ஞாயிறு, 8 ஜனவரி, 2012

மாட்டுக்கறி உண்பது குற்றமா ?


இன்றைக்கு வெளி வந்த நக்கீரன் இதழில் முதல்வர் ஜெயலலித்தா   மாட்டுக்கறி உண்ணும் பழக்கமுடையவர் என்று வெளியிடப்பட்ட கட்டுரையால் தமிழகம் முழுக்க அனைத்து கடைகளிலும் நக்கீரன் இதழ் அதிகார தோரணையுடன் பறிக்கப்பட்டு கொளுத்தப்பட்டது .நக்கீரன் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது .நக்கீரன் ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர் .செய்தியின் உண்மை தன்மை ஆராய்வதற்கு முன் நம் மனதில் எழும் கேள்வி  மாட்டுக்கறி உண்பது அவ்வளவு குற்றமா ?
உலகம் முழுக்க உணவுமுறை என்பது ஒவ்வொரு நாட்டின், ஒவ்வொரு மனித இனக் குழுவின் பண்பாட்டு அடையாளமாகவே இருந்து வருகிறது.உணவுப் பண்பாடு என்பது மத அடிப்படையிலானதாக இல்லாமல் புவியியல் மற்றும் தட்பவெப்பம் சார்ந்ததாக இருப்பதால், எந்த நாடும் தன் மக்கள் இதைத்தான் தின்று தொலைக்க வேண்டுமென எதிர்பார்ப்பதில்லை; கட்டாயப்படுத்துவதில்லை. அவ்வாறு உட்கொள்ளுவது பாவச் செயல் என்றோ, குறிப்பிட்ட உணவை உண்ணுகிறவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் என்றோ விலக்கி வைக்கும் வழக்கம் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.ஆனால் பார்ப்பனீயம் ஆழமாக வேர் பிடித்த இந்தியாவில் மாட்டுக்கறி உண்ணுதல் என்பது, தலித் மக்களின்  விருப்ப உணவாக அது கற்ப்பிக்க பட்டு வருகிறது .பார்ப்பனர்களின் சைவ வெறிக்கு முன், சாதி இந்துக்களின் வெறுப்புணர்விற்கு முன், தீண்டத்தகாத மக்களின் மாட்டுக்கறி – தன் எல்லா தகுதிகளையும் இழந்து, போதைப் பொருளைப் போல ரகசியமாக உட்கொள்ளப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

ஆட்டிறைச்சியும், கோழிக்கறியும் முக்கிய சாலைகளில் முகத்திற்கு நேராக விற்கப்படுவதைப் போல, மாட்டுக்கறி விற்கப்படுவதில்லை. மக்கள் புழக்கம் அதிகமுள்ள சாலைகளில் பிற கறிக்கடைகளைப் போல, மாட்டிறைச்சிக் கடைகளை திறந்து வைத்துவிற்கும் துணிவு இங்கு எவருக்குமில்லை. தலித் மக்களும், முஸ்லிம்களும் வசிக்கும் சேரிப் பகுதிகளில் மட்டுமே அவை இயங்குகின்றன. உணவகங்களிலும் இதே நிலைதான். மாட்டுக்கறி உணவு கிடைக்கும் உயர்தர உணவகங்களை எங்கும் பார்க்க முடிவதில்லை. நடுத்தர அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயங்குகின்றன. மற்றபடி சாக்கடை ஓடும், ஒளியற்ற ஒதுக்குப்புறங்களில் தள்ளுவண்டிகளில் நடத்தப்படும் இரவுக் கடைகளில்தான் மாட்டிறைச்சி உணவு விற்கப்படுகிறது. அதை வாங்கி உண்ணும் மக்கள் தங்கள் முகத்தைப் பிறர் பார்த்துவிடாதவாறு இருளில் பதுங்கியிருந்தபடியே அவசரமாக உண்டு முடிப்பர் அல்லது பொட்டலம் கட்டிக் கொண்டு செல்வர்.
மாட்டுக்கறி உண்பதன் மூலம் தன் சாதி வெளியே தெரிந்துவிடுமோ என்ற பதற்றமும் அச்சமும், வெளியிடத்தில் அதை உண்ணும் ஒவ்வொருவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. தனது விருப்ப உணவை உட்கொள்வதில் இப்படியொரு இழி நெருக்கடி வேறெந்த நாட்டிலாவது எவருக்காவது உண்டாகுமா என வியப்பாக இருக்கிறது. தலித் மக்கள் தங்களின் எல்லைக்குள் மிக சுதந்திரமாக உண்டு களிக்கும் மாட்டிறைச்சியை, பிற சமூகத்தினர் விரும்பினாலும் வெளிப்படையாக உண்ண முடியாது. அதை இந்து சமூகத்தின் ஆதிக்க மூளை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாட்டிறைச்சியை உண்ணுவது, ஜாதி மாறி திருமணம் செய்து கொள்வதைப் போன்றதொரு சனாதனக் குற்றமாகவே கருதப்படுகிறது. ஏனெனில், மாட்டிறைச்சி என்பது வெறுமனே உணவல்ல; அது இந்துக்களின் அரசியல்! சாதிய அடுக்கை தக்க வைப்பதற்காகப் பன்னெடுங்காலமாக அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் சூழ்ச்சி!
மாட்டுக்கறியை சேரி மக்கள்தான் தின்பார்கள் அல்லது தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தால் மட்டுமே மாட்டுக்கறியைத் தின்னத் தோன்றும் என்ற மாயை இங்கு நிலை நாட்டப்பட்டிருக்கிறது. இந்த மாயையை ஆய்வு ரீதியாக முதன் முதலில் தகர்த்தவர் அம்பேத்கர். பகுத்தறிவு ரீதியாக உடைத்தெறிந்தவர் பெரியார். அம்பேத்கரையும் பெரியாரையும் அறிந்து கொள்ள விரும்பாத இந்து பொது சமூகம், மாட்டிறைச்சியை சிந்தனையிலும் எண்ணியிராத புனிதர்களாக தங்களை கருதிக் கொண்டிருக்கிறது. உண்மையில், மேற்கத்தியர்களையும், முஸ்லிம்களையும் போல அனைத்துப் பிரிவு இந்துக்களும் – பார்ப்பனர், பார்ப்பனரல்லாதவர்; தலித், தலித் அல்லாதவர் என்ற பாகுபாடுகளின்றி எல்லோருமே அசைவர்களாகவும் குறிப்பாக மாட்டிறைச்சி உண்ணுகின்றவர்களாகவுமே இருந்து வந்திருக்கின்றனர். அதுவே இயற்கை! சைவர்களாகவே தோன்றிய மனித இனம் என ஏதுமில்லை. அப்படியிருந்தால் அது இயற்கை முரண்!
மாட்டிறைச்சி உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை பார்ப்பனர்கள் உண்ணாமல் போனதற்கு – அவர்களின் இந்து மதத்திற்கும், மதத்தின் பெயரால் இந்த மண்ணில் விதைக்கப்பட்ட நச்சுக் கருத்தியல்களுக்கும் பவுத்தத்தால் உண்டான நெருக்கடியே காரணம். இங்கு வந்து குடியேறிய நாடோடி ஆரியர்களுக்கு, கடவுளுக்கான காணிக்கையாக ஆயிரக்கணக்கான விலங்குகளை பலி கொடுப்பதும், அதற்கான சடங்குகளை செய்வதும், பலி கொடுத்த விலங்குகளை பாகம் பாகமாக பங்கிட்டு உண்ணுவதும் வழக்கமாகவே இருந்தது. விவசாயம் செய்து உணவை உற்பத்தி செய்யும் முறை தோன்றும் வரையிலும் ஆரியர்களின் முக்கியத் தொழிலாகவும் உணவீட்டும் முறையாகவும் – இந்த சடங்குகளும் விலங்கு பலியும் இருந்ததற்கான சான்றுகள் வேதத்திலேயே காணக் கிடைப்பதை பல ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. வேதங்கள் மட்டுமல்லாமல் இந்து மத நூல்களான மநு தர்மம், உபநிடதங்கள், கிரஹசூத்திரம் என பலவற்றில் இதற்கான சான்றுகள் நிறைந்திருக்கின்றன.
அய்ம்பதிற்கும் மேற்பட்ட விலங்குகள் கடவுளுக்கு பலிகொடுக்க தகுதியானவை என வேதத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை காளையும் பசுவும். சடங்குகளின்றி கடவுளுக்கு காணிக்கையை செலுத்திவிட முடியுமா? பார்ப்பனர்களின்றி சடங்குகள்தான் சாத்தியமா? “பசு, கன்று, குதிரை மற்றும் எறுமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்” என்றும் (6/17/1) “பெண்ணின் மண விழாவில் காளையும், பசுவும் வெட்டப்படுகின்றன” என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம்.
“மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப்பட்டிருக்கின்றன” என்றும் “மதச் சடங்குகளை முறையாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ணவில்லையெனில், இறப்பிற்கு பின்னர், தனது இருபத்தி ஒன்றாவது மறுபிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்” என்றும் மநுதர்மம் கூறுகிறது.
யாகம் என்ற பெயரில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளை பலி கொடுத்து, அதைப் பங்கிட்டு ருசித்து உண்ட பார்ப்பனர்களுக்கு இன்று ரத்த நெடியும், மாமிசத் துண்டமும் குமட்டலை உண்டாக்கித் தீண்டத்தகாதவையாக அவற்றை மாற்றியதற்கு காரணம் – பவுத்தத்தின் தீவிரமும் புத்தரின் அறிவுரைகளும்தான்! பார்ப்பனியம் வேரூன்றிய மண்ணில், பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தையும் மூடக் கருத்தியல்களையும் நிராகரித்தபடியே பவுத்தம் பரவத் தொடங்கியது. விவசாய உற்பத்தி ஒரு புரட்சியாக சமூகத்தில் மாற்றங்களை விதைத்துக் கொண்டிருந்த நேரத்தில், விலங்குகளை பலியிடும் வழக்கமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. காரணம், விவசாயப் பணிகளுக்கு இந்த விலங்குகள் உறுதுணையாக இருந்ததுதான். இந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர்களின் ஒரே அடையாளம் விலங்குகளின் உயிர்ப்பலி மட்டுமே.
அய்நூறு எருதுகள், அய்நூறு ஆண் கன்றுகள், அய்நூறு பெண் கன்றுகள், அய்நூறு ஆடுகள் என இத்தனையும் ஒரே நேரத்தில் வெட்டுக் களத்திற்கு இழுத்து வரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. தெய்வ காரியம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் இதை கொண்டாட்டமாகவே நிகழ்த்தி வந்தனர். இது போன்ற உயிர் பலிகள் ஒருபோதும் நற்பலன்களை தருவதில்லை என புத்தர் அறிவுறுத்தினார். விலங்குகளை தேவையில்லாமல் பலி கொடுப்பதையும், துன்புறுத்துவதையும் எதிர்த்த புத்தரின் கருத்துகள் – புதிய பொருளாதாரப் புரட்சியான விவசாயத்திற்கு ஆதரவானதாக ஏற்கப்பட்டு, முக்கியத்துவத்தைப் பெற்றன.
எனில், புத்தர் சைவரா என்ற கேள்வியும், அவரின் அறிவுரை களால்தான் பார்ப்பனர்கள் திருந்தினார்களா என்ற கேள்வியும் வரும். புத்தர் எப்போதும் சைவராக இருந்ததில்லை. மாட்டிறைச்சி, பன்றிக்கறி என அவர் அசைவ உணவை உண்டவர். உணவுத் தேவைக்காக அன்றி, மதச் சடங்குகளுக்காக எண்ணற்ற விலங்குகளை உயிர்த் தியாகம் என்ற பெயரில் பலி கொடுப்பதையே அவர் எதிர்த்தார். புத்தர் வலியுறுத்தியஅகிம்சையானது, இன்று பார்ப்பனர்கள் கடைப்பிடித்து வருவதைப் போன்று, காந்தி வலியுறுத்தியதைப் போன்று கண்மூடித்தனமானதல்ல. படைப்பு என்பதை மறுத்து இயற்கையின் உயிர் சுழற்சி விதியை அவர் ஆழ புரிந்திருந்தார். கண்ணுக்குத் தெரியாத, அறிவுக்கு எட்டாத விஷயங்களை கற்பித்து மக்களை சிறைப்படுத்துவதை விடவும், இயற்கை குறித்த உண்மைகளை எடுத்துரைத்து, மூட நம்பிக்கைகளில் மூழ்கியிருந்தவர்களை விடுவிக்க முயன்றார். இதனாலேயே பவுத்தம் பார்ப்பனியத்திற்கான நெருக்கடியாக மாறியது.
தலித் மக்கள் பவுத்தத்தின் பால் ஈர்க்கப்பட்டு, பார்ப்பனியத்தின் பிடியிலிருந்து நழுவிக் கொண்டிருந்தனர். இந்த இக்கட்டினை எதிர்கொண்டாக வேண்டி, தங்களுக்கு பழக்கப்பட்ட மூர்க்கத்தை பயன்படுத்தத் தொடங்கினர் பார்ப்பனர்கள். மன்னர்களை ஏவி பவுத்த துறவிகளை அடித்துத் துன்புறுத்தியதும், போதி மரம் உள்ளிட்ட பவுத்தக் குறியீடுகளை அழித்ததும் பிந்தைய வரலாறாக நடந்து முடிந்தன. பார்ப்பனர்களின் வன்முறையாலேயே பவுத்தம் இந்தியாவிலிருந்து அகற்றப்பட்டது. எனினும் பவுத்தத்தால் புகழிழந்த – விலங்குகள் உயிர்த் தியாகத்தை அதன் பின்னர் கையிலெடுக்க பார்ப்பனர்கள் துணியவில்லை. மாறாக, அவர்கள் இயற்கைக்கு எதிரான, அறிவுக்கு ஒவ்வாத வேறொரு மூடக் கருத்தியலை விதைக்கத் தொடங்கினர். அதுதான் பசுவை புனிதமாக்கி முன் வைத்த புதிய அரசியல்.
புத்தரைக் கடந்து சிந்திக்கவும், பவுத்தம் வளர்த்தெடுத்த பகுத்தறிவை சிதைக்கவும் வேண்டி பசுவை இந்து மதத்தின் புனித அடையாளமாக அறிவித்தனர். பசுவின் உடலில் பல தெய்வங்கள் குடி கொண்டிருப்பதாகக் கதையளந்தனர். கிருஷ்ணனை ஆயர் குலத்தில் பிறக்க வைத்து மாடு மேய்க்க வைத்தனர். நன்னாட்கள், விழாக்கள் என எது நடந்தாலும் அதைக் காரணமாக வைத்து ஆயிரக்கணக்கான விலங்குகளைக் கொன்று குவித்த அதே பார்ப்பனர்கள், பசுவுக்கு மரியாதை செய்து புதிய சடங்குகளை உருவாக்கினர். இதற்கு முக்கியமான இன்னொரு காரணம், விவசாயப் பொருளாதாரம் தழைக்கத் தொடங்கிய காலம் என்பதால், உழைக்கும் மக்கள் அனைவருக்குமே கால் நடைகள் மீது பெரிதளவிலான பற்று தோன்றியிருந்தது.
ஏர் பூட்டி உழுதல், கிணற்று நீர் இறைத்தல், போக்குவரத்து, சிறுநீர் மற்றும் சாணம் கொண்டு நிலத்திற்கு உரமேற்றுதல் என கால்நடைகள் விவசாயத்திற்கு பெரிதும் உதவின. இதனால் இயல்பாகவே கால்நடைகளை கண்மூடித்தனமாக பலி கொடுக்க ஒரு எதிர்ப்புணர்வு கிளம்பியிருந்தது. பின்னர் பார்ப்பனர்களுக்கு பிழைக்க என்னதான் வழி? எக்காலத்திலும் உடலுழைப்பு சார்ந்த பணிகளை அவர்கள் செய்ததில்லை. அதனாலேயே பசுவை தெய்வமாக்கி, புதிய சடங்குகளை உருவாக்கினர். பசுவை “மாதா’ என்று அறிவித்து வணங்கத் தொடங்கினர். தலை முதல் வால் வரை எல்லாவற்றையும் ருசித்து உண்டவர்கள் அதற்கு ஈடு செய்யும் விதமாக, பால் முதல் சிறுநீர் வரை அனைத்தையும் புனிதமானதாக அறிவித்தனர்.
தங்கள் தொழிலை வளப்படுத்தும் கால்நடைகளை கடவுளாகவே வணங்கும் மனநிலையில் இருந்த மக்கள், பார்ப்பனர்களின் சடங்குகளை ஏற்கத் தொடங்கியிருக்க வேண்டும். தாங்கள் கைவிட்ட பின்னர் மாட்டிறைச்சியை எவருமே உண்ணக் கூடாது என்ற ஆதிக்க மனப்பான்மையில் பசுவை வெட்டுவதையும் உண்ணுவதையும் பார்ப்பனர்கள் எதிர்க்கத் தொடங்கினர்.
புத்தரின் அகிம்சை அறிவுறுத்தலிலும் உயிர்பலி எதிர்ப்பிலும் சமூக நலன்கள் அடங்கியிருந்தன. ஆனால், உயிர் பலி கொடுப்பதற்கும் சரி, பசுவை புனிதமாக்கி சைவத்திற்கு மாறியதற்கும் சரி, பார்ப்பனர்கள் சொன்ன காரணங்களில் மூடத்தனத்தை தவிர எந்த நியாயங்களும் இருக்கவில்லை. வெட்டுக் களத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளை பலி கொடுத்து, அவற்றை தின்று தீர்த்த அதே பார்ப்பனர்கள், பசுவை புனிதமாக்கிய தங்களின் புதிய கொள்கை மாற்றத்திற்கு பின்னர், புத்தர் பசுவை வணங்கவில்லை என்றும் அவர் சைவரில்லை என்றும் பழி சுமத்தத் தொடங்கினர். “கோ மாதா எங்கள் குல மாதா’ என்று பார்ப்பனர்கள் கூவி அழைத்தும் தலித் மக்களும் பவுத்தத்தை பின்பற்றியவர்களும் மாட்டிறைச்சி உண்ணுவதைக் கைவிடவில்லை. காரணம், வலுவாக வேரூன்றியிருந்த சாதிய அமைப்பு, தலித் மக்களை நிலங்களுக்குள் அனுமதிக்கவில்லை. சாதிய அடுக்கில் மேலிருந்தவர்கள் நிலங்களுக்கு உரிமையாளர்களாக விவசாயத்தை தன்வசப்படுத்திக் கொண்டனர்.
பொது வளங்கள் எதற்குள்ளும் அனுமதி மறுக்கப்பட்டு, தீண்டாமைச் சிறைக்குள் அடைக்கப்பட்டவர்களுக்கு பார்ப்பனர்களையும் அவர்களைப் பின்தொடர்ந்த சாதி இந்துக்களையும் போல கால்நடைகள் மீது பற்றுக்கொள்ள எந்த நியாயமும் இருக்கவில்லை. சாதி இந்துக்களுக்கு அடிமட்ட வேலைகளைச் செய்வதே தொழிலாக்கப்பட்டு, அதற்கு கூலி என எதுவும் வழங்கப்படாத நிலையில், உணவுக்காக கையேந்தி நிற்கும் அவலச் சூழலில், செத்த மாடுகளும் தீண்டத்தகாத மக்களுக்கு உணவாகின. இந்தப் பின்னணியில் பார்த்தால், மாட்டிறைச்சி வெறுமனே கைவிட முடியாததொரு உணவுப் பழக்கமாகவே தீண்டத்தகாத மக்களிடம் நீடித்து வந்திருப்பது புரிபடும். மாடுகளுக்காகவோ, மாட்டிறைச்சி உண்ணும் விஷயத்திலோ அவர்களுக்கு எவ்விதமான முட்டாள்தனமான பற்றுணர்வுகளும் இருக்கவில்லை.
தங்களிடமிருந்து சுய மரியாதை உட்பட எல்லாவற்றையும் சுரண்டிக் கொண்ட பார்ப்பனியத்தின் அறைகூவலை மீறி, தீண்டத்தகாத மக்கள் மாட்டிறைச்சியைத் தொடர்ந்து உண்ணுவது பார்ப்பனியத்திற்கான ஒருவிதமான எதிர்ப்போ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், பார்ப்பனர்கள் மாதா என்றும் புனிதம் என்றும் அறிவித்த ஒன்றை வெட்டி உணவாக்குவது, வெறுமனே ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியாக மட்டுமே நீடித்து வந்திருக்க முடியாது. இந்திய விவசாய முறையின் வெற்றிக்கு முக்கிய காரணம் கால்நடைகள்தான் என பல சர்வதேச ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. கால்நடைகளைப் பராமரிக்கும் இந்த விவசாய முறையை இந்து வாழ்வியலாகவே அவை முன் மொழிகின்றன. உண்மையில் அது பவுத்த வாழ்வியல் முறை. புத்தரே கால்நடை பராமரிப்பைத் தொடங்கி வைத்த முதல் மனிதர் என்ற உண்மை முற்றிலுமாக மறைக்கப்பட்டுவிட்டது.
அய்ம்பதிற்கும் மேற்பட்ட விலங்குகள் கடவுளுக்கு பலிகொடுக்க தகுதியானவை என வேதத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை காளையும் பசுவும். சடங்குகளின்றி கடவுளுக்கு காணிக்கையை செலுத்திவிட முடியுமா? பார்ப்பனர்களின்றி சடங்குகள்தான் சாத்தியமா? “பசு, கன்று, குதிரை மற்றும் எறுமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்” என்றும் (6/17/1) “பெண்ணின் மண விழாவில் காளையும், பசுவும் வெட்டப்படுகின்றன” என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம்.
“மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப்பட்டிருக்கின்றன” என்றும் “மதச் சடங்குகளை முறையாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ணவில்லையெனில், இறப்பிற்கு பின்னர், தனது இருபத்தி ஒன்றாவது மறுபிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்” என்றும் மநுதர்மம் கூறுகிறது.
யாகம் என்ற பெயரில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளை பலி கொடுத்து, அதைப் பங்கிட்டு ருசித்து உண்ட பார்ப்பனர்களுக்கு இன்று ரத்த நெடியும், மாமிசத் துண்டமும் குமட்டலை உண்டாக்கித் தீண்டத்தகாதவையாக அவற்றை மாற்றியதற்கு காரணம் – பவுத்தத்தின் தீவிரமும் புத்தரின் அறிவுரைகளும்தான்! பார்ப்பனியம் வேரூன்றிய மண்ணில், பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தையும் மூடக் கருத்தியல்களையும் நிராகரித்தபடியே பவுத்தம் பரவத் தொடங்கியது. விவசாய உற்பத்தி ஒரு புரட்சியாக சமூகத்தில் மாற்றங்களை விதைத்துக் கொண்டிருந்த நேரத்தில், விலங்குகளை பலியிடும் வழக்கமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. காரணம், விவசாயப் பணிகளுக்கு இந்த விலங்குகள் உறுதுணையாக இருந்ததுதான். இந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர்களின் ஒரே அடையாளம் விலங்குகளின் உயிர்ப்பலி மட்டுமே.ஆனால் தலித் மக்கள் பவுத்தத்தின் பால் ஈர்க்கப்பட்டு, பார்ப்பனியத்தின் பிடியிலிருந்து நழுவிக் கொண்டிருந்தனர். இந்த இக்கட்டினை எதிர்கொண்டாக வேண்டி, தங்களுக்கு பழக்கப்பட்ட மூர்க்கத்தை பயன்படுத்தத் தொடங்கினர் பார்ப்பனர்கள். மன்னர்களை ஏவி பவுத்த துறவிகளை அடித்துத் துன்புறுத்தியதும், போதி மரம் உள்ளிட்ட பவுத்தக் குறியீடுகளை அழித்ததும் பிந்தைய வரலாறாக நடந்து முடிந்தன. பார்ப்பனர்களின் வன்முறையாலேயே பவுத்தம் இந்தியாவிலிருந்து அகற்றப்பட்டது. எனினும் பவுத்தத்தால் புகழிழந்த – விலங்குகள் உயிர்த் தியாகத்தை அதன் பின்னர் கையிலெடுக்க பார்ப்பனர்கள் துணியவில்லை. மாறாக, அவர்கள் இயற்கைக்கு எதிரான, அறிவுக்கு ஒவ்வாத வேறொரு மூடக் கருத்தியலை விதைக்கத் தொடங்கினர். அதுதான் பசுவை புனிதமாக்கி முன் வைத்த புதிய அரசியல்.
அந்த அரசியலின் பிரதிபலிப்பு தான் இன்றைக்கு நக்கீரன் முலமாக வெளிப்பட்டுள்ளது .இந்த பார்ப்பன சூழ்ச்சிக்கு நமது தமிழர்களும் பலியாகி எதோ  மாட்டுக்கறி உண்பது பெரும் குற்றம் போல காட்டி தமிழகம் முழுக்க ஆர்பாட்டம் நடத்துவதும் பத்திரிக்கையை கொளுத்துவதும் சரியா ? இன மொழி உள்ள தமிழர்கள் சிந்திக்கட்டும்

3 கருத்துகள்:

  1. தமிழன் இனஉணர்வு கொள்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இங்கு உண்டு.
    ஜெயலலிதா என்ன உணவு உண்கிறார் என்பதை, எப்போதோ சொன்னதை
    இப்போது போட்டு ஒரு கொந்தளிப்பான அதிர்வலையை தோற்றுவிக்கும் நக்கீரனின்
    எண்ணம் தமிழனுக்கு தேவைஇல்லை. நக்கீரனே முதலில் தமிழனுக்கு தேவை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னமும் எத்தனை காலம் தான் இப்படியே அரசியல் செய்து கொண்டிருபீர்கள் -

      நீக்கு
  2. எதை சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல விரும்பிசாப்பிடுகிறோமா என்பது தான் முக்கியம். எங்கள் வீட்டில் மாடு வளர்தனர் அது குட நான் கொஞ்சி விலையாடியதுண்டு சகோதரனைப்போல. அதனால் என்னால் அதை சாப்பிட மனம் வரமுடியவில்லை. ஆனால் நான் எத்தனையோ சாப்பாட்டு முறைகையாண்டிருக்கிறேன் மாட்டை தவிர(ஏன் நேன்ரால் தம் சகொதரனை அடித்து மாமிசம் படைத்தது போல் உள்ளது மனசு ஒப்ப வில்லை). ஆனால் அதை சாப்பிடுபவரை நான் குற்றம் காணமாட்டேன் என்னென்ரால் அது அவர் சாப்பிடும் பழக்கம். என் அருகில் சாப்பிட்டாலும் அருவெறுப்பு கொள்ள மாட்டேன் அப்படி அருகில் சாப்பிட்ட காலம் ஏறாலம்.

    பதிலளிநீக்கு