புதன், 18 மே, 2011

மே 18 -ஈழ ஆதரவாளர்கள் சிந்தனைக்கு .....

தமிழ் இன வரலாற்றில் மே 18 ஒரு கருப்பு நாள் !

 இன்றைக்கு நினைத்து பார்கிறேன் ஈழ போராட்டம் என் வாழ்வில் எந்தனை அங்கம் வகித்திருகிறது என்பதை  .எனது பள்ளிகூட பருவத்தில் தமிழகத்தில் ஆதரவு திரட்ட எங்கள் பகுதியில் தங்கியிருந்த மேஜர் யசோதரன் ,லேப்..கர்னல் ஞானவேல் உடன் பேசி ,சிரித்து விளையாடிய போது தொடங்கி இருக்கலாம் எனது புலிகள் ஆதரவு உணர்வு

   .ஊற்றங்கரையில் 1985 இல் என்று நினைக்கிறன் எனது தந்தை சுயமரியாதை சுடரொளி பழனியப்பன் தலைமையில் தொடங்க பட்ட விடுதலை புலிகள் தோழமை கழகம் அணைத்து கட்சியினரையும் ஒருகிணைத்து காங்கிரெஸ் கட்சியினர்  உட்பட சின்ன ஊரான ஊற்றங்கரையில் 25000 ருபாய் அன்றைக்கு திரட்டி நாடகம் நடத்தி அய்யா நெடுமாறன் ,கவிஞர் காசி ஆனந்தனிடம் ஒப்படைத்தது ,ராஜீவ் மரணத்தின் போது எங்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பு ,காவல் துறைக்கு தெரியாமல் வீர வேங்கை அகிலா மரணத்தின் போது உணவாளர்களை ஒன்று திரட்டி வயக்காட்டில் வீரவணக்க கூட்டம்நடத்தியது ,என் தந்தையின் நினைவு நாளில் நினைவு தமிழ் விழா நடத்தி புலிகள் புகழ் பாடியது ,இன்னும் எத்தனை எத்தனையோ நினைவுகளில் நிழலாடுகிறது கடும் வெயிலிலும் மழையிளிலும் ஈழ போராட்டத்திற்க்காய் அலைந்தோம்  அத்தனையும் இன்று ஏக்க பெரு மூச்சாய் இருக்கிறது .
              மிக சிறிய அளவிலான பணிகளை செய்த எனக்கே இந் நாளில் இத்தனை துயரத்தையும் நினைவுகளையும் தருகிறதென்றால் புலிகள் அதிகம் பிரபலமாகாத காலத்தில் அவர்களுக்கு அடைக்கலம் தந்து காவல்துறையினரின் விசாரணைக்கு சென்று ,பொருளையும் உழைப்பையும் தந்த பல திராவிடர் கழக தோழர்களுக்கு இந் நாள் எத்தனை துயரம் தரும் !
       இன்றைக்கு புலிகள் ஆதரவையும் ,ஈழ ஆதரவையும் மிக வேகமாக பேசும் நண்பர்களை  அருள் கூர்ந்து வேண்டுகிறேன் .உங்களின் வேகம் நம்மை எந்த நிலையில் நிறுத்தி இருக்கிறது என்பதை தயவு செய்து எண்ணி பாருங்கள் !ஒரு காலத்தில் தமிழகத்தில் இரண்டே அணிகள் தான் புலிகள் \ஈழ ஆதரவாளர்கள் என்கிற ஒரு அணி எதிர்பாளர்கள் மற்றொரு  அணி ,ஆனால் இன்று அன்றைக்கு புலிகளை எதிர்த்தவர்கள் எல்லாம் ஈழ ஆதரவை பேசுகின்றனர் ,புலிகளை உண்மையாய் ஆதரிததவர்கள் ,அவர்களுக்கு களம் அமைத்து கொடுத்தவர்கள் புலிகளின் துரோகிகள் என்று குறை சொல்ல படுகின்றனர் .இன்னும் பகிரங்கமாகவே சொல்கிறேன் புலிகள் என்னை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர் ,பிரபாகரனை கைது செய்து தூக்கிலிட பட வேண்டும் என்ற ஜெயலலித்தா ஈழ ஆதரவலராய் சித்தரிக்க படுகிறார் .தமிழர்களை கொல்ல ஆய்தம் வழங்கிய சீனா வை  கண்டித்து வாய் திறக்காத கம்யூனிஸ்ட்கள் காங்கிரசை குறை சொல்ல ஈழ ஆதரவு பேசுகின்றனர் ,பெரியாரை ,திராவிடர் இயக்கங்களை குறை சொல்லி புதிய ஆதரவாளர்கள் கூட்டம் மறுபுறம் .....இன்னும் பட்டியல் நீண்டு கொண்டே போகும்

மே 18 இல் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக ,விடுதலை போராட்ட வீரர் களுக்காக வீர வணக்கம் செலுத்தும் முன் ஈழ ஆதரவாளர்கள் ஒருகினைக்க பட வேண்டும் என்கிற எண்ணத்தை நெஞ்சில் முன்னிருத்தவேன்டாமா ?இன்னும் அரசியல் பேசி ஒருவரை ஒருவர் குறை சொல்லி தமிழின பகைவர்களுக்கு நாமே துணை போவதா ?முதலில் புலிகளின் ஆதரவு கட்சிகள் மீதான விமர்சனகளை நிறுத்துங்கள் !இது விமர்சனம் செய்யும் காலம் அல்ல ஆக்க ரீதியாக அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டிய தருணம் அது தான் உண்மையாய் நாம் வித்தாய் போன வீரர்களுக்கு நாம் செலுத்து வீர வணக்கம்

திங்கள், 16 மே, 2011

ஜெயலலிதா திறமையானவர் தான் !

ஜெயலலிதா மாமி முதல்வராக பதவி ஏற்று கொண்டார் .ஆயிரம் விமர்சனகள் அவர் மீது இருப்பினும் நிச்சயம் அவர் திறமையானவர் தான் !சிறுபன்மையிரை கொன்று ,அழிக்க  நினைப்பவன் மோடி ,அவர் வேறு யாருமல்ல ஆண் உருவில் இருக்கும் ஜெயலலித்தா தான் திரவிடத்தையே அழிக்க திராவிடர் பெயரில் அமைப்பு நடத்தும் ஜெயலலித்தா சந்தேகமிலாமல் பெண் உருவில் இருக்கும் மோடி தான் !


இந்த இருவரில் யார் திறமையானவர் ?
நிச்சயம் ஜெயலலித்தா தான் ,முஸ்லிம் அமைப்பை தன் கூட்டணியில் வைத்து கொண்டே மோடிக்கு அழைப்பு விடும் தைரியம் யாருக்கு வரும் ?பெரியாரின் பேரன் ,மார்க்சின் பிள்ளை ,பிரபாகரனின் தம்பி என்றவரை மோடியை போன்றதொரு நல்லாட்சி தமிழகத்தில் வேண்டும் என்று சொல்ல வைத்த ஆற்றல் யாருக்கு வரும் ? மத சார்பின்மை பேசும் கம்நியுஸ்ட் களை மோடியுடன் அமர வைத்த திறமை யாருக்கு வரும் ? சோ பார்ப்பான்களின் வாழ்த்துக்களுடன் திரவிட அமைப்புக்கு தலைமை தாங்கும் ஆற்றல் மோடிக்கு கூட தெரியாது .


நன்றி மறந்த தமிழ் இனத்திற்கு ,ஆரிய பாம்பாய் வந்த ஜெயலலித்தா உண்மையில் திறமையானவர் தான் !