திங்கள், 27 செப்டம்பர், 2010

இந்து முன்னணியே எப்போது இடிக்கலாம் மத்தூர் வல்லபை கணபதி கோவிலை ?


வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். சிதம்பரம் வல்லபைகணபதி, மத்தூர் வல்லபை கணபதி கோயில் ஆகியவற்றைப் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.இது என்ன? என்று வெள்ளைக்காரன் விளக்கம் கேட்டால், இதுதான் எங்களுடைய கடவுள் என்று சொன்னால், இதைப் பற்றிய விளக்கத்தை ஏற்றுக்கொள்வாரா?இல்லிங்க, இது யானைக் கடவுள் என்று சொன்னால், யானைக் கடவுள் எப்படி வந்தது என்று கேட்க மாட்டானா? அரை யானை; அரை மனிதன் என்று சொன்னால் ஏற்க முடியுமா?வல்லபை கணபதியானைத் தலையை எடுத்து மனிதனுக்கு ஒட்டவைத்தது என்று சொன்னால் ஏற்க முடியுமா?வல்லபைகணபதியினுடைய வரலாறை வெள்ளைக்காரனிடம் விளக்கினால் என்ன ஆகும்? முழு நிர்வாணமான பெண்ணை மடியில் வைத்து அவளது பெண் குறிக்குள் தும்பிக்கையை சொருகி கொண்டிருக்கும் கணபதி நாம் வணங்கி கொண்டியிருப்பதை பார்த்தால் பெரியார் சொன்னது போல் நம்மை காட்டுமிராண்டி என்று சொல்ல மட்டனா?நம்முடைய ''அர்த்தமுள்ள இந்துமதம் ''பற்றி மற்ற மதத்தினர் என்ன நினைப்பார்கள் ?நித்தியானந்தா போல இன்னோரவன் உருவாகி கணபதி செய்வது போல் செய்தல் என்னாவது ?ஆகவே என் அருமை இந்து முன்னணி நண்பர்களே இந்து மதத்தை ஆபாச குப்பைகளில் இருந்து மீட்டு எடுபோம் முதற்கட்டமாக மத்தூர் வல்லபை கணபதி கோவிலை இடித்து விடலாம் எப்போது இடிக்கலாம் என்பதை ராமகோபாலன் ஐயரை தேதி குறிக்க சொல்லுங்கள் ! எப்பாடு பட்டாவது இந்து மதத்தை காப்பாற்றியாகவேண்டும்!

வியாழன், 16 செப்டம்பர், 2010

எங்கள் பெரியார்

தலைப்பைச் சேருங்கள்
மூடிமறைத்து பேச
அறியார்
மூட பழக்கம் எதுவும்
தெரியார்
நூலார் திமிர் அறுத்த
வாளார்
நூற்றாண்டு கடந்து வாழும்
வரலாறார்
நரியார் தோலுரித்த
புலியார்
நால்வகை வர்ணம் கலைத்த
கரியார்
எளிதாய் கடந்து செல்லும்
வழியார்
ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த
விழியார்
தெளியார் அறிவு நெய்த
தறியார்
தெளிந்தோருக்கு தெளிவான
குறியார்
உலக தமிழருக்கு
உரியார்
உணர்ந்தால் விளங்கும்
மொழியார்
மநூ வேதம் கொளுத்திய
திரியார்
மாதருக்கு தெளிவான
ஒலியார்
தேடி படிக்க சிறந்த
நெறியார் - தூய
தாடி முளைத்த
தந்தை பெரியார்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தந்தை பெரியாரின் தலை மாணாக்கர் அண்ணா வாழ்க !



பெரியாரின் தளபதி நீ..!
வறியோரின்
விளை நிலம் நீ..!

திராவிடத்தின் உறுப்பு நீ..!
மூடத்தனத்தை
சாம்பலாக்கிய நெருப்பு நீ..!

காஞ்சி நகர் வைரம் நீ..!
தமிழ்க்
கண்டெடுத்த வைடூரியம் நீ..!

சென்னையை மாற்றினாய்  நீ..!
நேர்த்தியாய்
தமிழ் நாடென்றாக்கினாய் நீ..!

தமிழை வளர்த்தாய் நீ..!
தமிழை
வளர்த்த தாய் நீ..!

பேரறிஞப் பெருமகனாம் நீ..!
தமிழகத்தின்
தலை மகனாம் நீ..!

அன்னமிட்ட கை நீ
தமிழ்க்
கன்னலிட்ட வைகை நீ..!

உதய சூரியன் நீ..!
இம்மண்ணில்
இன்று உதித்தவனும் நீ..!

நூற்றாண்டின் சூரியன் நீ..!
தமிழ்ச்
சான்றோரின் சந்திரன் நீ..!

திராவிடத்தின் இருப்பு நீ..!
ஆரியப்
பகைவர்க்கு நெருப்பு நீ..!

பகுத்தறிவுச் சுடர் நீ..!
பலருக்கு
வாழ்வழித்த சுடர் நீ..!

நூற்றாண்டு கண்டாய் நீ..!
தமிழே
எமையுன்னோடு சேர்ப்பாய் நீ..!

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

தமிழர் தலைவர் வீரமணி வாழ்க!


நேர் நின்று எதிர்ப்பதிலே வேங்கை போன்றோன்.
   நீடுதுயில் நீக்குவதில் கதிரைப் போன்றோன்.
தேர்தொட்டு இழுப்போர்க்கும், தீர்த்தம் ஆடி
   திளைப்போர்க்கும் சுடுகின்ற தீயைப் போன்றோன்
கூர்பெற்ற போர்வாளாய் தமிழர் கையில்
  கிடைத்திருக்கும் நல்லதமிழ்ச் சான்றோன்.நீண்ட
பேர்பெற்று வாழுகிற புகழைக் கொண்டோன்.
    எழுபத்து எட்டாண்டு அகவை கண்டோன்!

                   - கவிஞர்.இ.சாகுல் அமீது
                                 சாமல்பட்டி
                           கிருட்டிணகிரி மாவட்டம்

விநாயகன்

விநாயகர் வரலாறு எந்த அளவுக்கு அசிங்கமும், ஆபாசமும், உண்மைக்கு மாறான செய்திகளும் கொண்டது என்பதைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தொண்டர்களாகிய நாமும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாகவே ஏட்டிலே எழுதியும், மேடையிலே பேசியும் விளக்கி வருகிறோம் என்றாலும் நாட்டு மக்கள் திருந்தியபாடில்லை. அவர்கள் அறிவு விளக்கமும், தெளிந்த சிந்தனையும் பெற வேண்டி அறிஞர்கள் பலர் நிகழ்த்தியுள்ள விநாயகர் பற்றிய ஆய்வுகளை ஈண்டுத் தொகுத்துத் தருகிறோம். கருத்து வழங்குகின்ற இவர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுயமரியாதை இயக்கத்திற்குச் சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் அய்யங்கார் என்பதும், மற்றவர்கள் பழுத்த சைவ சமய அடியார்த் தொண்டர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
1. முரண்பட்ட வரலாறு

பிள்ளையார் பற்றிய கதையை விளக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்த பின் பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் அவர்கள் என்ன அடாத செயலைச் செய்துவிட்டார் என்பதைத் தெளிவாக உணர முடியும்.
புராணக் கதைகளில் கணபதியின் பிறப்பே பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூறமுடியாது. ஆனால், ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.
கணபதி பெண் இல்லாமல் ஆணுக்குப் பிறந்தவர் என்றும், இதற்கு நேர் மாறாக ஆண் இல்லாமல் பெண்ணுக்குப் பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றன. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தன் உடல் அழுக்கை உருண்டையாக்கி விளையாடிக்கொண்டிருந்தாளாம். அந்த உருண்டையின் மீது அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை: கணபதியின் பிறப்பை வேறுவிதமாகச் சித்திரிக்கிறது. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்காநதியின் முகத்துவாரத்தில் உள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்த பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அந்தக் குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்று விட்டாளாம்.

மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவு படுத்த வில்லை. பிரம்மவைவர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப் பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனி பார்வை தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தாராம். ஆனால், °கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றுக்குள் புகுந்து குழந்தையின் தலையைக் கடித்துத் தின்று விட்டாளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலை கொண்ட கஜாசுரன் என்ற இராட்சன் தலையை வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும் கண்ணும் இல்லாத இக்குழந்தை தனக்குத் தலை இல்லையென்பதை எங்ஙனம் உணர்ந்தது. கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது என்பதை °கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

"சுப்ரபேத ஆகமம்" என்ற நூல் கூறுவதாவது; சிவனும், பார்வதியும் யானைகளைப் போல் சம்போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.
(ஏ.எ°.கே. அய்யங்கார் எழுதிய, "பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா." என்ற நூலின் பக்கம் 36, 40, 41, 42)

2. விநாயகர் இடைக்கால வரவே!

அறிஞர்கள் சிலர் சங்க இலக்கியத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப்படாததால் இடைக்காலத்தில் வந்த வழிபாடு விநாயகர் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்மவர்மன் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலை நகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.
ஞானசம்பந்தரும், "பொடி நுகரும் சிறுத் தொண்டர்கருள் செய்யும் பொருட்டாக கடி நகராய் வீற்றிருந்தான் கணபதிச் சரத்தானே" என்று பாடுகிறார்.
(டாக்டர் சோ.ந.கந்தசாமி, தமிழ்த்துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் "ஞான விநாயகர்" என்னும் கட்டுரையில்+ பக்கம் 20)

3. பண்டை இலக்கியத்தில் விநாயகர் இல்லை

நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார். சிறுத்தொண்டர் பரஞ்சோதி என்ற பெயரோடு வட பகுதியில் வாதாபி என்ற நகர் மேல் படையெடுத்துச் சென்று அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்பதும், வாதாபி யிலிருந்து கொணர்ந்தமையால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

(தமிழாகரர் வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், "தன்னை நினையத் தருகிறான்" என்ற கட்டுரையில் பக்கம் 17)

(மேல் இரு கருத்துகளுக்கும் ஆதார நூல்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்கடமுழுக்கு விழா மலர் 8+9+1978)

4. சிவனுக்குப் புதிய உறவு

பாடல் பெற்ற கோயில்களில் நாயன்மார் காலத்தில் விநாயகரை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகர் தமிழகத்துத் தெய்வம் அல்லர். முருகன் சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது போல விநாயகர் இடம் பெறவில்லை. விநாயகர் வழிபாடு பம்பாய் மாகாணத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அம்மாகாணம் பல்லவர் காலத்தில் பண்டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந்தது. சிறுத் தொண்ட நாயனார் சாளுக்கியர் தலை நகரான வாதாபியைக் கைப்பற்றியபோது இப்புதிய கடவுளை அங்கு கண்டார். தாம் முன்னர் கண்டறியாத அத்திருவுருவத்தைக் கண்டதும் வியப்புற்று அதனை எடுத்து வந்து தம் ஊரில் சீராளதேவன் கோயிலில் வைத்து வழிபடலானார். அது முதல் சீராளன் கோயில் கணபதீச்சுரம் எனப் பெயர் பெற்றது என்பதே தெரிகிறது. இக்கணபதீச்சுவரமே சம்பந்தர் பாடல்களில் இடம் பெற்றது. பின்னர் நாளடைவில் இப்புதிய கடவுளுக்கும், சிவபெருமானுக்கும் உறவுமுறை கற்பிக்கப்பட்டது. அதன் பயனாக விநாயகர் சிவபெருமானுக்கு முதல் திருமகனாராகக் கருதப்பட்டார். இவ்விநாயகர் வாதாபியிலிருந்து குடியேறிய தெய்வம் என்பதை 'வாதாபி கணபதி பஜேம் பஜேம்' என்ற தோத்திரத்தாலும் நன்குணரலாம்.

(சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய "சைவ சமயம்" என்ற நூலில் பக்கம் 62)

5-ஆம் நூற்றாண்டில் விநாயகர்

வடமொழியில் புராண நூல்கள் இயற்றினவர், இழிந்த மக்களின் நடையைக் காட்டிலும் அருவருக்கத்தக்கச் செய்திகளைப் பொய்யாகப் பிணைத்துக் கட்டிச் சிவபிரான் மேலும் உமைப் பிராட்டியார் மேலும் அவை தம்மை ஏற்றி யானை முகம் உடைய பிள்ளையார் அவ்விருவர் பால் நின்று தோன்றிய வரலாறுகளைப் பலவாறு ஒன்றோடொன்று மாறுபடப் பகர்ந்திருக்கின்றனர்.
யானை முகம் உடைய பிள்ளையாராகிய கடவுள் வணக்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் 6ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் தோன்றியதாகல் வேண்டும்.
(மறைமலைஅடிகள் எழுதிய "தமிழர் மதம்" என்ற நூலில்+ பக்கம் 190)

6. விநாயகரின் மனைவியர் பட்டியல்

விநாயகர் தன்னை வணங்கியவர்க்கு விக்கினத்தை நீக்குவோரும், அவ்வகை வணங்காதவர் க்ரு விக்கினத்தைத் தருபவரும் ஆவார். இவர் சித்தி, புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளாகிய மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தார். இவரது பிறப்பைப் புராணங்கள் பல பேதபடக் கூறும் (பக்கம் 1440)

7. யானைத் தலையர்

கஜமுகர்: ஒரு காலத்தில் சிவமூர்த்தியும், பிராட்டியும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதி இருந்த ஆண், பெண் யானைகளைப் பார்க்க அவற்றினின்றும் கஜமுகர் தோன்றினார். (பக்கம் 315)

(மேற்கூறிய இரு கருத்துகட்கும் ஆதாரம் ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த "அபிதான சிந்தாமணி") 

வியாழன், 2 செப்டம்பர், 2010

ருத்ரனின் பார்வை: வடகலை ஐயங்கார் வீட்டில்..

வடகலை ஐயங்கார் வீட்டில்..








ஐயங்கார் வீட்டுப் பெண் ஒருத்தியின் கதை இது. ஐஸ்வர்யா, தீபிகா போல அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, ஆனால் அவள் வாழ்க்கை அழகு. தாதெகிங் கூறுவது போல பள்ளம்தான் உயரத்தை தீர்மானிக்கும். அவளது அழகை அவளது தாத்தாவின் குணமும் செயலுமே தீர்மானிக்கின்றன. இது அவள் கதை என்பது போல அவளது தாத்தாவின் கதையும்தான்.கமலா படிப்பில் ஆர்வமுள்ள பெண். சிறு வயதில் தெருவில் சிறுவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது கில்லித் தண்டு கண்ணில் பட்டு ஒரு கண்ணில் பார்வை இழந்தாள். என்னென்னவோ வைத்தியங்கள் செய்தும் சரியாகாததால், மாற்றுக் கண் வைத்துப் பார்க்கலாம் என்று மருத்துவர்கள் முடிவெடுத்தார்கள்.கண்ணில் இப்போதெல்லாம் நுண்ணிய கருவிகள் மூலம் உள்பார்த்து, கணினியில் படமாக நிபுணர்கள் பார்வையிடுவது போல அந்தக் காலத்தில் இல்லை. அவளது கண்ணுக்குள் எப்படி இருக்கிறது, மருந்துகள் என்னென்ன மாற்றங்களை விளைவிக்கின்றன என்பதையெல்லாம் ஒரு தேர்ந்த ஓவியன் பார்த்து வரைய வேண்டும். அந்தப் படங்களின் அடிப்படையில்தான் மருத்துவக் குறிப்புகள் விவாதிக்கப்படும்.அப்படி கண்ணோடு கண்ணோக்கிய ஓவியனுக்கும் கமலாவிற்கும் காதல் பிறந்தது. அந்தக் காதலுக்கு வழக்கம் போல வீட்டில் எதிர்ப்பு இருந்தது. அவளது குடும்பம் அப்படி. இதைப் புரிந்து கொள்ள அவளது தாத்தாவைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.அந்த தாத்தாவின் பெயர் கிருஷ்ணமாச்சாரி.மதராஸ் வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தின் தலைவர், அன்றைய (1924-1930) சட்டமன்ற உறுப்பினர், எம். கிருஷ்ணமாச்சாரி ஒரு வடகலை ஐயங்கார். அவர் ஜாதி நமக்கு இப்போது முக்கியமில்லாததாய்ப் படலாம், ஆனால் அவருக்கு அது மிகவும் முக்கியமாகப் பட்ட ஒன்று. சாதிப் பற்று மட்டுமின்றி, மதப்பற்றும் அவருக்கு அதிகம். இதை அவர் எழுதிய நூல்களில் ஒன்றான –India’s Higher Call (1934) என்பதில் பார்க்கலாம். அவர் பல விஷயங்களில் தீர்மானமாக இருந்தார். அம்பேத்கர், காந்தி ஆகியோரை எல்லாம் எதிர்த்தார்.அவரது கொள்கைகளில் சில-1. பெண்களுக்குத் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைத்தர முடியாது. அவர்களைச் சின்ன வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட வேண்டும், இதுதான் அவர்களுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நல்லது. (அப்படிச் செய்யாவிட்டால் ஒரு பெண் தன் விருப்பப்படி எவனையாவது திருமணம் செய்து கொண்டு விடுவாள்!).2.எல்லாரும் சமம் என்பது எல்லாம் சுவையான கட்டுக்கதை. காந்தி மட்டுமல்ல, பலரும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசி நாட்டின் தர்மத்தைக் குலைக்கிறார்கள். ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேசம் குறித்து காந்தி காட்டும் அக்கறை நாட்டுக்கு நல்லதல்ல, இதனால் உயர் பண்புகளைக் கடைபிடிக்கும் ஸநாதனவாதிகள் எல்லாரும் ஒன்று திரண்டு கொதித்தெழுவார்கள்.(!)3.எல்லாருக்கும் வாக்குரிமை என்பது சரியல்ல. படிக்காதவர்கள் சரியான முறையில் தேர்தலில் பங்கேற்கத் தகுதியில்லாதவர்கள்; வாக்களிக்க அருகதையற்றவர்கள் .4. தாழ்த்தப்பட்டவர்கள் அழுக்கானவர்கள் மட்டுமல்ல, பாப காரியங்களில் ஈடுபடுபவர்கள். (பக்கம் 110, மேலே குறிப்பிட்ட அவரது புத்தகத்தில்). பக்தி, பிரபத்தி, கைங்கரியம் போன்ற உயர்குணங்கள் புரியாமல் காந்தி சாதுர்யமான வார்த்தைகளால் மக்களைத் திசை திருப்புகிறார்! (பக்கம் 111)5. அம்பேத்கரிடம் அவர் வாதிட்டதை வைத்துப் பார்த்தால், மதத்தின் தலைவர்கள் சொற்படி கேட்டுத்தான் அடிப்படை உரிமைகள் குறித்த விஷயங்களில் அரசு முடிவெடுக்க வேண்டும்.ஜகத்குரு சங்கராச்சாரியர் முன்னிலையில் கல்கத்தாவில் 1933 நடந்த சனாதன தர்ம மாநாட்டின் தலைவராக இந்த கிருஷ்ணமாச்சார்யா, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கு எதிரான சட்டத்தையும், காந்தியின் ஆலயப் பிரவேசப் போராட்டத்தையும் ‘அசுரத்தனமானவை’ என்றும் குறிப்பிட்டு உரையாற்றினார்.ஆனால் இதே கிருஷ்ணமாச்சாரிதான் இந்தியாவின் முதல் (Moral Science) நீதிநெறி போதனைக்கான பாட நூலை 1911 ஆண்டில் எழுதியவர். (The handbook of Morals).



சாதிப்பற்றும் மதப்பற்றும் மிகுந்து, இவற்றுக்காக ஓயாமல் பேசியும் எழுதியும் வந்த அவருக்கு வரதாச்சாரி என்றொரு மகன். இந்த வரதாச்சாரி கோவில் யானைக்கு நாமம் U போடுவதா Y போடுவதா என்ற வழக்கில் ஆஜரானவர். இந்த வரதாச்சாரியின் மகள் கமலா.அவள் சாதியை விடவும் காதலுக்கு முக்கியத்துவம் தந்தாள்.வீட்டாரின் எதிர்ப்பை மீறி, ஜாதியை, சம்பிரதாயத்தைப் புறக்கணித்துத் தன் காதலன் வீட்டுக்கு வந்தாள். அந்தக் காதலர்கள் திருமணம் செய்து கொண்டு ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அவளுக்கு கோவிலுக்குப் போவதில் நம்பிக்கை கிடையாது. இன-மத வேறுபாட்டுடன் யாரையும் பார்க்கவும் தெரியாது. தன் 80வது வயதில் 23 வயது பெண் ஒருத்தி, “பாட்டி, எங்கப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டார்” என்று சொன்ன போது, ‘சொல்லிப்பாரு, கேட்டுப்பாரு, ஒத்துவரலென்னா வீட்டை விட்டு வெளியிலே வந்துடு. இந்தப் பையனை லவ் பண்றே இல்லே, அவனை நம்பினா டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ” என்று அறிவுரை(!) வழங்கியவள்.அவளுக்கு சாதி கிடையாது, இனம் கிடையாது, மத நம்பிக்கையும் கிடையாது, போலிச் சடங்குகளிலும் ஈடுபாடு கிடையாது. தன் காதல் கணவன் இறந்த போது கூட வெட்டியாய் காரியமெல்லாம் வேண்டாம் என்று சொன்னவள்.அவள் தாத்தா சொன்னது போல் நடந்திருந்தால் மிகச் சிறிய வயதில் பால்ய விவாகம் நடந்திருக்கும். வசதியாகக் கூட வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவளைப் பற்றிப் பேச ஒன்றும் இருந்திருக்காது. அவளது தாத்தா சொன்னபடி நாடு கேட்டிருந்தால், இன்னும் ஜாதி பேதம் தீவிரமாக இருந்திருக்கும்.60 ஆண்டுகளுக்கு முன்னர் இவளைப் போன்றோரும் இருந்தார்கள், இவளது தாத்தாவைப் போன்றவர்களும் இருந்தார்கள். இன்னமும் இப்படி இரண்டு வகை மக்களும் இருப்பதுதான் கேவலம். இன்னமும் ஜாதி வெறியுடன் மக்கள் இருப்பதுதான் அநாகரீகம். இதை இணையத்திலும் காட்டிக்கொள்வது தான் அதிகேவலம்.கண்பார்வை சரியில்லாததால் அவள் படிக்கவில்லை. படித்தும் கோணலாகவே பார்ப்பவர்களைவிடவும் அவளது பார்வை கூர்மையானது, தெளிவானது. அவளது சிறப்பு பிறந்த இனத்தால் அல்ல, வாழ்ந்த விதத்தால்.

சிவப்புச் சட்டைக்காரர் பெரியார்

Tamil Politics News Article மக்களினம் தோன்றி அது பிற இனங்களிலிருந்து மாறுபட்டு தழைத்தோங்க தலைப்பட்டபொழுது அதன் சிந்தனை வடிவங்களில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. பொருளாதாரம், ஆண், பெண், தனியுடைமை பொதுவுடைமை போன்றவற்றின் மீதும் அதன் வளர்ச்சி படிநிலைகளிளும் புதிய சிந்தனைகள் தோன்றின. மதமும், சாதியும் உழைத்துப் பிழைக்க அச்சப்படுவோரின் கண்டுபிடிப்பு என்றாலும் அதனுடைய தளமும் காலந்தோறும் மாறுபாடு அடைந்தது.
அடிமைத் தனத்திலிருந்த பண்ணையடிமை வடிவத்திற்கு மாறி முதலாளித்துவ வடிவத்திற்கு மாறிய பொழுதும் கூட வடிவம் தான் மாறியதே தவிர அதன் உள் கட்டமைப்பான ஆண்டான் அடிமைமுறை மேலும் மேலும் வலுப்பெற்றது. காலந்தோறும் புனிதர்களும், புரட்சியாளர்களும் தோன்றி புதிய தத்துவ சித்தாந்தங்களை மக்களிடையே விதைத்தாலும் அவர்கள் மேல் கீழ் போன்ற நிலைகளில் சமரசம் செய்து கொள்ள முடியாமல் போராட்டம் புரட்சியாக மாறி அவர்கள் காலத்துக்குள்ளாக மட்டும் அல்லது ஒரு குறுகிய சிந்தாந்தமாக மட்டும் வடிவம் பெற்று தோற்றுப் போனது.
காலந்தோறும் அதன் நிகழ்வின் மீது சமரசம் செய்து கொள்ளாமல் கருத்தை வெளியிடும் சிந்தாந்தம் மறுமலர்ச்சிகான புரட்சியாகும். அப்புரட்சிக் கருத்துக்கள் வரலாற்று மறைப்புக்குள்ளாகும் பொழுது அதனை மீட்டெடுக்க வேண்டிய தளமும் உருவாகவேண்டியுள்ளது. அத்தளத்தில் நிற்பவரே சிவப்புச் சட்டைக்காரர் பெரியார்.
அரசும் ஆளும்வார்க்கமும் சமுதாய சலுகையை நியாயப்படுத்தும் வகையில், சுரண்டல் நிகழ்வதை நியாயப்படுத்துவதும் குறிப்பாக மறைமுக முதலாளித்துவத்தை நியாயப்படுத்தும் பொழுது அதனை தகர்த்தெறிந்து "சாதியம், சமயம், தேசியம் என்பனவற்றில் பொதுவுரிமையுடன் கூடிய பொதுவுடைமை சித்தாந்தை நிறுவியவர் 1973 டிசம்பர் 23 வரை நவீன யுகத்தில் "தீண்டதகாதது" என ஒதுக்கிவைக்கப்பட்ட/ ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட மார்க்கத்தினை முன்னுக்கு வார்த்தெடுத்தவர். அனைத்துத் தளத்தின் சமுதாய விடுதலையின் குறியீடான "சிவப்புச் சட்டை அந்தனர்."
ஏங்கல்ஸ் போன்றோர்கள் பொதுவுடைமை கருத்துக்களைக் மொழிந்தாலும் அவரையடுத்து காரல் மார்க்ஸ் சிந்தனையை அனைத்துத் தளங்கலாலும் பரப்பி வெற்றியடைந்தார். குறிப்பாக, 1919 ஜூலை 11-ல் ஸ்வேர்திலோப் பல்கலைக் கழகத்தில் தோழர். லெனின் அவர்கள் ஆற்றிய "அரசு" என்னும் உரை வெகுவாக மக்களைக் கவர்ந்தது. அவ்வுரை நூல்வடிவம் பெற்று உலகமொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. அதே தளத்தில் நின்றே தமிழ்நாட்டில் பெரியார் தம் பணியினைச் செய்தார்.
ருஷ்ய நாட்டிற்குச் சென்று பல தலைவர்களுடன் உரையாடி தாம் பெற்ற கருத்தாக்ககளையும் சோசலிசப் பொருளாதாரம் என்னும் நிலையிலும், மார்க்சிய சோசலிசவாதிகளின் கருத்துக்களை மட்டுமல்லாது, இராமலிங்க அடிகளாரின் சமரச சன்மார்க்கக் கருத்துக்களையும், ரஸ்ஸல், போன்ஸ்யொ, பெர்னாட்ஷா போன்ற கம்யூனிஸ்ட் அல்லாத சோசலிஸ்டுகளின் படைப்புகளையும் வெளியிட்டார். "கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவரும், "மே" தின நிகழ்வை முதன்முதலில் தமிழகத்தில் கொண்டாடிய பெருமையும் இவரேயே சாரும்.
தான் சார்ந்த "குடியரசு" இதழில் பொதுவுடமைத் தத்துவங்கள் ( Principles of communision) என்றக் கட்டுரையை 26.03.1933 இல் வெளியிட்டார் (1) ரசியாவைக் கண்டு அஞ்ச வேண்டாம்" - இலங்கையைச் சேர்ந்த காலிவின் டி. சில்வா (சிரிலங்கா சமமாஜக் கட்சி) எழுதிய கட்டுரை " (குடியரசு 27.11.1933) (2) "போல்ஷ்விசம்" அல்லது பொதுவுடைமை - இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.எ. லாஸ்கி எழுதியது (குடியரசு 23.4.1933) (3) "போல்ஷ்விக் அரசாட்சி எல்லா தேசங்களிலும் நன்மை பயக்குமா?" - அமெரிக்க மார்க்கியர் ஸ்காட் நியறிஸ்குக்கும் பெட்ரண்ட் ரஸ்ஸலுக்கும் இடையே நடந்த விவாதம் ( புரட்சி 11.02.1934. 18.02.1934 ) (4) ஸ்டாலினுக்கும் எச்.ஜி. வெல்ஸ“க்கும் இடையே நடந்த உரையாடல் (பகுத்தறிவு 25.11.1934) (5) சமத்துவ சிந்தனை என்றால் என்ன? ஜவஹர்லால் நேருவின் கட்டுரை ( புரட்சி 26.11.1933) (6) ருசியாவும் ரவீந்திரநாத் தாகூரும், ஸன்யாஸ் கட்டுரையின் தமிழாக்கம் (குடியரசு 13.8.1933) போன்ற கம்யூனிஸ்ட் கருத்தாக்ககளைத் தமது இதழில் எழுதி வந்தார்.
(1) பொதுவுடடைமை தத்துவங்கள் (2) லெனினும் மதமும் (3) சோஷ்யலிசம் (4) புது ரஷ்யா (5) காரல்மார்க்ஸ் போன்ற நூல்களையும் 1940 - முதலே வெளியீடு செய்தார்.
25.03.1944ல் வெளியான குடியரசு நாளேட்டில் "பொதுவுடைமை வேறு, பொதுவுரிமை வேறு, பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்." என்று பொதுவுடைமை சித்தாந்தத்தை புதிய புரிதலுக்குட்படுத்தினார்.
பொதுவுடைமை என்பது நாட்டுமக்களிடையே தோன்றினாலும் அதனை அனுபவிக்கும் பொதுவுரிமை நம்மிடையே தோன்ற வேண்டும்.
ஒரு இல்லத்தில் அனைத்துவிதமான பொருட்களும் உணவும் இருந்தாலும் அதனை "அரசு" என்கிற தலைமகனுக்கு மட்டும் பொதுவுரிமையுடன் நுகர முடியுமேயானால் அங்கு பொதுவுடைமை என்பது பயனற்று போகிறது. அதனை மாற்றி பொதுவுரிமையுடன் கூடிய பொருவுடைமை என்பது வேண்டுமென்கிறார்.
பொதுவுடைமை, பொதுவுடைமை ஆட்சி என்பதினை பொதுவாக பொருட்களை அனைவருக்கும் சமமாக பங்கிட்டு கொடுப்பதனால் என்ன பயன்? பொதுவுடைமை என்பது மக்கள் வாழ்க்கைக்கான நெறிமுறையே தவிர அதுவே வாழ்வாக முடியாது. மக்களைப் பக்குவப்படுத்தாமல் பொருளியலில் மட்டும் பொதுவுடைமையை அடிப்படையாக கொண்ட சமூகத்தை கட்டமைப்பது என்பது சரியான அடித்தளமில்லாத கட்டிடத்திற்கு சமமானதாகும். எனவே மக்களையும் பக்குவப்படுத்தும் நிலைப்பாட்டில் அதன் உள்ளர்ந்த நிகழ்வான சாதிய மத ரீதியான, சமுதாயம் சார்ந்த படிநிலைகளை வேரறுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
மக்களின் வாழ்வியல் படிநிலைகளுக்கு ஏற்ப அவர்களின் புரிதலுக்கு உட்படுத்தி பொதுவுடைமையினை சுயமரியாதைக்கான நிகழ்வாக மாற்றி காட்டினார். " பொதுவுடைமைத் தத்துவமென்பது என் கருத்துப்படி மனித சமுதாயத்திற்கு இருந்து வரும் இழிவுகளும், குறைபாடுகளும் நீக்கப்படுவதுதான்" (விடுதலை 04.02.1966) என தனது பொதுவுடைமை சிந்தாந்தினை வெளிப்படுத்திக் காட்டினார்.
சமூகத்தினை அதன் நிலைப்பாட்டிலிருந்து மாற்றி புதிய சமன் செய்த சமூகத்தினை உருவாக்கும் பொதுவுடைமை தளத்தினை வாழ்நிலையின் எளிய சிந்தனையுன் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார். "தேவை நிறைவேறாமல் ஏற்படும் குறைபாடும், அளவுக்கு மேற்பட்ட ஆசை நிறைவேறாததால் ஏற்படும் குறைபாடும் பொதுவுடைமையினால் தான் தீருமென்று" (உண்மை 14.02.1972) திட்டவட்டமாகக் கூறினார் மக்களின் வாழ்நிலையை இவ்வாறு இருவிதமாக பகுத்துக்கொண்டு, அதன் மூலம் மக்களுக்குரிய பொதுவுடைமையினை வலியுறுத்தினார்.
பொதுவுடைமைவாதிகளும் சோசலிசவாதிகளும் தங்களின் இயக்கம் சார்ந்து கொள்கையினை விளங்கி கொள்வதற்கும், பெரியார் பொதுவுடைமையை விளங்கி கொள்வதற்கும் வேறுபாடே காணப்பட்டது. "பொதுவுடைமை என்பது பகுத்தறிவின் எல்லையாகும்" (விடுதலை 24.04.1967) என்று பெரியார் கூறியதை உணர்வோமையானால் அவர் எப்பொழுதும் பொதுவுடைமைக் கோட்பாட்டை நழுவ விடவில்லை என்பதினை அறிய முடிகிறது.
1950-51-ல் திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையைப் பெரியார் மிகக் கடுமையாக ஆதரித்து வந்த பொழுதும் கூட " இந்த நாட்டிலே உண்மையான கம்யூனிசக் கொள்கையுடைய ஆட்சி ஏற்படுமானால் திராவிட நாடு பிரிவினைக் கிளர்ச்சிக்கு அவசியமில்லாமல் போய்விடும்" (விடுதலை 05.01.1951) என கம்யூனிசக் கொள்கையின் மீது அதீத நம்பிக்கைக் கொண்டவர் பெரியாராவார்.
பெரியார் நீதிக்கட்சிகளுடன் சமரசம் செய்துகொண்டு "சரச சல்லாபம்" காட்டுவதாக தோழர் சிங்கார வேலர் கூறியக் கருத்து, உண்மையான தோழர். பெரியாரை புரிந்து கொள்ளவில்லை என்றே உணர முடிகிறது.
சுயமரியாதை இயக்கத்தால் ஆதரிக்கப்பட்ட சில நீதிக்கட்சி அமைச்சர்கள் அன்றைய தாழ்த்தப்பட்டோர், பெண் உரிமை, தேவதாசி ஒழிப்பு, இரட்டை வாக்குரிமை, உள்ளாட்சி மன்றங்களிலும் தேவஸ்தானங்களிலும் பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வழங்க வேண்டி உரிமைகளை பார்ப்பனரின் கடும் எதிர்ப்புகளுக்கிடையிலும் செய்துவந்தனர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனை சிங்கார வேலர் கருத்தில் கொள்ளவில்லை. மேலும், பெரியாரின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் அனைத்தும் "பகுத்தறிவு" "குடி அரசு" இதழில் வெளிவந்ததை யாரும் மறுத்துகூறவும் இயலாது.
"நாங்கள் பிராமனர்கள் என்ற தனிப்பட்ட வகுப்பார் மீது துவேஷம் காட்டுபவர்களரல்லர், மாறாக பிராமணத்துவம் என்ற கருத்தியலை எதிர்ப்பவர்கள்" என்ற கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் பார்ப்பனர்களின் சிறப்புரிமைகளை மட்டுமல்லாது தாங்கள் மொட்டையாக வரையருக்கும் "பிராமணத்துவம்" என்பதைக்கூட கேள்விக்குட்படுத்துவதில்லை என்பதையும் பெரியார் சுட்டிக்காட்டினார்.
1931- ஆம் ஆண்டு விருதுநகர் சுயமரியதை மாநில மாநாட்டில் கலந்து கொண்ட ஜீவா "சுயமரியாதை" இயக்கம் இந்தியா முழுவதும் பரவவேண்டும் என்று விரும்பி அம் மாநாட்டிலேயே ஒரு தீர்மானமும் தொடங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அதன் பயனாகத் தொடங்கப்பட்டது தான் "ரிவோல்ட்" என்ற ஆங்கில ஏடு ஆகும்.
பெரியார் தான் வாழ்ந்த காலம் முழுமைக்கும் பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்தார். பொதுவுடைமை சிந்தாந்தத்தை புதிய புரிதலுக்குட்படுத்தி மக்களின் வாழ்வியல் படிநிலைக்கு ஏற்ப பொதுவுடைமையை எளிய உடைமையாக்கி சிவப்புச் சட்டைக்காரரின் வாழ்வியலை கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ளாமல் விலகியது வருந்த வேண்டிய நிகழ்வே.
பெரியாரியமும், கம்யூனிஸமும் சரியான புள்ளியில் இணையாமல் போனது தமிழகத்துக்கு மட்டுமல்ல திராவிட இனத்துக்கும் மாபெரும் சரிவே. இந்தச் சரிவை சரியாக பயன்படுத்திக்கொண்ட "பிராமனியம்" மூங்கில் போல கண்முன்னே வளர்ந்து உச்சாணிக்கு போய்விட்டது. இன்றைய காலகட்டத்தில் திராவிடமும், கம்யூனிசமும் அதன் சில தலைமைகள் மறைமுக பார்ப்பனியத்தை ஆதரிக்காமல் ஒரே புள்ளியில் இணையுமானால் பன்னெடுங் காலமாக கனவாக உள்ள "சமூகவிடுதலை" சாத்தியமாகும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துமில்லை எனலாம்
பார்வை நூல்கள்:-
1) ஏ. எர்மக்கோவா, வி.ராட்னிக்கவ், "வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?".
2) லெனின், "அரசு."
3) எஸ்.வி. ராஜதுரை, வ.கீதா, பெரியார்: சுயமரியாதை சமதர்மம்.
4) பொன்னீலன், ஜீவா என்றொரு மானுடன்.
5) நன்னன். மா., பெரியாரியல்.
6) பெரியார், மெட்டிரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்.

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டுள்ளேன்': பிடல் காஸ்ட்ரோ

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டுள்ளேன்': பிடல் காஸ்ட்ரோ