய பிறகு ஏற்படுகின்ற சேதாரங்கள் சில இருந்தாலும் கூட, விளைவு; அதன் பிறகு உன்னதமான வளர்ச்சி, மேம்பாடு என்ற நிலையில் அமையும் என்பதை அனைவரும் அறிவோம்.



அந்த நிலையிலேதான் டில்லிப் பட்டணத்திலே தந்தை பெரியார் அவர்களுடைய பெயரால் மய்யம் கண்டு அதனுடைய திறப்பு விழாவை நடத்தி, திறந்து வைக்கப்பட்ட கட்டடம், இடையில் சட்டப் பிரச்-சினைகள், விதிகள் இவைகள் காரணமாகக் காட்டப்-பட்டு -இடிக்கப்பட்டு, அதன் பின்னர் அருமைத் தலை-வர் வி.பி. சிங் போன்றவர்களுடைய முயற்சியினாலும், நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் அயராத் தொண்டினாலும் இன்றைக்கு புதுடில்லி-யிலே இந்த மய்யத்தை திறந்து வைக்கப்படுகின்ற வைபவம் இவ்வளவு சீரும், சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.



தேசிய அளவில் என் பணி!



நம்முடைய பெரும் மதிப்பிற்குரிய பரூக் அப்-துல்லா அவர்கள் பேசும் போது, நான் தேசிய அள-விற்கு பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.



அவருடைய தந்தை ஷேக் அப்துல்லா அவர்களே என்னிடத்தில் இதை பலமுறை சொல்லியிருக்கிறார்.



அவருடைய தந்தையார் காலத்திலிருந்து நான் காஷ்மீரத்து அரசியல் செய்திகளை அறிவேன். அவர் தந்தையார் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டுப் பகுதிக்கு நான் பலமுறை சென்று என்னுடைய அன்பை அவருக்குச் செலுத்தியிருக்கின்றேன். அவர் அங்கிருந்து விடுதலையான பிறகு கூட, அவர் மறைந்த நிலையில், அவர் சிறை வைக்கப்பட்டிருந்த அந்தப் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு ஷேக் அப்துல்லா மாளிகை என்று பெயர் வைக்க வேண்டு-மென்று கோரிக்கை வைத்து, அதை நான் நிறைவேற்றியுமிருக்கின்றேன்.



எனவே நான் அகில இந்திய அளவிலே வந்து-தான், அகில இந்தியாவுக்குத் தேவையான காரியங்-களைச் செய்ய வேண்டும் என்று இல்லை. இருந்த இடத்திலேயிருந்தே அவைகளைச் செய்யமுடியும் என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு (கைதட்டல்).



பெரியாரின் தாக்கம் எங்கும் தேவை!



காஷ்மீரத்திலே மாநில சுயாட்சி கருத்-தரங்கம் ஒன்றை நம்முடைய பரூக் அப்துல்லா அவர்-கள் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து கல்கத்-தாவிலே மறைந்த முதலமைச்சர் - கம்யூனிஸ்ட் கட்சியி-னுடைய முதலமைச்சர் ஜோதிபாசு அவர்கள் நடத்தி-னார்கள். சென்னையிலும் நடத்தியிருக்கிறோம். அந்த மாநாடுகளுக்கெல்லாம் நம்முடைய பரூக் அப்துல்லா அவர்களும் வந்திருக்கிறார்கள். அதைப்போலவே வங்கத்திலே உள்ள தலைவர்கள்_- அஜாய்நு முகர்ஜி போன்றவர்கள், கருநாடகத்திலே உள்ள தலைவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் அந்த மாநாட்டு அளவிலே சிறப்பித்துச் சென்றார்களே அல்-லாமல், அங்கே எடுத்துச் சொன்ன கொள்கை-களைப் பரப்பிடவேண்டும் என்ற அந்த முயற்சியிலே ஈடுபடவுமில்லை, ஈடுபடுவதற்கான நிலைமைகளும் உருவாகவில்லை. அதனால்தான் டெல்லியிலே மய்யம் கொண்ட பெரியார் மற்ற இடங்களில் எல்லாம் அந்தத் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. எல்லா இடங்களிலும் பெரி-யாருடைய தாக்கம், இந்த அலைகள், இந்த வேகம், இந்த செயல் செல்ல வேண்டும். அப்படிச் செல்லு-கின்ற காரணத்தால் இளைய தலைமுறை, இனி-வரும்காலம், இந்தியா என்றால் என்ன? இந்தியாவிலே நாம் யார்? இந்தியாவிலே இருக்கின்ற மாநிலங்களிலே வாழ்கின்றவர்கள், ஒரு மாநிலத்திலே உள்ளவர்-களுக்கு இன்னொரு மாநிலத்திலே உள்ளவர்கள் முரண்-பட்டவர்களா? மாறுபட்டவர்களா? என்ற இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் தரக்கூடிய சூழ்நிலை ஏற்படும். நான் என்னுடைய கவலையை இங்கே சொல்லுகின்றேன்.



தண்ணீரும், பக்கத்து மாநிலங்களின் மனோபாவங்களும்!



தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக நான் இருக்கின்றேன். ஆனால் தமிழ்நாட்டிற்கு எல்லா வளமும் உண்டு. இன்று நேற்றல்ல. அந்தக் காலத்-திலேயே தமிழ்நாட்டிலே எழுதப்படுகின்ற கதை-களிலெல்லாம் முகப்புரையில், நீர்வளம் நிலவளம் சூழ்ந்த தஞ்சைத் தரணியில் -என்றுதான் தொடங்-குவார்கள். அப்படித் தொடங்குவது - அதுவும் ஒரு கற்பனைதான். ஏன் அதை கற்பனை என்று சொல்லுகிறேன் என்றால், தமிழ்நாட்டில் எல்லா வளமும் உண்டு, ஆனால் நீர் வளம் குறைவு.



பக்கத்திலே இருக்கின்ற கேரளம், ஆந்திரம், கரு-நாடகம், இந்த மாநிலங்கள் நீர்வளம் நிரம்பியவை. பக்கத்திலே இருக்கின்ற அந்த நீர் வளத்தைத்தான் பெற்று தமிழ்நாடு வாழ வேண்டியிருக்கிறது. ஆனால், தங்களுடைய தேவைக்கு அதிகமாக இருக்கின்ற தண்ணீரை தமிழகத்துக்கு தரக்கூடிய மனோபாவம் - என்ன காரணத்தாலோ பக்கத்து மாநிலங்களிலே உள்ள சிலருக்கு ஏற்படுவதில்லை.



ஒருமைப்பாடு ஒரு வழிப்பாதையா?



நான் இந்திய நாட்டினுடைய தலைநகரத்திலே இருந்து சொல்லுகின்றேன்; ஒருமைப்பாடு ஒரு-வழிப்பாதையாக ஆகக்கூடாது! ஒருமைப்பாட்டில் எல்லா மாநிலங்களும் சகோதர மாநிலங்களாக ஒன்றுக்கொன்று உதவுகின்ற மாநிலங்களாக இருந்-தால்தான் அந்த ஒருமைப்பாடு சீரானதாக, சிறப்-பானதாக கருதப்படமுடியும்! பக்கத்திலே இருக்கின்ற தமிழ்நாட்டு மக்களை பட்டினி போட்டுவிட்டு, இன்னொரு மாநிலம் தண்ணீரை வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தால், அது வேடிக்கை காட்டுவதைவிட_ அப்படி வேடிக்கை காட்டுவதையும் அதனால் வேதனைப்படுகின்ற தமிழ்நாட்டையும் பார்த்துக் கொண்டு, அந்த வேடிக்கையை ரசித்துக் கொண்டிருப்பது இன்னும் தவறு.



நான் தலைநகரத்திலே இருந்து மீண்டும் சொல்லுகின்றேன்; இந்தியப் பேரரசு இனியாவது இந்த மாநிலங்களில் ஏற்படுகின்ற தகராறுகளை உன்னிப்பாகக் கவனித்து அவர்கள் அடித்துக்-கொண்டு அவர்களாக வரட்டும் என்று இல்லாமல் நமக்கும் பொறுப்பு உண்டு என்ற முறையிலே மத்திய அரசு அதிலே தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்று இந்த மய்யத்தின் திறப்பு விழாவிலே நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.



பெரியாருக்குப் பிறகு இளவல் வீரமணி



இந்த மய்யம் எல்லா வகையிலும் ஓங்கி வளர்ந்து, உயர்ந்த கொள்கைகளை இந்த வட்டாரத்திலே பரப்பும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஏனென்-றால் தந்தை பெரியாருடைய மறைவுக்குப் பின்பு திராவிடர் கழகத்தை, சுயமரியாதை இயக்கத்தைக் கட்டிக்காத்து அதை மக்களிடத்திலே நிரந்தர செல்வாக்குள்ள நிலையை உருவாக்குவதற்கு முடியுமா? என்ற அந்தக் கேள்விக்கு விடையாக வந்தவர்-தான் இங்கே அமர்ந்திருக்கின்ற அருமை இளவல் வீரமணி ஆவார்கள் (கைதட்டல்).



அவருடைய கையிலே, அவருடைய பொறுப்பிலே இன்றைக்கு திராவிடர் கழகத்தினுடைய பல பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன.



இங்கே இந்த விழாவில் இரண்டு சிறுவர்கள், சிறுமிகள் ஒரு லட்ச ரூபாய் என்றும் இன்னும் குறைவாகவும், அதிகமாகவும் நன்கொடைகளைத் தந்தார்கள் என்றால் என்ன காரணம்? இந்த மய்யம் மேலும் பலமாக விளங்க வேண்டும் என்பதற்காகத்-தான்! நானும் கடமைப்பட்டிருக்கிறேன். குரு தட்சணை வழங்குவதற்கு. (பலத்த கைதட்டல்).



பெரியாருக்குக் காணிக்கை ஆக்கப்பட்ட ஆட்சி!



ஈரோடு என்னுடைய குருகுலம். நம்முடைய வீரமணி அவர்கள் மாணவராக இருந்து பயின்ற அதே குருகுலத்தில் பயின்றவன் நான் (கைதட்டல்). கொஞ்சம் மூத்தவன் நான். ஆனால் பயின்ற போதே சமுதாயச் சீர்திருத்தங்கள் மாத்திரம் போதாது. கடவுள் மறுப்பு, மதபேத மறுப்பு, ஜாதி பேத மறுப்பு போன்ற இந்தக் கொள்கைகளோடே அரசியல் கருத்துக்களிலும், முற்போக்கான திட்டங்களைத் தீட்டி, பெரியாருடைய எண்ணங்களையெல்லாம் செயல்படுத்த வேண்டுமேயானால், அரசு கையிலே இருக்க வேண்டும்_- அதிகாரம் செலுத்துகின்ற அந்தப் பொறுப்பு கையிலே இருக்க வேண்டுமென்பதற்-காகத்தான், அதையும் கையிலே எடுப்பதற்குத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை எங்கள் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கினார்கள். உருவாக்கிய அண்ணா சொன்னார்கள், திராவிட முன்னேற்றக்கழக அரசு பெரியாருக்கு தரப்படுகின்ற காணிக்கை என்று சொன்னார்கள். அதுமாத்திரமல்ல, திராவிடர் கழகமும், திராவிடர் முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொன்னார்கள். அதைத்தான் என்னுடைய அருமை நண்பர் பரூக் அப்துல்லா அவர்களும் மற்றவர்களும் பேசும்பொழுது சுட்டிக்காட்டினார்கள் - என்னையும், வீரமணி அவர்களையும் இந்த இயக்கத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொன்னார்கள். இரட்டைக் குழல் துப்பாக்கி என வெறுமனே பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. காரியங்களைச் சாதிக்க வேண்டும். அந்தக் காரியங்கள் சில நேரங்களில் கடுமையாகத் தோன்றினாலும், பல நேரங்களிலே மிகக் கனிந்து-விட்டாலும், மக்களிடத்திலே அய்யப்பாடுகள் எழும், அந்த அய்யப்பாடுகளைப் போக்குகின்ற அளவிற்கு இந்த இயக்கம் தொடர்ந்து அரசியலிலும், சமுதாயத்-திலும், தொண்டாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தொண்டாற்றும் என்பதை தஞ்சையிலே அல்ல, திருச்சியிலே அல்ல, சென்னை-யிலே அல்ல - இந்திய நாட்டின் தலைநகரமாம் டில்லி-யிலே நான் அறிவிக்கின்றேன். இரு இயக்கங்களும் இணைந்து தொண்டாற்றி - எங்களுடைய அரசியல் கூறுபாடுகளால் ஏற்படுகின்ற நன்மை என்ன? சமுதாயப் பணிகளால் ஏற்படுகின்ற நன்மை என்ன? என்பதை இருசாராரும் இணைந்து தந்தாலும், அதை ஒருசாரார் சொல்வதைப்போல ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை இந்திய நாட்டு மக்கள் அனைவரும் அடையவேண்டும் என்பதுதான் இந்த நாளில் நான் எதிர்பார்க்கின்ற சூளுரையாகும்.



பெரியார் பணிகளை நினைத்தால் மயக்கமே வருகிறது!



தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கையில், நினைத்தால், திரும்பப் படித்தால், நமக்கே மயக்கம் வருகின்ற அளவிற்கு அவர் பணியாற்றியிருக்கின்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 34 ஆயிரத்து 433. அந்த 34 ஆயிரத்து 433 நாட்களில் பெரியார் சுற்றுப்பயணம் செய்த நாட்கள் 8 ஆயிரத்து 600 நாட்கள். பயணம் செய்த தூரம் 13 லட்சத்து 13 ஆயிரம் கிலோ மீட்டர். இன்றைக்கு நான் தங்கியிருக்கின்ற டில்லிப் பட்டணத்திலே இருந்து இங்கே வருவதற்கு நேரம் ஆக ஆக என்னை இங்கே அழைத்து வந்த நம்முடைய நண்பர்களிடத்திலும், கார் ஓட்டியினிடத்திலும் இன்னும் எத்தனை கிலோ மீட்டரப்பா என்று கேட்டுக்-கொண்டிருந்தேன். காரணம் இந்த தொலைவே எனக்கு சற்று தொல்லையாகத் தெரிந்தது.



ஆனால், பெரியார் 13 லட்சத்து 13 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் செய்திருக்கின்றார். பேசிய நேரம் 21 ஆயிரத்து 400 மணி. பேச்சுக்கள் அனைத்தையும் ஒலிபரப்பினாலும் ஒரு யூகம், அவர்களுடைய பேச்சுக்கள் அனைத்தையும் ஒலிபரப்பினாலும் அந்த ஒலிபரப்புத் தொடங்கி முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் அய்ந்து மாதம் பதினொரு நாட்கள் ஆகும் (பலத்த கைதட்டல்).



இதே போன்ற கருத்துக்களை எடுத்துச் சொன்ன சாக்ரடீஸ் போன்றோர் ஏன் வெற்றி பெறவில்லை என்றால், அவர்களெல்லாம் மதம் என்கின்ற சில பிடிப்புகளிலே சிக்கிக் கொண்ட காரணத்தால், அது எடுபடவில்லை.



பெரியார் கொள்கைகள் வாழ்ந்து கொண்டிருப்பது ஏன்?



பெரியாரோ எல்லா கட்டுக்களையும் அறுத்து-விட்டு சுயமரியாதை என்ற அந்த உணர்வோடு கட்டுக்களற்ற ஒரு கட்டிளங்காளையாக அந்த இயக்கத்தை வளர்த்து, இன்னும் சொல்லப்போனால் ஒரு பிரச்சாரகன், ஒரு குரு நாதர் சொல்லுகின்ற உபதேசமாக அல்லாமல், அந்தக் கொள்கைகளை எல்லாம் இதயத்திலே பதியவைத்துக் கொண்டு பணியாற்றுகின்ற இளைஞர்களை, வாலிபர்களை, வயோதிகர்களை, ஆடவர்களை, பெண்களைக் கொண்ட ஒரு இயக்கமாக இதை மாற்றினார்.



அப்படிப்பட்ட இயக்கமாக மாறிய காரணத்தினால் தான், இன்றைக்கும் பெரியாருடைய கொள்கைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, வாழ வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.



பெரியாருடைய திரைப்படத்தை நம்முடைய இளவல் வீரமணி அவர்களுடைய பெரும் முயற்சிகளால் வெளியிட்ட போது, நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். அதை வெளியிடுவதற்கு இன்னும் சில ஏற்பாடுகள் தேவையானதாக இருந்தது. அதனால் வீரமணி அவர்களிடத்திலே நானே_ என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். உங்களால் ஆன உதவியைச் செய்யலாம் என்று சொன்னார். நானே வலியச் சென்று, அந்தப் படத்தை மேலும் சிறப்புடன் ஆக்குவதற்கும் வெளியிடுவதற்கும் 95 லட்சரூபாயை நான் அந்தப் படத்திற்காக அரசின் சார்பாகத் தந்தேன் (கைதட்டல்). சிலபேர் கேட்டார்கள், எப்படி பெரியார் படத்திற்காக 95 லட்ச ரூபாயை அரசாங்கப் பணத்தைத் தரலாம்? என்று கேட்டார்கள். இப்படி தலைவர்களுடைய படத்தை வெளியிடுவதற்கு அரசாங்கத்தினுடைய பணம் செலவழிக்கப்பட்ட வரலாறு எல்லாம் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டினேன். படம் வெளிவந்தது, பெரும் வெற்றியினைப் பெற்றது என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். படம் வெற்றி பெற்றால் மாத்திரம் போதாது, படத்தினுடைய கதாநாயகன் பெரியார் சொன்ன கருத்துக்கள் வெற்றி பெற்றதா என்பது தான் முக்கியம்.



குருதட்சணை!



95 லட்ச ரூபாய் பெரியார் திரைப்படத்திற்கு அன்றைக்குக் கொடுத்தேன், காணிக்கை! இந்த மய்யத்திற்கு மேலும் 5 லட்சம் கொடுத்து இந்தக் காணிக்கையை ஒரு கோடி ரூபாயாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று வீரமணி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.



இந்த அய்ந்து லட்ச ரூபாயை எங்கேயிருந்து கொடுப்பது -அரசாங்கத்திலே இருந்து கொடுக்கிறேனா அல்லது எங்கள் கட்சியிலிருந்து கொடுக்கிறேனா அல்லது நானே தனிப்பட்ட முறையிலே கொடுக்-கிறேனா என்பதையெல்லாம் நான் சென்னைக்கு சென்ற பிறகு அறிவிப்பேன் என்று கூறி,- இந்த மய்யத்திலே உரையாற்றிய நம்முடைய மூப்பனார் அவர்களுடைய அருமை மகன் தம்பி ஜி.கே.வாசன் அவர்களுக்கும், தம்பி திருமாவளவன் அவர்களுக்கும், என்னுடைய அருமை நண்பர் காஷ்மீரத்துச் சிங்கத்தின் சிங்கக் குட்டியாக உலவி என்றும் என்னுடைய நண்பராக இருந்த நம்முடைய ஷேக் அப்துல்லா அவர்களுடைய மகன் பரூக் அப்துல்லா அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து இந்த பெரியாருடைய கொள்கைகளை எடுத்து உலகமெங்கும் பரப்புகின்ற பணியை வீரமணி அவர்கள் தொடர்ந்து செய்யட்டும், செய்ய நாம் துணை நிற்போம், நிற்க வேண்டும் என்று கேட்டுக்-கொள்கிறேன். _இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.





--------------------------------------------------------------------------------



வேண்டுகோள் அல்ல - கட்டளை!



பெரியார் பெயரை மாத்திரம் சொல்லிக்-கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்-தால், அது பெரியாருக்குச் செய்யும் நன்றி ஆகாது. பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு வாஸ்து பார்த்துக் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்கின்ற நன்றி ஆகாது. பெரியாருடைய கொள்-கையை உண்மையிலே மனதிலே பதியவைத்துக் கொண்டிருந்தால், அவன் நாத்திகவாதியாக இருந்தாலும், அவன் பகுத்தறிவுவாதியாக இருந்-தாலும், யாராக இருந்தாலும் இரட்டை மனி-தனாக இருக்கக் கூடாது. இதுதான் இந்த பெரியார் மய்ய திறப்பு விழாவிலே கண்டிப்பாக அரசியல் துறையிலே இருக்கின்ற என்னுடைய கழக தோழர்களுக்கும் நான் சொல்லுகின்ற வேண்டு-கோளாகும். இன்னும் சொல்லப்போனால் கட்டளையாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் (கைதட்டல்).



டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவில்

முதலமைச்சர் கலைஞர் (2.5.2010)

யார் அந்த பாவி?

திமுகவின் முரசொலி நாளிதழில் சுப.வீ. எழுதியுள்ள கட்டுரை:




சென்னை: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட காரணமாக இருந்தவர் போயஸ் தோட்டத்தில்தான் உள்ளார். அவர் வீட்டுக்கு முன்னால் போய் வைகோவும் நெடுமாறனும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரான‌ சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.



கடந்த சில நாட்களாகவே மிகுந்த பரபரப்புடன் பேசப்பட்டுவரும் ஒரு செய்தியில், அடிப்படையான சில உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்படுட்டுள்ளன என்பதை இப்போது அறிய முடிகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார், தமிழக மண்ணில் கால் வைக்கவும் அனுமதிக்காமல், மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட மனிதநேயமற்ற செயலை அனைவரும் கண்டிக்கிறோம்.



மக்களவையிலேயே திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இதுகுறித்து கவன ஈர்ப்புச் செய்துள்ளார். இந்நிலையில் உண்மைகளை மூடிமறைத்து முதல்வர் கருணாநிதி மீது பழிபோட்டு, உண்ணாவிரதம், கண்டனம் என்று ஒரு மலிவான அரசியல் இங்கே அரங்கேற்றப்படுகிறது.



விமான நிலையம் பரபரப்பாக இருந்த அந்த நள்ளிரவில் தோழர் தியாகு, என்னைத் தொலைபேசியில் அழைத்து அந்தச் செய்தியைக் கூறினார். பத்திரிகையாளர்கள் மூலமாகக் கவிஞர் தாமரைக்கு செய்தி கிடைத்ததாக‌க் கூறிய அவர், உங்களால் ஏதும் உதவ முடியுமா? என்று கேட்டார். முதலமைச்சரைத் தொடர்பு கொள்ள வழி உள்ளதா என்றும் வினவினார்.



இந்த நேரத்தில் முதல்வரை நான் எப்படித் தொல்லை செய்ய முடியும் என்றேன். அதில் உள்ள நியாயத்தை அவரும் புரிந்து கொண்டார். பிறகு தமிழின உணர்வாளர்கள், பத்திரிகையாளர்கள் சிலர் அடுத்தடுத்துத் தொலைபேசியில் பேசினர்.



இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, 'உதவிட இயலுமா?' என்று கேட்டார்.



அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், 'முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே' என்றேன்.'இல்லையில்லை விசா கிடைத்துவிட்டதால், பரபரப்பாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் யாருக்குமே சொல்லவில்லை' என்று அவர் கூறினார்.



அப்படியானால் வைகோவிற்கும், நெடுமாறன் அய்யாவிற்கும் மட்டும் எப்படி தெரிந்தது என்ற என் கேள்விக்கு அவருக்கும் விடை தெரியவில்லை.



வயதான தாயை அழைத்து வந்து, அவருக்குச் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட, அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமே இங்கு அரசியல் தலைவர்கள் சிலரிடம் விஞ்சியிருப்பதை இப்போது நம்மால் அறிய முடிகிறது.



விமான நிலையத்தில், தொடர்பே இல்லாமல் முதல்வர் கருணாநிதியைக் குற்றஞ்சாட்டி வைகோ (வழக்கம் போல்) ஆவேசமாய்ப் பேசுவதை ஜெயா தொலைக்காட்சி மறுநாள் தொடர்ந்து காண்பித்தது. "அடடா, பார்வதி அம்மாள் மீது ஜெயலலிதாவிற்குத்தான் எத்தனை அன்பு" என்று என்று விவரம் அறியாதவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.



கருணாநிதியைத் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது என்று அறிக்கை விட்டார் நெடுமாறன்.



எத்தனை பெரிய மோசடிகள் இவை. 2003ம் ஆண்டு, பிரபாகரனின் பெற்றோரை இந்தியாவிற்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது, அவர்களைக் கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை ஒரு வார்த்தை கூடக் கண்டிக்காதவர்கள், அவரால்தான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்ற உண்மையைத் திசைதிருப்ப ஆடும் நாடகத்தைத்தான் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது.



பார்வதி அம்மாள் விரும்பினால், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, அவர்களை அழைப்பதற்கு ஆவன செய்வேன் என்று கூறும் முதல்வர் கருணாநிதியை தமிழ்ச் சமூகம் போற்றும்.



வயது முதிர்ந்து, நோயினாலும், பல்வேறு சூழல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள அந்தத் தாய் மன அமைதியுடன் வாழ நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை மனிதநேயம் கொண்ட அனைவரின் விருப்பமாகவும் இருக்க முடியும். நாம் அதற்கு நம்மால் இயன்றதைச் செய்வோம்.



அதே நேரத்தில் திருப்பி அனுப்பிய 'பாவிகளை' எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.



நீங்கள் தேடும் 'அந்தப் பாவி' போயஸ் தோட்டத்தில்தான் உள்ளார். அவர் வீட்டுக்கு முன்னால் போய் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள்.



இவ்வாறு சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார்.

தமிழருவி மணியன் எழுத்துகளில் வெறுப்பின் வெளிப்பாடு

தமிழருவி மணியன், ஜுனியர் விகடன் வார இதழில் நாம் எங்கே போகிறோம் என்று ஒரு தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். விதவிதமான செய்திப் பிழைகளும், வெறுப்பின் வெளிப்பாடுகளுமாய் அத்தொடர் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழ் பற்றி எழுதியிருந்த போது முற்றிலும் உண்மைக்கு மாறான ஒரு தகவலை அவர் வெளியிட்டிருந்தார். 1998 வரையில், கல்விக் கூடங்களில் தமிழைப் பயிற்றுமொழி ஆக்குவது குறித்து, அதற்கு முன்பு மூன்று முறை முதல்வராக இருந்த கலைஞர் சிந்திக்கவே இல்லை என்பது அவருடைய குற்றச்சாட்டு.




மணியன் செய்திகள் தெரியாதவர் இல்லை. கலைஞர் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் எப்போதும் அவருக்குள்ள வெறுப்பு காரணமாக அவர் அப்படி எழுதியிருக்கக்கூடும். எனவே, அவருக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருப்பது நம் நோக்கமில்லை. இருப்பினும் தமிழ் மக்களுக்கு உண்மை உரைக்க வேண்டிய கடமை நம் அனைவ ருக்கும் உள்ளது.



முதல் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்ற காலத்திலேயே 1970 ஆம் ஆண்டே கல்லூரி வரை தமிழே பயிற்று மொழி என்னும் சட்டத்தை அவர் முன்மொழிந்தார். 1970 நவம்பர் 30 அன்று தமிழ்நாடு சட்டமன் றத்தில், அவரால் முன்மொழியப்பட்ட அச்சட்ட முன்வடிவை, ம.பொ.சி. வழி மொழிந்தார். சட்டமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் காங்கிரசார்



அத்தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தனர். 10.12.1970 அன்று மதுரையில் நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் மாநாட்டில், கலைஞர் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இன்றைய தமிழ்த்தேசியத் தலைவர்களும் அன்று அக்கூட்டத்தில் இருந்தனர். இராஜாஜியின் சுதந்திராக் கட்சி அத்தீர்மானத்தைக் கடுமையாகச் சாடியது.



சட்ட மன்றத்தில் இது குறித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர் விநாயகத்திற்கும், முதல மைச்சருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அதில் ஒரு பகுதி :



விநாயகம் : இந்தியைத் திணிப்பதாகக் கூறியவர்கள் இப்போது தமிழைத் திணிக்கலாமா? ஆங்கிலம் படிக்காமல், புறநானூறு படித்திருக்கிறேன் என்றால் சிம்சன் போன்ற தனிப்பட்ட கம்பெனிகளில் வேலைக்கு எடுத்துக் கொள்வார்களா ?



முதல்வர் கலைஞர் : தமிழ் பயிற்சி மொழி என்பது புறநானூறு, அகநானூறு படிப்பதல்ல. தமிழ், அகநானூறு, புறநானூறோடு நின்றுவிடக் கூடாது. விஞ்ஞானப் புதுமைகளையும் சொல்லும் மொழியாக மாற வேண்டும் என்பதற்காகத்தான், தமிழ் பயிற்று மொழி ஆக வேண்டும் என்கிறோம்.



(தமிழகச் சட்டமன்ற விவாதங்கள் - 30.11.1970)



சட்டமன்றத் தீர்மானத்தோடு நின்றுவிடாமல், 1970 டிசம்பர் 17,18 ஆகிய நாள்களில் தி.மு.க. சார்பில் வேலூரில், தமிழ்ப்பயிற்றுமொழி ஆதரவு மாநாடு ஒன்றும் நடைபெற்றுள்ளது. 10.01.1971 அன்று, தமிழ்ப் பயிற்று மொழித் தீர்மானத்தை ஆதரித்துத் தமிழகம் எங்கும் தமிழர் பேரணி நடத்துமாறும் தி.மு.கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



இந்தச் சூழலில் 1970 டிசம்பர் 1 ஆம் நாள் விடுதலையில், தந்தை பெரியார், ‘நமது கடமை’ என்னும் தலைப்பில், தமிழ்ப்பயிற்று மொழியை ஆதரித்து தலையங்கம் ஒன்றும் எழுதியுள்ளார்.



அத்தலையங்கத்திலிருந்து சில பகுதிகள் :



பாட மொழிப் பயிற்சியைத் தங்களது யுத்த தளவாடமாக எடுத்துக் கொண்டு, ஆச்சாரியாருடைய சுதந்திராக் கட்சியும், ஆரிய ஏடுகளும் இந்த ஆட்சியைக் கவிழ்க்கக் காரணம் காட்டி மாணவர்களைத் தூண்டி விடுகின்றன. இதற்குப் பார்ப்பனர் அல்லாத விபீ­ணர்களும் ஆளாகிவிட்டிருக்கிறார்கள்.



தமிழ் மொழி, ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தகறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பு இல்லை. நான் பேசுவதும், எழுதுவதும் தமிழில்தான்.



பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு நன்மைகள் செய்யும் நோக்கத்தோடு, தமிழ் மொழிப் பாடத்திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று கருதுகிறேன்.



இவ்வாறு ஆதரவு, எதிர்ப்பு ஆகியவற் றிற்கு இடையே முன்மொழியப் பட்ட அச்சட்டம், 1971 தொடக்கத்தில் திடீரென்று வந்துவிட்ட தேர்தலால் நிறைவேறாமலேயே போய்விட்டது. உண்மைநிலை இவ்வாறிருக்க, நேர்மையானவர் என்று இப்போதும் நம்மால் கருதப்படும் தமிழருவிமணியன் போன்றவர் கள், தவறான தகவல்களை மக்களுக்குத்தருவது எவ்விதத்தில் நியாயமாகும்?



1970 ஆம் ஆண்டில் மணியன் எந்தக் கட்சியிலிருந்தார், தமிழ்ப் பயிற்று மொழித் தீர்மானத்திற்கு ஆதரவாக என்ன நட வடிக்கைகளை மேற்கொண்டார் என்பதற்கு அவர் மனசாட்சி விடை சொல்லட்டும்.



- சுப.வீரபாண்டியன்



 

விலை போன அடிமை!


தோழர் பெரியார்தாசன் இவ்வாரம் வெளிவந்த இசுலாமிய இதழ்கள் அனைத்திலும் கதாநாயகனாகிவிட்டார். கடந்த மார்ச் 12 ஆம் தேதி அரபு நாடுகளில் ஒன்றான ரியாத்தில், அவர் இசுலாத்தைத் தழுவியதாக அறிவித்ததே இதற்குக் காரணம். பெரியார்தாசனின் இந்த முடிவுகள் எல்லாம், நமக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. பெரியார் இயக்கத்தினர், தோழர் பெரியார்தாசனை நன்றாகவே புரிந்தவர்கள் தான். பெரியார் சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த அவருக்கு, தமிழகம் முழுதும் பெரியார் இயக்கத்துடன் பல ஆண்டுகளாகத் தொடர்பு உண்டு என்பதும், எல்லோரிடமும் இனிமையாகவும், தோழமையாகவும் பழகக் கூடியவர் என்பதும் எல்லோருக்குமே தெரியும். பகைமை பாராட்டாத நண்பர். மக்களிடம் பெரியார் கருத்துகளைப் பரப்புவதில் தன்னுடைய பேச்சுத் திறமையை வலிமையாகப் பயன்படுத்தியதால், பெரியார் இயக்கத் தோழர்கள் அவரை விரும்பி கூட்டங்களுக்கு அழைத்தார்கள். இப்போது பெரியார் சிந்தனைப் பள்ளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ஒரு மதவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதால், பெரியார் இயக்கத் தோழர்கள் சிலர் நம்முடைய பெரியார்தாசன், இப்படிப் போய்விட்டாரே என்று ஆதங்கப்பட்டார்கள். அவரது கடந்த கால வரலாறுகளை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு, இதில் வியப்பு ஏதும் இருக்காது என்பது தான் நமது கருத்து.

அவர் எப்போது பெரியார்தாசன் ஆனார் என்ற கேள்விக்கு அவரே இப்போது ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார். பச்சையப்பன் கல்லூரியில் அவர் மாணவராக இருந்த காலத்தில், பெரியார் பேச வந்தபோது, ஒரு கவிதையை எழுதிப் படிக்க விரும்பியிருக்கிறார். அப்போது அவரது உண்மைப் பெயர் சேஷாசலம். பட்டை சந்தனம், குங்குமப் பொட்டு என்று பக்தி பழமாகக் காட்சியளித்தவர். அந்தக் கவிதையை தனது பேராசிரியர் ஒருவரிடம் அவர் படித்துக் காட்டியபோது, பேராசிரியரோ மாணவர் பெயர் ‘சேஷாசலம்’ என்று இருக்கிறதே என்று தயங்கியிருக்கிறார். உடனே, அடுத்த விநாடியே, தன்னுடைய கவிதையை பெரியாருக்கு முன் படிக்க வேண்டும் என்ற துடிப்பில், பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

“அன்று பெரியார்தாசன் என்று பெயரிட்டபோது, என் தலையில் பட்டை, சந்தனம், குங்குமப் பொட்டு என்று பக்திப்பழம் போன்று காட்சி தந்தேன்” என்று அந்தப் பேட்டியில் (மக்கள் உரிமை, இதழ்,மார்ச். 19) அவர் கூறுகிறார். ஆக, பெரியார் கொள்கையை ஏற்காத காலத்திலே, தனது கவிதையை பெரியார் முன் படிக்கும் ஆர்வத்துக்காக ‘பெரியார்தாசனாக’ பெயர் மாற்றிக் கொண்டவர் தான் பெரியார்தாசன்.

சென்னை பெரியார் திடலில் 1980-களில் நடந்த பயிற்சி முகாமில் மாணவராக பங்கேற்று, திராவிடர் கழகத்தின் பிரச்சாரகராக மேடை ஏறிய பெரியார்தாசன், படிப்படியாக தனது பேச்சாற்றலை வளர்த்து, மக்கள் செல்வாக்கைப் பெற்ற நிலையில், திராவிடர் கழகத்துடன் கருத்து வேறுபாடு எழுந்தது. செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த பெரியார் சமதர்மம் இயக்கத்தில் இணைந்து செஞ்சட்டைப் போட்டு, ‘சமதர்மம்’ பேசலானார்.

அதன் பிறகு, தலித் இயக்கங்களோடு நெருங்கி, அம்பேத்கரின் சாதி ஒழிப்பு, இந்து மத எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்புவதில் தீவிரம் காட்டினார். அதே காலகட்டத்தில் தன்னை புத்த மார்க்கத்தில் இணைத்துக் கொண்டு தனது பெயரை சித்தார்த்தன் என்று மாற்றிக் கொண்டார். சில காலம் சித்தார்த்தன் என்ற பெயரோடு கூட்டங்களில் பேசிய அவர், மீண்டும், தனது பெயரை பெரியார்தாசன் என்றே போடுமாறும், சித்தார்த்தனை தவிர்த்து விடுங்கள் என்று வேண்டுகோள் வைத்து, பெரியார்தாசன் ஆனார்.

பெரியார்தாசனை அழைத்துக் கூட்டங்களை நடத்துவதற்கு பெரியார் இயக்கத் தோழர்கள் மிகவும் விருப்பமாகவே இருந்தாலும், குறைந்த செலவில் பரப்புரை நடத்தும் தோழர்களின் பொதுக் கூட்ட வரவு செலவுகளுக்குள் பெரியார்தாசனை அடக்க முடியாத நிலை வந்ததால், அவரை வைத்து கூட்டங்கள் நடத்துவது குறைந்தது.

அது மட்டுமல்ல, அனைவரிடமும் அன்பு பாராட்டும் அவர், மறுக்காமல் ஒரே தேதியை ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்களுக்கு தந்துவிடும் போது, எந்த ஊருக்கு அவர் வரப்போகிறார் என்ற குழப்பத்திலும் தோழர்கள் தடுமாறும் நிலை வந்துவிட்டது. இந்த நிலையில் தமிழ்ச் சான்றோர் பேரவையில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழகம் முழுதும் ஒரு சுற்று வந்தார். அப்போது ஆதி சங்கரர் தத்துவம், மிகவும் முற்போக்கானது; புரட்சிகரமானது என்று ‘நந்தன்’ பத்திரிகையில் எழுதினார்.

ஒரு கட்டத்தில் பேரவைக் கூட்டங்களும் மெல்ல மெல்ல குறைந்த நிலையில் தன்னம்பிக்கைக்கான கருத்தரங்குகளை ஒரு வர்த்தக நிறுவனத்துக்காக பேசக் கிளம்பினார். தன்னம்பிக்கைப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டினார். அப்படித் தன்னம்பிக்கையை விதைத்து வரும்போது, எந்த நிறம் கொண்ட ‘கல்லை’ நகைகள் வழியாக அணிந்தால், ‘ராசி’ கிடைக்கும் என்று தொலைக்காட்சியில் ‘ராசிக் கல்’ பரப்புரையில் இறங்கினார். பெரியார் தொண்டர்கள், “என்ன, இப்படி, நமது பெரியார் தாசனா?” என்று கேட்டார்கள். ராஜராஜன் என்ற தன்னுடைய நண்பர் ஒருவருக்காக, அப்படி தொலைக்காட்சியில் பேச நேரிட்டது என்றும், அதற்காக என்னை பெரியார் இயக்கம் புறக்கணிக்க வேண்டுமா? என்று வேதனைப்பட்டதோடு, சென்னையில் நடந்த ஒரு கூட்டத்திலும் இதை வெளிப்படையாகவே பேசினார்.

அதன் பிறகு, பெரியாரும், சிங்காரவேலரும் சேர்ந்து தொடங்கிய சுயமரியாதை - சமதர்ம இயக்கத்தை மீண்டும் தொடங்கிவிட்டதாகவும், தான் அதன் பொது செயலாளர் என்றும் கூறி வந்தார். பதவி ஓய்வுக்குப் பிறகு மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான ஆலோசனை மய்யங்களைத் தொடங்கி நடத்தி வந்தவர், இப்போது இஸ்லாத்தைத் தழுவிவிட்டதாக அறிவித்திருக்கிறார். ஆக, சேஷாச்சலம் - பெரியார் தாசன் - கவுதமன் - மீண்டும் பெரியார் தாசன் - என்ற அவரது பரிணாம "வளர்ச்சி”, ‘அப்துல்லாஹ்’ என்ற கட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. இப்போது இந்த முடிவுக்கு வந்ததற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார்.

அவரோடு 11வது வகுப்பு வரை படித்த பள்ளித் தோழர் சிராஜ்தீன் என்பவரை, 2000 ஆம் ஆண்டில் ஓர் இரவு அவர் சந்தித்துப் பேசினாராம். சிராஜ்தீன் எழுப்பிய கேள்விகள் அவரை அன்று இரவு முழுதும் தூக்கம் வராமல் செய்து விட்டது என்கிறார். அப்படி,பெரியார்தாசனை தூக்கம் வராமல் செய்துவிட்ட ‘பொருள் பொதிந்த’ கேள்வியையும் பெரியார் தாசன் கூறியிருக்கிறார். “நீ இறை மறுப்பாளனாக பிறக்கவில்லை. இறக்கும்போது இறை மறுப்பாளனாக இறக்கக் கூடாது” என்ற சிராஜ்தீன் சிந்தனைதான், பெரியார்தாசனின் தூக்கத்தைக் கலைத்து விட்டதாம். அந்த இரவு - அந்த கேள்விதான் அவரை இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கைக்குக் கொண்டு வந்த மகத்தான இரவு ஆகும். அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு முதல் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை முற்றாகத் தாம் நிறுத்திக் கொண்டுவிட்டதாக பெரியார் தாசன் கூறுகிறார். ஆனாலும் ஆறு ஆண்டுகள் கழித்து 2010 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தான், அந்த ‘ரகசியத்தை’ நாட்டுக்கு வெளியிட்டிருக்கிறார். ஆக, பெரியாரிஸ்டாக இருந்து அவர் இசுலாமைத் தழுவவில்லை. அவர் கடவுள் மறுப்பை விட்டு 6 ஆண்டுகளாகிவிட்டது. கடவுள் நம்பிக்கையாளராக மாறிய பிறகே இசுலாத்தை தழுவியிருக்கிறார்.

“இழிவு ஒழிய இசுலாமே நன்மருந்து” என்று பெரியாரே கூறியிருப்பதாக ஒரு பேட்டியில் பெரியார் தாசன் கூறியிருப்பதால்,நாம், சில விளக்கங்களைக் கூற வேண்டியிருக்கிறது. இந்த விளக்கங்கள்கூட, பெரியார்தாசனுக்கு அல்ல. காரணம்,தீண்டாமையிலிருந்து விடுபடுவதற்கு மட்டுமே இசுலாத்திற்கு மாறலாம் என்று பெரியார் கூறியதும், அதுவும், அந்த ஆலோசனை சுயமரியாதை இயக்கத்தினருக்கு அல்ல. தீண்டாமையால் பாதிக்கப்படும் வெகுமக்களுக்குத் தான் என்பதும், பெரியார் தாசன் அறிந்தவர் தான்! (பெரியாரின் அந்தக் கட்டுரை, இதே இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது) இறைவன் இருக்கிறான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட முன்னாள் பெரியார் தாசன், இனி டார்வின் பரிணாம வளர்ச்சி மற்றும் உயிரியல் கொள்கையை மறுக்க வேண்டும். மார்க்சின் பொருள் முதல்வாதக் கோட்பாட்டைப் பொய் என்று கூற வேண்டும். பெரியாரின் கடவுள் மறுப்பு அர்த்தமற்றது என்றெல்லாம் பேச வேண்டும்.

“1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு எழுத்து, ஒரு புள்ளி, ஒரு கமா கூட மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே வேதம், இறைவனால் நேரடியாக அருளப்பட்ட வேதம், திருக்குர்ரான் தான்” என்று அவர் பேட்டியில் கூறியுள்ளதை நியாயப்படுத்தி விளக்க வேண்டும்.

இப்படி எல்லாம் பேச வேண்டிய சுமையை நமது முன்னாள் தோழர் தமது தோள் மீது சுமக்க வந்திருக்கிறாரே என்ற கவலைதான், நமக்கு! 1400 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட ஒரு கருத்தை, அதை இறைவன், நேரடியாக சொல்லிய ஒரே காரணத்துக்காக 1400ஆண்டுகால இடைவெளியில் சமூகத்தில் நடந்த மாற்றங்கள், உலகில் நடந்த திருப்பங்கள், விஞ்ஞான வளர்ச்சி, அத்தனைகளையும் ஓரமாக தூக்கிக் கடாசி எறிந்து விட்டு, பெரியார் தாசன் எப்படித்தான், நியாயப்படுத்தப் போகிறாரோ தெரியவில்லை. ஆனாலும் அவர் சமாளிப்பார். இனி மேல் அவர் மதக் கூட்டங்களிலே மட்டும் தானே பேச வேண்டியிருக்கும்? அதனால் பிரச்சினையில்லை. அவர்களிடம் கைதட்டல் வாங்கும் திறமை அவருக்குத்தான் நன்றாக உண்டே! என்ன இருந்தாலும் நல்ல பேச்சாளர் அல்லவா? ஆனாலும், நமக்கு ஒரு வருத்தம் உண்டு. தனது பிரச்சாரத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களை பெரியார் கொள்கைக்குத் திருப்பியதாக கூறும் பெரியார் தாசன், இப்போது பெரியார் கொள்கைக்கு விடைக் கொடுத்துத் திரும்பும்போது ‘ஒற்றை’ தனி மனிதராகத் தானே போக வேண்டியிருக்கிறது என்ற அந்த ஒரு வருத்தம் தான்! வேறு ஒன்றுமில்லை!

- பெரியாரிஸ்ட்

ஞாயிறு, 2 மே, 2010

பெரியாரும் வடபுலமும்!

பெரியாரும் வடபுலமும்!

தமிழரின் மான மீட்பர் எங்கள் அய்யா பெரியார்!

பெரியார் மையம் இன்னும் ஆயிரம் எழட்டும் !


செருப்பு ஒன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்றார் கவிஜர் கருணானந்தம் ,இன்று நாம் சொல்ல வேண்டியது ஒரு பெரியார் மையம் இடித்தால் ஓர் ஆயிரம் பெரியார் மையம் முளைக்கும் என்பதே!சுனா ஏற்பட்டால் பா .ஜ .க ஆட்சி துணையோடு எவ் வித முன் அறிவிப்பும் இன்றி இடித்து தள்ளப்பட்டது .பெரியார் தந்த புத்தியே போதும் என கொள்கை முழக்கமிடும் தமிழர் தலைவர் வீரமணி உணர்சிகளுக்கு இடம் கொடுக்காமல் அறிவு கொண்டு செயலற்றியதின் விளைவு இன்று தலை நகர் டெல்லி-இல் இரண்டு பெரியார் மையம் !இனி மாநிலத்திற்கு மாநிலம் பெரியார் மையம் அமையட்டும் !பெரியார் கொள்கை பரவட்டும்!