புதன், 26 ஜனவரி, 2011

சிங்காரபேட்டை பெரியார் வீர விளையாட்டுக்கழகம் நடத்தும் மாபெரும் கபாடி போட்டி

                         முதன்முறையாக மின்னொளியில் 
            பெரியார் வீர விளையாட்டுக்கழகம் நடத்தும் 

             மாபெரும் கபாடி போட்டி 
நாள் :29 -1 -2011 சனிக்கிழமை மாலை 8 மணியளவில் 
இடம் :அம்பேத்கார் திடல் சிங்காரபேட்டை

வரவேற்புரை :திரு .திருமுகம்
பெரியார் வீர விளையாட்டுக்கழகம்
 
தலைமை :மானமிகு. கே.கே.சி.எழிலரசன் தலைவர் மாவட்ட திராவிடர் கழகம் 
                                       மாநில துணைத் தலைவர் பெரியார் வீர விளையாட்டுக்கழகம் 
 
முன்னிலை :திருமதி. பிரேமாசந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்  
                          திரு.  ஏ .என் .ராஜா மாவட்ட துணை செயலாளர் திமுக 
                          மானமிகு . பழ .வெங்கடாசலம் மண்டல செயலாளர் திராவிடர் கழகம் 
                         திரு . ஆர் .கரும்பாயிரம் மு.ஊராட்சி மன்ற துணைத் தலைவர் 
                          திரு .  து .சண்முகம் ஊராட்சி மன்ற துணை தலைவர் 
 
போட்டியை தொடங்கி வைப்பவர் : திரு . ப.எல்லப்பன்காவல் ஆய்வாளர்  சிங்காரப்பேட்டை 
 
கவுரவ விருந்தினர்கள் :
                                   மானமிகு. பழ.பிரபு முன்னால் மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம் 
                      திரு.தணிகைஜி .கருணாநிதி மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளர் 
                           திரு. இர.திருநாவுக்கரசு இந்திய தேசிய காங்கிரஸ் 
                               திரு. வ.க.அசோக் மாவட்ட தலைவர் திரிணமுல் காங்கிரஸ் 
 
சிறப்பு அழைப்பாளர்கள் :
                                                 திரு. கே.கமலநாதன்மு.மாவட்ட பிரதிநிதி  
                                               திரு. பஷீர் கவுன்சிலர் சிங்கரப்பேடை
                                                   திரு .அகமத் பாஷா கவுன்சிலர் 
                                                  திருமதி .சத்தியவாணி மகளிர் அணி துணை தலைவர் அ.தி.மு.க.
                                                  மானமிகு.அண்ணா.சரவணன்மாநில துணை தலைவர் பகுத்தறிவாளர் கழகம் 
நன்றியுரை :திரு .பிரசாத் பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் 
                                                                               நன்கொடையாளர்கள் 
முதல் பரிசு -10000 /-
''சுயமரியாதை சுடரொளி கே.கே.சின்னராசு'' நினைவாக 
                                                  மானமிகு .கே.சி.எழிலரசன் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம் 
                                                                    மாநில துணைத் தலைவர் பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் 
 
இரண்டாம் பரிசு -7500/-
   ''சுயமரியாதை சுடரொளி அ.பழனியப்பன்'' நினைவாக 
                                              மானமிகு.பழ.பிரபு முன்னால் மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம் 
 
மூன்றாம் பரிசு -5000 /-
                                         
திரு.  ஏ .என் .ராஜா மாவட்ட துணை செயலாளர் திமுக

நான்காம் பரிசு -2500 /-
                      திரு..ஆர்.எஸ்.ரமேஷ் .மாவட்ட நிர்வாகி தேமுதிக 
 
அய்ந்தாம் பரிசு-1500 /- 
                      
    திரு . ஆர் .கரும்பாயிரம் மு.ஊராட்சி மன்ற துணைத் தலைவர்
 
ஆறாம் பரிசு -1000
                 திரு.ம.சத்தியநாரயனமூர்த்தி ஊராட்சி கழக செயலாளர் அதிமுக 
 

ஆறுதல் பரிசு -700 
 

               திரு.ஜி.ராமன் தேமுதிக 
 
 
சிறந்த அணிக்கான பரிசு-2000 /-
                  திரு .ஆர்.எஸ்.பார்த்திபன் .ஆர்.எஸ்.எலக்ட்ரோனிக்ஸ் ஊத்தங்கரை
  
 
சிறந்த வீரர்கான பரிசு 2000 /-
           திருமதி .
சத்தியவாணி மகளிர் அணி துணை தலைவர் அ.தி.மு.க.
 

குளிர்பான அன்பளிப்பு-2000 /-
                         
     திரு.தணிகைஜி .கருணாநிதி மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளர் 
                           திரு. இர.திருநாவுக்கரசு இந்திய தேசிய காங்கிரஸ் 
 
ஒலிஒளி அமைத்து தருதல் 
        திரு .பாஷ்பன்  அதிமுக கட்டமடுவு
             திரு. த.ராஜேஷ் .திரு கிரேனிட்ஸ் சென்னை 
 
நடுவருக்கான சிறப்பு செய்தல் 
                    ஸ்ரீ வினாயக ஏஜென்சீஸ் சிங்காரப்பேடை
                              இக்பால் பீப் ஸ்டால் 
சிங்காரப்பேடை

உணவு அன்பளிப்பு 

     திருமதி. பிரேமாசந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்
  
டிஜிட்டல் பேனர்கள் அன்பளிப்பு 
                திரு .எஸ்.ஏ.காந்தன் ஆசிரியர் (பணி நிறைவு )
             மானமிகு.அண்ணா.அப்பாசாமி ex.Army. பொருளாளர் விடுதலை வாசகர் வட்டம்
                        திரு .ஜெகன்   ஷார்ப் டிஜிடல் ஊற்றங்கரை 
                       திரு.விஜய் காய்கறி வியாபாரி ஒரிகினைப்பாளர் விஜய் ரசிகர் மன்றம்
 
சீருடை அன்பளிப்பு 
சிக்னல் வே .ஆறுமுகம் சிக்னல் டிரவெல்ஸ் & ரெடிமடஸ்
 
துண்டறிக்கை அன்பளிப்பு 
திரு.எ.பி.சக்கரவர்த்தி சக்கரவர்த்தி டேக்ஸ்டைல்ஸ்
  
நடுவர்கள் ;ந.புருஷோத்தமன் ,ஆனந்தன் ,கே.என்.நடராஜன் .சி அழகுமணி 

விழாக்குழுவினர்; திருவாளர்கள்
A .முரளி ,கே .ஆனந்தன் ,எஸ்.பி.சிவக்குமார் .எஸ்.விஜி.எஸ்.பிரபு கே.அருள் பி.சுப்பிரமணி ,வி.சக்திவேல்,ராம்கி,கே.வேலாயுதம் ,ஆர்.கார்த்தி.,ஜெ.தண்டபாணி.,நீலகண்டன் ,சங்கர் ,அருண்,அசோக்,இராமச்சந்திரன் பரசுராமன் ஆளப்பன் 

                                                                                 இங்கனம் 
                             பெரியார் வீர விளையாட்டுக் கழகம்   மற்றும் 
                          டாக்டர் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் 
                           சிங்காரப்பேட்டை
 






சனி, 15 ஜனவரி, 2011

இன எழுச்சி: தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம...

இன எழுச்சி: தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம...: "சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டல்ல! ---நக்கீரன் (கனடாவிலிருந்து)---(நன்றி ) தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம் ..."

தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம்

சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டல்ல!

---நக்கீரன் (கனடாவிலிருந்து)---(நன்றி )

தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம்


நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமியர்கள் மொகமது நபி மெக்காவில் இருந்து மெடீனாவிற்கு ஓடிய நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.

கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த டிசெம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது.

கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.

உரோம சக்கரவர்த்தி யூலியஸ் சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.

அதன் பின் கிறகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1ஃ4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பெப்ரபரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணித்தியாலங்கள், 49 நிமிடங்கள், 12 வினாடிகள் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிறகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் (1582-325)ஃ120ஸ்ரீ10) குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் ( 1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.

அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.


வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.


பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.

ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி)

கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.

'உவவுமதி' (முழுமதி) நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.

சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன.

சங்க இலக்கியங்களில் எல்லாத் திங்கள்களின் பெயர்களும் சொல்லப்படவில்லை. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்;டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேள்வைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும்.

இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவென்ன?

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல். எழுத்து - நூல்மரபு 8)

(இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி.)

காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

அரசர்கள் முடிசூடிக் கொண்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த அரசர் 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் எனக் குறிப்பிட்டார்கள். புலவர்களைப் பொறுத்தளவில் பிறந்த இறந்த ஆண்டுபற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடர் ஆண்டு இல்லாதது முக்கிய காரணமாகும், இருக்கிற 60 ஆண்டுகளும் சுழற்சி முறையில் வருவது மேலும் குழப்பத்தை உருவாக்கவே உதவியது. இதனால் வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியவில்லை.

இடைக் காலத்தில் 'சக' ஆண்டை வைத்து தொடர் ஆண்டு எண்ணப்பட்டது. சக என்பது வடபுலத்து அரசன் சாலிவாகன் பெயரில் உள்ள சாலிவாகன சகாப்தம் என்பதன் சுருக்கமாகும். தமிழ்நாட்டில் மொகலாயர் ஆட்சி நடந்தபோது அரசு ஆவணங்களில், குறிப்பாக வருவாய்த் துறை ஆவணங்களில் 'பசலி' ஆண்டு என்ற தொடர் ஆண்டு பின்பற்றப்பட்டது.

புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, நான் இல்லாத பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்துஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும்.

இந்தக் குழப்பத்தை நீக்க தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.

வானவியல் அடிப்படையில் தை முதல் நாள் ஞாயிறு தனுசு இராசியில் பட்டு மகர இராசியில் மலர்கிறான்.

தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. தைப் பொங்கல் திருநாளும் திருவள்ளுவர் நினைவாக அதற்கு மறு நாளும் அரச விடுமுறை நாட்களாகும்.

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் கருத்து தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.

தமிழ் மண் மீட்பு, தமிழின மீட்பு இவற்றோடு நின்றுவிடாமல் பிற பண்பாட்டுப் படையெடுப்பால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட எங்கள் கலை பண்பாட்டையும் நாங்கள் மீட்டெடுக்க வேண்டும்.

தைப் புத்தாண்டில் உலகம் வாழ் தமிழ்மக்கள் வாழ்வில் அல்லல்கள் நீங்கட்டும். துன்பங்கள் தொலையட்டும். இருள் அகலட்டும். விடியல் தோன்றட்டும். கோடி இன்பங்கள் குவியட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும். கல்வி துலங்கட்டும். தொழில்வளம் பெருகட்டும். அறிவியல் வளரட்டும். தமிழுணர்வு ஓங்கட்டும். இனவுணர்வு மலரட்டும்.

தமிழ் மண்ணில் அமைதி நிலவட்டும். அடிமை வாழ்வு முடியட்டும். மக்கள் வாழ்வில் தென்றல் வீசி புது வாழ்வு பூக்கட்டும். அந்த நம்பிக்கையுடன் புதிய ஆண்டில் காலடி எடுத்து வைப்போம்.

புதன், 12 ஜனவரி, 2011

சுயமரியாதை சுடரொளி ஊற்றங்கரை மானமிகு.அ.பழனியப்பன் 18 ஆம் ஆண்டு நினைவு நாள்

(சுயமரியாதை சுடரொளி ஊற்றங்கரை மானமிகு.அ.பழனியப்பன் அவர்களின் மறைவு குறித்து புலவர்.மா.சக்கரவர்த்தி பாடிய இரங்கற்பா)

பொருளற்றார்  பூப்பார் ஒருகால்
என்றான்  வள்ளுவன்

வண்டியோட்டி  வயிறு வளர்த்த
என் மாமன் அண்ணாமலைக்கும்
உண்ணாமலைக்கும் ..........
நான்காம் மகனாய் பிறந்தான்
என் அன்பு மாப்பிள்ளை
என் அறிவு மாணாக்கன்
பழனியப்பன் என்கிற பகுத்தறிவப்பன்

தந்தையால் கொஞ்சி மகிழ்ந்து
விளையாட முடியாதவன்
தமையன்களால் தாங்கத்
தவழ்ந்து எழுந்தவன்

வாட்டிய வறுமையும்
பூட்டிய உழைப்புமாய்
ஓட்டிய குடும்பத்தில்
ஒருவன் உயர்ந்தான்
அவன் தான் அருணாசலம்
அந் நாளைய ரோடு மேஸ்தரி !

சீர் தேடி சீமை சென்ற
சிவபிரகாச மாமனோ ....
ஊர் தேடி உழைப்பே
செல்வமென திரும்பி வந்தார்
உயர்த்து குடும்பம்
ஒன்றுக்கு நான்காய்
வீடுகள் பெருகின

ஆசிரியர் பயிற்சிக்கு
தேறினான் பழனியப்பன்
ஆனால் .....
பிள்ளைகட்கு சொல்லித் தர\
வாய்க்கவில்லை

ஆறுதல் தந்து மேஸ்திரி
அவனுக்கு சோடா பாட்டில்
சுற்றி நிரப்பி
ஊர் ஊராய் கடை கடையாய்
போட சொன்னார்

மிதி வண்டியில்
கொளுத்தும் வெயிலில்
மேனி வியர்க்க
சுழன்று சுழன்று உழைத்தான் அவன்
அய்யோ...!இன்று
சுழன்றது போதுமென ஒய்ந்தானோ ?
.................................................................
................................................................

கோரிக்கையற்று  கிடக்குதண்ணே
வேரில் பழுத்த பலா  எனக்
கைம்பெண்களுக்காகக்
கலங்கிய பாவேந்தன்
கனவை நனவாக்கினான்
கண்ணான பழனியப்பன்

எங்கள் கடத்தூரில்
வேரில் பழுத்த பலாவாய்
கலைமணி என்பாள்
கலங்கி இருக்கையில்

மணந்திடு அவளை மாப்பிள்ளை
என நான் வேண்ட
குணக்குன்றாம்
கோடியில் ஒருவனாம் பழனியப்பன்
அணங்கினை சந்தித்து
அவள் அண்ணன்மார்  சகதீசன்
சோதரர் ஆகியோடு

பெரிய மாமன் சிவபிரகாசம்
கைம்பெண் கொடுமை ஒழிப்பு
ஆதரவோடு
பெண்குலத்து மாதரசியாம்
தருமபுரி காளியம்மாள்
துணை வர

திருவண்ணாமலையில்
கைபிடித்தான் கலைமணியை!
.........................................................
............................................................

முதலில் பெண் பெற்றால்
என் வீட்டு மருமகளாய்
வரவேண்டும் எனக் கேட்டேன்
ஒப்பினார் இருவரும்
ஆண் இரண்டை பெற்று விட்டு
மாமனுக்கு தந்த வாக்கை
மறந்து துறந்து விட்டு
வானின் பெரிதாம் புகழுடம்பை
வையத்தார் போற்ற
தான் சென்ற அடைந்தானே !
தகுமோ பெரியாரே !

என் ஊன் இன்று உருகி
உள்ளம் இன்று கருகி
ஏன் என்று கேட்டு அழுகின்றேன்

ஏக்கமே மூச்சாக
என் எழுத்தால் துக்கமதை
எடுத்து வைத்தேன் உலகீரே!

வாழ்க்கை என்பது வியாபாரம் -அதில்
பிறப்பு என்பது வரவாகும்
இறப்பு என்பது செலவாகும்
என்றான் கண்ணதாசன்

வாழ்க்கை வியாபாரத்தில்
பழனியப்பன்
வானளாவ வெற்றி கண்டு
பிறப்பெனும் வரவினிலே
பகுத்தறிவு பகலவன் வழி சென்று
இறப்பெனும் செலவினிலே
இணையில்லா புகழ் கொண்டான்

தந்தை பெரியார்
பெயர் உள்ளளவும்
பகுத்தறிவு நெஞ்சங்களில்
பசுமை நினைவாக
அவன் பெயர் நிலைத்திருக்கும்
வாழ்க பழனியப்பன் புகழ் !
----கவிதை ஆக்கம் புலவர் .மா.சக்கரவர்த்தி

செவ்வாய், 11 ஜனவரி, 2011

இன எழுச்சி: மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் உண்ம...

இன எழுச்சி: மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் உண்ம...: " ஊற்றங்கரை தந்தை பெரியார் சிலை அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஸ்பெக்ட்ரம் உண்மை நிலை  என்ன ? என்னும் பொதுக்கூட்டம் நடைபெற்றது ...."

மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் உண்மை நிலை என்ன ?திராவிடர் கழக பொதுக்கூட்டம்

    
ஊற்றங்கரை தந்தை பெரியார் சிலை அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில்  என்ன ? என்னும் பொதுக்கூட்டம் நடைபெற்றது .இக் கூட்டத்திற்கு திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் மானமிகு  இர.அன்பு வரவேற்புரையற்றினார் திராவிடர் கழக மண்டல செயலாளர் மானமிகு  பழ.வெங்கடாசலம் தலைமை வகித்தார் .கிருட்டினகிரி மாவட்ட தி.க தலைவர்  மானமிகு.தா.திருப்பதி,   கிருட்டினகிரி மாவட்ட  தி.க  செயலாளர் மானமிகு .கோ .திராவிடமணி ,மாநில ப.க.துணை தலைவர்   மானமிகு .அண்ணா.சரவணன்  கிருட்டினகிரிமண்டல செயலாளர் மானமிகு .மு.தியாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பருகூர்சட்ட மன்ற உறுப்பினர்மானமிகு.கே.ஆர்.கே.நரசிம்மன் திமுக   மாவட்ட துணை செயலாளர் மானமிகு .எ.என் .ராஜா திமுக ஒன்றிய செயலாளர் மானமிகு .எக்கூர்.த.செல்வம்   திமுக நகர செயலாளர் மானமிகு.பாபுசிவக்குமார் திமுக   நகர அவைத் தலைவர் மானமிகு.பா.அமானுல்லா மாவட்ட தி.மு.க.இலக்கிய அணி செயலாளர் மானமிகு .தணிகை .ஜி.கருணாநிதி  ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் திமுக மாவட்ட செயலாளர் மானமிகு .டி.செங்குட்டுவன்  கலந்து கொண்டு சிறப்பித்தார் .திராவிடர்  கழக துணை பொதுசெயலாளர் மானமிகு.துரை.சந்திரசேகரன் ஸ்பெக்ட்ரம் உண்மை நிலை குறித்தும்  திமுக அரசின் சாதனைகள் குறித்தும் மிக சிறப்பான உரையாற்றினார் இந் நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர்   அரங்க.இரவி மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் மாவட்ட இலஞ்சரணி தலைவர்வி.ஜி .இளங்கோ மாவட்டப.க.அமைப்பாளர்சித.வீரமணி ஒன்றிய ப.க தலைவர்சித.அருள்  ஒன்றிய திக தலைவர்மானமிகு மா.ரவிச்சந்திரன்  ஒன்றிய ப.க தலைவர் இராம.சகாதேவன் ஒன்றிய ப.க.செயலாளர் இரு .கிருட்டிணன் நகர தலைவர் இர.வேங்கடம் நகர செயலாளர் முனி. வெங்கடேசன் சி.சாமிநாதன் ,க.துரை ,தீ.பொன்னுசாமி .வே.காவேரி ,பொன்.குப்புசாமி ,ஜெ.சிவலிங்கம் ,கணபதி கி .ஆ கோபாலன் ,புயல் ,மாயகண்ணன்,ஜெயராமன் ,தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னால் மாவட்ட செயலர் பழ .பிரபு நன்றி கூறினார் ஒன்றிய நகர திராவிடர் கழகம இந் நிகச்சியை ஏற்பாடு செய்தது ,