வெள்ளி, 8 அக்டோபர், 2021

நமீதாவின் நியாயங்களில் நிராகரிக்கப்பட வேண்டிய சில நியாயங்கள் .....




 கடந்த நான்கு  BIGBOSS நிகழ்வுகளை காட்டிலும் இந்த

 BIGG 5 BOSS பாராட்டக்கூடியதாகவே உள்ளது. கிராமிய கலைஞர், திருநங்கை, கானா மற்றும் கிராமிய பாடகர்கள் என ஊடக வெளிச்சம் பெற வேண்டிய கலைஞர்களின் பிரதிநிதிகளாக சிலர் இடம் பெற்று உள்ளனர்

 

நேற்றைய நிகழ்வு குறிப்பாக திருநங்கை நமீதா அவர்கள் பதிவு செய்த மாற்று பாலினம் சந்திக்கும் பிரச்சினைகள் , வலிகள், அவமானங்கள் ,துயரங்கள் விஜய் டிவி என்னும் பெரு ஊடகத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதையாக மாறியுள்ளது என்றால்  மிகையில்லை

 

நமீதா தன் வாழ்க்கை குறித்து பதிவு செய்யும்போது கசிந்துருகாத உள்ளங்களே இருக்காது . நிச்சயம் நமீதா சாதனையாளர் தான். மாற்று கருத்துக்கு இடமில்லை .ஆனால் அவர் வாழ்வில் மனநல மருத்துவர்கள், மன நல மருத்துவமனைகள் அவரை கொடுமைப்படுத்தியதாகவும் , பாலின மாற்றுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறியதை உளவியல் ஆலோசகராக என்னால் நம்ப இயலவில்லை

 

மாற்று பாலினம் குறித்த சிக்கல்களை முழுமையாக அறிந்தவர்கள் தான் மன நல மருத்துவராகவும் மன நல ஆலோசகராகவும் இருக்க இயலும்.  நானறிந்த வரை அவர் கூறியது போன்று உளவியல் கற்ற ஒருவரும் நடந்திருக்க மாட்டார்.   நமீதா கொஞ்சம் மிகைப்படுத்தி கூறி இருக்க வேண்டும் அல்லது முறையான மன நல மருத்துவரையோ./ஆலோசகரையோ சந்தித்திராமல் இருக்க வேண்டும்

 

இன்றைக்கு மாற்று பாலினம் போராடி சிறிதளவாவது பெற்றிருக்கிற சமூக அங்கீகாரத்திற்க்கு பின்புலத்தில் ஆயிரமாயிரம் மன நல மருத்துவர்கள் /மன நல ஆலோசகர்கள் , சமூக சேவகர்களின் பங்களிப்பு இருக்கிறது. நமீதா அவர்களின் வாழ்க்கையிலிருந்து அது தவறாக புரிந்து கொள்ளப்படக்கூடாது

 

மற்றபடி நமீதா அவர்களின் வாழ்க்கை என்பது ஒரு சோற்றுக்கு ஒரு பதம் போன்றது தான் . இது போல அல்லது இதைவிட துயரமான பல மாற்று பாலினத்தவர்கள் வாழ்க்கை இருக்கிறது. பாலின சமத்துவம்  நோக்கிய பயணத்தில் நாம் இன்னும் தொடக்க நிலையில் தான் இருக்கிறோம்

 

#VijayTelevision

#BiggBossTamil5

#BiggBoss

#bigbosstamil

#biggboss5namitha

#NamithaMarimuthu

#BiggBoss5Tamil