சனி, 30 அக்டோபர், 2010

திராவிடர்கழக தலைமையை தலைமுறைதலைமுறையாக நேசிக்கும் பார்ப்பன குடும்பம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேடையில் நடேச அய்யர் என்பவர் இருந்தார் .அவர் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்தார் .அந்த ஊரில் ''அய்யர் ஓட்டல் ''என்றால் மிக பிரபலம் .கடந்த 5 ஆண்டுக்கு முன்னர் வரை அந்த ஓட்டல் மிக சிறப்பாக இயங்கி வந்தது .தந்தை பெரியார் எப்போது அவ் வழியே   வந்தாலும் ,அல்லது திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும்போதும் நடேச அய்யர் அய்யாவை சந்திப்பார் அல்லது அய்யா நடேச அய்யரை சந்திப்பார் .எப்போதும் சிங்காரபேடையில் அய்யாவுக்கு அவர் ஓட்டலில் தான் உணவு .
அய்யா மறைவுக்கு பின்னர் ஆசிரியர் தலைமை பொறுப்பு ஏற்ற பின்னும் உறவு இன்னும் வலுவாக தொடர்ந்தது .ஆசிரியர் வீரமணி கழக நிகழ்சிகள் ,மண விழா,பொது நிகழ்வுகள் என்று அந்த பகுதிக்கு எப்போது வந்தாலும் பழம் ,நெய் ,பலகாரம் ஆகியன கொண்டு வந்து கொடுத்து அன்பை பரிமாறி செல்வர் .1999 ஆம் ஆண்டு நடேச அய்யர் மறைவுற்றார் .தகவல் அறிந்த ஆசிரியர் வீரமணி சமூகநீதி பிரச்சார பயணம் மேற்கொண்ட போது சிங்காரபேட்டை வந்த போது நடேச அய்யர் இல்லத்திற்கே சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் .
                நடேச அய்யர் மறைவுக்கு பின்னர் அவரது மகன் தண்டபாணி அதே முறையை பின் பற்றி வருகிறார் .திராவிடர் கழக தோழர்களும் அப் பகுதிக்கு ஆசிரியர் வருகிறார் என்றால் அவர்களுக்கு தகவல் தெரிவித்து விடுகின்றனர்

            அண்மையில் நடைபெற்ற திருப்பத்தூர் திராவிடர் எழுச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த ஆசிரியர் வீரமணியை சுண்டல் ,பழம், நெய்யுடன்  மாவட்ட தலைவர் எழிலரசன் இல்லத்தில் சந்தித்தார் தண்டபாணி .இருவரும் அன்பை பரிமாறி கொண்ட காட்சியை புதிதாக காணும் தோழர்கள் சிலர் ஆச்சிரியப்பட்டு போனார்கள் .இது தலைமுறைகளை தாண்டிய நட்பு ,இங்கு தான் மனித நேயம் பூத்து குழுங்குவதை காண முடியும் !

1 கருத்து:

  1. அருமை ! ராஜாஜியும் பெரியாரும் நட்பின் உதாரணம் .அதனால் தான் பெரியார் கடவுளை மற மனிதனை நினை என்றார்

    பதிலளிநீக்கு