செவ்வாய், 14 செப்டம்பர், 2010
தந்தை பெரியாரின் தலை மாணாக்கர் அண்ணா வாழ்க !
பெரியாரின் தளபதி நீ..!
வறியோரின்
விளை நிலம் நீ..!
திராவிடத்தின் உறுப்பு நீ..!
மூடத்தனத்தை
சாம்பலாக்கிய நெருப்பு நீ..!
காஞ்சி நகர் வைரம் நீ..!
தமிழ்க்
கண்டெடுத்த வைடூரியம் நீ..!
சென்னையை மாற்றினாய் நீ..!
நேர்த்தியாய்
தமிழ் நாடென்றாக்கினாய் நீ..!
தமிழை வளர்த்தாய் நீ..!
தமிழை
வளர்த்த தாய் நீ..!
பேரறிஞப் பெருமகனாம் நீ..!
தமிழகத்தின்
தலை மகனாம் நீ..!
அன்னமிட்ட கை நீ
தமிழ்க்
கன்னலிட்ட வைகை நீ..!
உதய சூரியன் நீ..!
இம்மண்ணில்
இன்று உதித்தவனும் நீ..!
நூற்றாண்டின் சூரியன் நீ..!
தமிழ்ச்
சான்றோரின் சந்திரன் நீ..!
திராவிடத்தின் இருப்பு நீ..!
ஆரியப்
பகைவர்க்கு நெருப்பு நீ..!
பகுத்தறிவுச் சுடர் நீ..!
பலருக்கு
வாழ்வழித்த சுடர் நீ..!
நூற்றாண்டு கண்டாய் நீ..!
தமிழே
எமையுன்னோடு சேர்ப்பாய் நீ..!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இன்றைக்கு வெளி வந்த நக்கீரன் இதழில் முதல்வர் ஜெயலலித்தா மாட்டுக்கறி உண்ணும் பழக்கமுடையவர் என்று வெளியிடப்பட்ட கட்டுரையால் தமிழகம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக