புதன், 11 ஜனவரி, 2012

சுதந்திர தின விழா கொண்டாடிய திமுக தமிழ் புத்தாண்டு கொண்டாட முன் வருமா ?

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ‘சித்திரை’ தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்து , அவரது பார்ப்பனிய இந்துத்துவ ஈடுபாட்டைத்தான் உறுதி படுத்திய பின் வரும் முதல் தை ,உள்ளூர் தமிழர்கள் முதல் உலக தமிழர்கள் வரை இவ் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக வெகு சிறப்புடன் கொண்டாட வேண்டும் .
தை முதல் நாளைத் தமிழ்  புத்தாண்டாகக் கொண்டாடும் வகையில் மூன்றுநாட்கள் (ஜனவரி 15 முதல் 17 வரை) சென்னை பெரியார் திடலில்  திராவிடர் திருநாள் விழாக் கொண்டாடப் படும் என திராவிடர் கழகம் அறிவித்து இன்றைக்கு விடுதலையில்  கரகாட்டம், பொய்க்கால் குதிரை , கட்டை ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கலைகளும், தமிழர்களின் பாரம்பரிய பல்சுவை உணவு விற்பனைக் கண்காட்சியும் நடைபெரும் எனவும் அறிவித்து சென்னை சங்கமம் இல்லாத குறையை போகிற்று

தொடர்ந்து மூன்று நாள் நடைபெறும் நிகழ்வில் முதல் நாள் கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலை, கலை வாணன் குழுவினரின் ஏன் தமிழ் புத்தாண்டு கிராமிய இசை மற்றும் திருச்சி கலைக் குழுவினரின் மார் கழியின் உச்சியில் மலரட்டும் தை ஒலி, ஒளி, நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன.
இரண்டாம் நாள் பன்னீர் அவர்களின் தனி ஆவர்த்தனம், திண் டுக்கல் சரவணனின் கவனக நிகழ்ச்சி, ரோபோ சங்கரின் நகைச் சுவை நிகழ்ச்சி, மற்றும் தை -1 தமிழ் புத்தாண்டு விளக்க கருத்தரங்கம் ஆகியவை நடைபெறுகிறது.
இறுதி நாள் கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சியும்   தஞ்சை செல்வி கலை குழுவின் கிராமியத் திரை இசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.என திராவிடர் கழகம் அறிவித்து செயல் பட்டு வருகிறது
ஆனால் தமிழ் புத்தாண்டை கொண்டாட மொழி,இன ஈடுபாடு மட்டும் அல்ல அரசியல் நெருக்கடியும் கொண்ட திமுக எவ் வித நிகழ்ச்சியும் ஏற்ப்பாடு செய்யாதது உண்மையில் ஏமாற்றம் அளிக்கிறது ,இவ் ஆண்டு முதன் முதலாய் அண்ணா அறிவாலையத்தில் சுதந்திர தின விழா கொண்டடாடிய திமுக தமிழ் புத்தாண்டை ,பொங்கலை அறிவாலையத்தில் கொண்டாட இனியாவது  முன் வருமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக