வியாழன், 24 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டிற்கு விடுதலைபுலிகள் வாழ்த்து!

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகத்தின் பெயரில் இ மெயில் மூலம் வாழ்த்து அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி நன்றியும், மகிழ்ச்சியும் வெளியிட்டுள்ளார்.



இராமு.சுபன், இணைப்பாளர், தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் என்ற பெயரில் தமிழக அரசுக்கு அந்த இமெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைவர், துணைத் தலைவர்கள், தலைமைக் குழு, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, தமிழ்நாடு என்ற முகவரியிடப்பட்டு 5 பக்கங்களைக் கொண்ட மெயிலாக அது உள்ளது.



அதில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை, தமிழக அரசியலில் இருந்து பிரித்துப்பார்க்க விரும்புகிறோம். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், இனத்தின் ஒற்றுமைக்கும் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என்பதால், அதனை வரவேற்கிறோம். மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.



இது குறித்து முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,



கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கி-அந்த வாழ்த்தினூடே ஈழத்தமிழ் இனம் படுகின்ற இன்னல்களைச் சுட்டிக்காட்டி-அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு-இச்செம்மொழி மாநாட்டினை நடத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன்.



தாய்மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் இச்செம்மொழி மாநாட்டுக்கு எம் ஆதரவு உண்டு; இந்த மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழி கோலும் என்பதுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அவா என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.



அந்த அறிக்கையில் எந்த எதிர்பார்ப்பும், குறிக்கோளும் ஒளி விடுகிறதோ அவற்றைக் காண வேண்டும், கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவலில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அமைப்பின் கருத்துகளில் எள்ளளவு வேறுபாடும் எமக்கில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.



இலங்கையில் நடந்த அவலத்தை அருகில் இருந்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை என்ற வேதனை நமக்கு உண்டு என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது தான் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.



சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தமிழகம் முழுதும் கண்டன குரல்கள் எழுந்தபோது, "அவர்கள் யாரும் அப்பாவி மக்கள் அல்ல'' என்று கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டுமென்று சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினார்கள், இன்னமும் குலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிக்கை வெளியிட்ட அந்த அமைப்பு ஒருக்கணம் எண்ணிப் பார்த்தால் உண்மைகள் ஆயிரம், ஒவ்வொன்றாக எதிர் நின்று சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதற்கு சாட்சியங்கள் கூறும்.



இந்த நேரத்தில் மேலும் அதை விளக்க விரும்பவில்லை. உண்மை எப்போதும் உறங்கி விடாது. ஒரு காலத்தில் உதறிக்கொண்டு எழுந்து பேசத்தான் போகிறது.



இதற்கிடையே எனக்குள்ள மகிழ்ச்சியெல்லாம், இங்கே சிலர் பாரதத்து காந்தாரி போலப் பதறித் துடித்து- ராமாயணத்து கூனி போல பட்டாபிஷேகத்தையே தடுத்து நிறுத்த பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் போது, "இதோ தமிழர்கள் நாங்கள்; எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் எம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு என்றும் உண்டு'' என்று அறிக்கை வெளியிட்டு-"தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும்-எம் இனத்தின் ஒற்றுமைக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம்'' என்று உளம் திறந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடு அவர்களைப் பாராட்டுவதும் கடமை என கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

புதன், 23 ஜூன், 2010

தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள்

நம் நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர் எண்ணிக்கை இன்னமும் பெருகவில்லை. மருத்துவக் கல்லூரிகள் இப்போதுதான் அரசின் சார்பில் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும், கிராமங்களிலும் வரத்துவங்கியுள்ளன!







முன்காலத்துப் பாட்டி வைத்தியமும், வீட்டு வைத்தியமும் நன்கு பயன் தந்தன பெரும் அளவுக்கு. நோய் பற்றிய அடிப்படை அறிவும், அதிலிருந்து மீள உடனடியாக செய்யவேண்டிய வழிமுறைகளும் , எளிய மக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.



பிரபல சிறுநீரகவியல் துறை வல்லுனரும், மனித நேயரும், சமூகநீதிப் போராளியுமான டாக்டர் ஏ.ராஜசேகரன் M.Ch., F.R.C.S,(Edin), FICS-D.sc. அவர்களும், அவரது நெருங்கிய உறவினரும் மருத்துவ நூல்கள் எழுதும் ஆற்றலாளருமான டாக்டர் கோ. இராமநாதன் வி.ஞி., தி.சி.சி.றி. அவர்களும் எழுதி வெளியிட்ட மருத்துவர் இல்லாத இடத்தில் மருத்துவம் எனும் நூலின் இரண்டாம் பதிப்பு - புதிய விரிவாக்கப்பட்ட பதிப்பினை நூலாசிரியர் டாக்டர் ஏ. இராஜசேகரன் அவர்கள் தந்தார்.



படித்தேன், சுவைத்தேன். யான் பெற்ற இன்பம் மற்றவரும் பெறவேண்டாமா?



இதில் எடுத்த எடுப்பில் இந்நூலில் முதல் நன்றி யாருக்குத் தெரியுமா? அதுவே ஒரு புதுமை!



ஸ்பெயின் மொழியில் டேவிட் வெர்னர் எழுதிய மருத்துவர் இல்லாத கிராமத்தில் என்ற நூலிலிருந்து அவரது விருப்பப்படி சில பகுதிகளையும், படங்களையும் இதற்குப் பயன்படுத்தி உள்ளோம். அவருக்கு நன்றி என்று கூறியதோடு, இந்தியர்களின் தற்கால உடல்நல பிரச்சினைகளுக்கு ஏற்ப நவீன மருத்துவ அம்சங்களில் தெரிய வேண்டிய மருத்துவ முறைகளை வழங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டு உள்ளது அருமை!



சீரிய கல்வியாளர் டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் அணிந்துரை தந்துள்ளார்!



எண்பது சதவிகித மக்கள் கிராமப் புறங்களில் வாழும் நிலையில், அவசர சிகிச்சைக்குக் கூட வழியில்லாமலும் நோய் ஏன் வருகிறது? எப்படித் தடுப்பது? என்பது கூடத் தெரியாமலே வாழும் நிலையே உள்ளது!



அறியாமையை விட பெரிய நோய் உலகத்தில் ஏது? அதனைப் போக்கி விழிப்புணர்வை - மருத்துவத் துறையில் ஏற்படுத்தவே கடலில் செல்லும் கப்பல்களுக்கு, கலங்கரை விளக்கத்தின் ஒளி போல_இத்துணை அருமையான தகவல்களை, எளிமையான முறையில் தந்துள்ளார்கள்!



பள்ளிகளில் அடிப்படை மருத்துவம் போதிக்கப் படுவதில்லை. பழைய கள் புது மொந்தை என்பது போல, பழைமைக்குப் புதுமை மெருகேற்றி புளித்தவைகளையே பரப்பும் பாடப் புத்தகக் கொடுமை இன்னமும் உள்ளது. வாழ்வியல் பாடங்கள் அங்கே சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்பது பெரும் குறையாகும்!



192 தலைப்புகளில் விளக்கங்கள் எளிய தமிழில். சுமாராக எழுதப்படிக்கத் தெரிந்த கிராமத்துவாசிகள்_- பெற்றோர்கள், - தாய்மார்கள் உட்பட பலருக்கும் ஒரு வழிகாட்டும் மருத்துவ நூலாக இது பயன்படுவது உறுதி!



டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டபடி, 5,80,000 கிராமங்களில் 70 சதவிகித மக்கள் வாழுகின்றனரே அவர்களுக்கு இந்நூல் அறிமுகமானால் பெரிதும் தன்னம்பிக்கையும், தளராத வாழ்வு நீட்டிப்பும் தானே வர வாய்ப்பு உண்டு.



சிறுசிறு பட விளக்கத்துடன் அவசரத்தில் கூட படிக்கலாம். பயன்பெறலாம்.



1. நோயுற்றவரை அணுகுவது எப்படி?



2. நோயுற்றவரை பராமரிப்பது எப்படி?



3. மருந்தில்லாமல் குணமாக்க முடியுமா?



4. மருந்துகள் தேவையா? தேவையில்லையா?



போன்ற அரிய தகவல்கள் அடங்கிய அறிவுரைக் கொத்தாக இந்நூல் உள்ளது! மருத்துவ ஆசானாக எளிய மக்களுக்கு வழிகாட்டும் துணைவன் இந்நூல்.



352 பக்கங்கள் கொண்ட இந்நூல் விலையோ மலிவுதான். 150 ரூபாய்கள்தான்!



தமிழ் வளர்ச்சித் துறை பரிசினை பெற்ற நூல் இது! இனமானப் பேராசிரியர் அவர்கள் பரிசு வழங்கினார்கள்.



தவறான மருத்துவக் கருத்துகள் பரப்பப்படுவதையும் கூட வெகு நேர்த்தியாக இந்நூலாசிரியர்கள் சாடுகிறார்கள்_- அம்பலப்படுத்துகிறார்கள்!



நாடித்துடிப்பை அறிய..... என்ற தலைப்பில் (பக்கம் 206) ஒரு பகுதி:



நமது சினிமாக்களில் இளம் பெண் மயங்கி விழுவாள். உடனே அவசரமாக ஒரு டாக்டரை அழைத்து வருவார்கள். அவர் நாடியைப் பிடித்துப் பார்த்ததும் , உங்க பெண் தாயாகப் போகிறாள் என்பார். அதைக் கேட்டதும் அவர் மணமாகாத பெண்ணாக இருந்தால் அனைவருக்கும் அதிர்ச்சி. மணமான பெண்ணாக இருந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால், இது முற்றிலும் காதுல பூ சுத்தற காட்சி. கர்ப்பத்தை அப்படிக் கண்டு பிடிக்கவே முடியாது)!



இப்படி சுவையான தகவல் களஞ்சியம் இந்த நூல்.

செவ்வாய், 22 ஜூன், 2010

உலக தமிழ் செம்மொழி வெல்க!

உலகத் தமிழ் மாநாடு இதுவரையில் எட்டு நடைபெற்றுள்ளன. அவற்றையெல்லாம் விட ஒரு சிறப்பை வலியுறுத்தி நடைபெறும் மாநாடாக செம்மொழி மாநாடு அமைந்துள்ளது. அதாவது, தமிழ்ச் செம்மொழி என மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு, நடைபெறுகிற முதல் மாநாடு இதுவாகும்.



உலகில் 6 ஆயிரத்து 800 மொழிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இன்றுள்ள மொழிகளில் 2 ஆயிரம் மொழிகள் மட்டுமே உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில், கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஹீப்ரூ, சம்ஸ்கிருதம் ஆகியன மட்டுமே செம்மொழி எனும் தகுதியைப் பெற்றுள்ளன.



மற்ற செம்மொழிகளை விடவும் தமிழ் மேலானதாகும். இதற்குப் பல சான்றுகள் உள்ளன. செம்மொழிகளில் லத்தீன், ஹீப்ரூ ஆகிய மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் மொழி இடையில் நசிந்து இப்போது வளம்பெற்று வருகிறது.



சம்ஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. பாரசீகம், அரேபிய வரிவடிவத்தில் எழுதப்படுகிறது. அரேபிய மொழி, காலத்தால் மிகவும் பிந்தியது. இதுபோன்று, செம்மொழிகள் அனைத்தையும் பார்க்கும் போது, தமிழ் மொழி மற்ற செம்மொழிகள் எல்லாவற்றையும் விட உயர் தனிச் சிறப்பு வாய்ந்தது என்பது தெளிவாகிறது.



தமிழும், தமிழ்ச் சமுதாயமும் காலத்தால் மிகவும் பழமையானவை என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இலக்கிய வளத்தைப் பொறுத்தவரை 2,500 ஆண்டு காலமாக இடையறாத தொடர்ச்சியான இலக்கியங்களைக் கொண்டுள்ளது தமிழ் மொழி.



எந்த மொழியையும் சாரவில்லை: தமிழ் மொழி எந்த மொழியையும் சார்ந்து இருக்காமல் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது. இது, நமது தமிழ் மொழிக்கு உள்ள தனிப் பெரும் சிறப்பாகும்.



தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய பல மொழிகள் திராவிட மொழிகள் எனக் கூறப்படுகின்றன. இந்தத் திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாக தமிழ் விளங்குகிறது.



ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருக்கிறது. ஆனாலும், அதற்கு முறையான ஒப்புதல் இப்போதுதான் 2004-ல்தான் அதுவும் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகே நமக்குக் கிடைத்துள்ளது.


இந்தப் பெருமையைக் கொண்டாடும் வகையில் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது.



யார் யார் பங்கேற்பு? இந்த மாநாட்டுக்கு உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் பலர் வரவுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் ஜார்ஜ் ஹார்ட், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா உள்ளிட்ட பலரும் வருகின்றனர். அஸ்கோ பர்போலாவுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது அளிக்கப்படுகிறது.



உலகெங்கும் 49 அயல் நாடுகளில் இருந்து 536 தமிழறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கு பெறுகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 5 ஆயிரம் அறிஞர்கள் பங்கு பெறுகிறார்கள்.



குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறா

ஞாயிறு, 20 ஜூன், 2010

கருஞ்சட்டையின் பதில்

அண்மைக்காலமாக திராவிடர் கழகத்தை குற்றம் சொல்பவர்களும் குறை சொல்பவர்களும் ஒரு செய்தியை திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர்.இவர்களில் எவரும் இயக்க நலன் கருதி சொல்பவர்களில்லை.இயக்கத்தை கொச்சை படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கமே மேல் நோங்கி உள்ளது.அச் செய்தி தலைவர் வீரமணி வாரிசு அரசியல் செய்கிறார்!தன் மகனை திட்டமிட்டு இயக்கதில் முன்னிலை படுத்துகிறார் என்பதே!குறை சொல்பவர்களுக்காக அல்ல!இயக்கத்தின் பற்றும் பாசமும் கொண்டுள்ள பலருக்கும் அந்த இயக்கத்தின் சாதாராண தொண்டன் இதை எப்படி பார்கிறான்,அவன் சொல்லும் பதில் என்ன என்பதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவேஇப்பக்கம்எழுதுகிறது                                                                                                                                                1.இது முழுக்க முழுக்க இயக்கத்தின் உள் கட்டமைப்பு சம்பந்தபட்டது.வெளியில் உள்ளவர்கள் கருத்து தேவயற்றது.திரு.அன்புராஜ் அவர்களை அனைத்து பொதுக்குழு உருப்பினர்களும் அனைத்து மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களிலும் ஒரு மனதாக தீர்மானம் போட்டு அனைத்து கழக தோழர்களும் எற்றுக்கொண்ட பின் இயக்கம் சாராதவர்களின் கருத்து தெரிவிப்பது அநாகரிகமானது                                       2.தந்தை பெரியார் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போது அன்னை மணியம்மையார் எங்கோ மூலையில் புத்தகம் விற்று கொண்டிருப்பார் அப்படி தான் தலைவர் வீரமணி குடும்பமும் தலைவர் மேடையில் முழங்கி கொண்டிருப்பார் அவர் குடும்பம் தொண்டர்களோடு தொண்டர்களாய் உட்கார்ந்திருக்கும் பல மாநாட்டு ஊர்வலங்களில் அன்புராஜ் கொடி பிடித்து பங்கேற்றதுண்டு பலருக்கும் அவர் தலைவரின் மகன் என்பது தெரியாது அவரும் தலைவரின் மகன் என்று முன்னிலை வகித்ததில்லை தொண்டர்களோடு தொண்டராய் இருந்தார்                               3.அன்புராஜ் திணிக்கப்படுகிறாரா? என்றால் இல்லை இப் பக்கத்தை எழுதிக்கொண்டு இருக்கும் நான் என் தந்தை சுயமரியாதை சுடரொளி தருமபுரி முன்னால் மாவட்ட தலைவர் அ.பழனியப்பன் மகன் நானும் சில ஆண்டுகள் தருமபுரி மாவட்டசெயலாளர் பொருப்பில் இருந்தேன் நான் மட்டும் அல்ல கழகத்தில் தாத்தா அப்பா மகன் என பல ஆண்டுகள் அவரவர் செயல்பாட்டிற்கும் தகுதிக்கும் எற்ப பொருப்புகளில் இருந்துள்ளனர்.அன்புராஜ் அவர்களும் ஒரே நாளில் தலைமை நிலைய செயலாலராக வரவில்லை அதற்கு முன்பே சில பொருப்புக்கள் வழங்கபட்டு அது வெற்றி கரமாக நடத்தப்பட்டு பலரின் பாராட்டு பெற்ற நிலையில் தான் வழங்கப்பட்டது                                                                                                                          4.அன்புராஜ் திட்டமிடப்பட்டு தலைமை பொருப்புக்கு கொண்டு வரபடுகிறரா?என்றால் இல்லை மறைந்த துரை.சக்ரவர்த்தி அவர்களை தான் தலைவர் வீரமணி தலைமை பொருப்புக்குத் தயார் படுத்தினார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.அவரின் திடீர் மறைவு, பணிச்சுமை,தலைவரின் உடல் நலம் அகியவற்றை கருத்தில் கொண்டு நம்பிக்கையான,நாணயமான,கட்டுப்பாடும்,அடக்கமும் ,உள்ள துடிப்பான இளைஞராக வாய்த்தவர் தான் அன்புராஜ்                                                                                                     5.இது இயக்கம் மட்டும் அல்ல;தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டு தலைவர் வீரமணியால் கட்டி காப்பற்றப்படும் குடும்பம்;கொள்கை குடும்பத்தின் தலைவரின் சுமையை எங்கள் மூத்த அண்ணன் சுமக்க வருவதில் தவறில்லையே!எங்களை பொருத்தவரை காலம் கடந்து வருகிறார் இன்னும் முன் கூட்டியே வந்திருக்க வேண்டும். ஒரு விசயம் புரியவில்லை அன்புராஜ் கண்டு பார்பான் பதருகிறான் புரிகிறது இங்கிருந்து வெளியேற்றபட்டவனும் பதருகிறானே!