வியாழன், 23 பிப்ரவரி, 2012

கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு மன நோயா ? மத நோயா ?

கவிக்கோ அப்துல்ரஹ்மான் அவர்களை அவரின் கவிதைகள் வாயிலாகவே எனக்கு அறிமுகம் .தமிழை விலை பேசாத அவரின் தன்னிகரில்லா ஆளுமை ,அம்மி கல் குத்த நான் எதற்கு என்று திரைப்படங்களுக்கு பாடல் எழுத மறுத்து காலத்தால் அழிக்க முடியா கவிதைகளை தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிய அவரின் ஆற்றல் என கவிக்கோவிற்கு இணை கவிகோ தான் !
சில நாட்களுக்கு முன் நடைபெற்ற வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டேன் .இறுதி நாள் நிகழ்ச்சியில் கவிக்கோவின் தனியுரை இடம் பெற்றிருந்தது .அவ் வுரை கேட்ட பின் கவிக்கோவின் மீது இருந்த மதிப்பும் ,மரியாதையும் தவிடு பொடியானது .''விலக்கப்பட்ட கனி '' என்கிற தலைப்பில் உரையாற்றினார் .ஆதாம் ஏவாள் கதையினை கூறி விலக்கப்பட்ட கனி என்பது (forbidden fruit )அறிவு தான் .அறிவு ,வளர வளர துன்பங்கள் தான் வரும் .பகுத்தறிவு என்பது மனிதனுக்கு கேடானது ,பறவைகளும் ,விலங்குகளும் மகிழ்ச்சியாய் இருக்கின்றன காரணம் அவைகள் அறிவை பயன்படுத்துவதில்லை .நாத்திகர்களும்  அறிவியல் அறிஞர்களும் தான் முட்டாள்கள் என்று ஒரே போடாய் போட்டவர் அதோடு மட்டும் நிற்கவில்லை .ஆண்கள் அறிவு வயப்பட்டவர்கள் பெண்கள் உணர்ச்சி வயப்பட்டவர்கள் அதனால் தான் சாத்தான் ஏதாம் ஆப்பிள் சாப்பிட தூண்டியது .என்று தொடர்ந்து பெண்ணுரிமைக்கு எதிரான பல கருத்துக்களை கூறிய அவர் இறுதியாக பெண்கள் அதிகம் படிக்க கூடாது படிக்க வேண்டும் என விரும்பினால் +2 அல்லது அதிக பட்சம் BA  வரை படிக்கலாம் பெண்கள் படித்தால் ,வேலைக்கு போனால் தாய்மைக்கு கேடு ,இல்லறத்திற்கு கேடு ,என்றவர் பெண்கள் வீட்டு வாசற்படியை தாண்டக் கூடாது என்றாரே பார்க்கலாம் ! இப்போது எனக்கு தெரிய வேண்டியது இது ஒரு வகை மன நோயா ? அல்லது இஸ்லாத்தில் ஆழ்ந்து போனதால் வந்த மத நோயா ? எது நடந்திருந்தாலும் சில கவிஞ்சர்களை மது அழித்திருக்கிறது ,சிலரை திரைப்படம் அழித்திருக்கிறது இவரை மதம் அழிக்கிறது ,பரிதாப்படுகிறேன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக