சனி, 27 ஏப்ரல், 2019

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?


+2 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன . மாணவ செல்வங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் இருந்திருக்கும். கிடைத்த மதிப்பெண்கள் பெரும் ஏமாற்றத்தை பெற்றோருக்கும் மாணவ செல்வங்களுக்கும் ஏற்படுத்தி இருக்கலாம் . கலக்கமோ வருத்தமோ அடைய தேவையில்லை
.அடுத்த கட்ட நகர்விற்கான தெளிவான சிந்தனையும் அதற்கான உள உறுதியுமே இப்போது தேவை


ஒருவரின் திறமையை மதிப்பெண்களால் அளவிட முடியாது . மதிப்பெண் சற்று குறைந்து போனால் ஒருவரின் வாழ்க்கையே முடிவுக்கு வந்து விட்டதாக எண்ணுவது மிகப் பெரிய தவறு.மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் தவறான முடிவுகள் எடுப்பது, தன்னையே தண்டித்துக் கொள்வது இவை எல்லாம் நிச்சயம் தேவையற்றவை. மதிப்பெண் குறைவாக எடுத்து, பள்ளித் தேர்வை பாதியில் நிறுத்தி விட்டு வாழ்வில் மிகப் பெரிய உச்சங்களைத் தொட்டவர்கள் ஏராளம் . மதிப்பெண்கள் குறைந்ததற்காக பள்ளியை, பெற்றோரை, மற்றோரை, காரணம் காட்டாமல் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள் சூழ்நிலைகாரணம் சொல்பவர்கள் வெற்றி பெறுவதில்லை; வெற்றி பெறுபவர்கள் காரணம் சொல்வதில்லை!
இந்த முறை தோல்வி அடைந்து விட்டோம் ,அடுத்து வரும் வாய்ப்புக்களை முழுமையாக பயன் படுத்தி வெற்றி காண முயற்சி செய்யுங்கள் .வாய்ப்புகளை தேடி கண்டடையுங்கள்.அதில் வெற்றி பெற கடுமையாக உழையுங்கள் ! தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழவே முடியாது .