ஞாயிறு, 17 அக்டோபர், 2010

திருப்பம் தர காத்திருக்கிறது திருப்பத்தூர் வாருங்கள்!

''நான் என்னால் ஆன கடமைகளைச் செய்து முடித்தேன் என்ற களிப்புள்ளத்தோடு, எனது இறுதி நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். பெரியாரின் கனவுகளையெல்லாம் நனவாக்கிக் காட்டிடப் பல்லாயிரக்கணக்கில் இளஞ்சிங்கங்கள் தோன்றியிருக்கிறார்கள் என்ற மனநிறைவோடு நான் என் காலத்தை முடிக்க இருக்கிறேன். திராவிட நாடு திராவிடர்க்கே! இந்தி ஆதிக்கம் ஒழிக! தமிழ் வாழ்க! வளர்க! வெல்க! என்று முழக்கமிட்டு நான் மீளாவிடைபெற்றுச் செல்கிறேன். வாழ்க பெரியார்! வாழ்க திராவிடர் கழகம்!’''என்று தளபதி அஞ்சா நெஞ்சன் அழகிரி ஈரோட்டில் திராவிடர் கழக மாநாட்டில் தனது இறுதி உரையை பதிவு செய்த அதே  அக்டோபர் 23 இல் !


அண்ணாவை சாரட் வண்டியில் அமர வைத்து ஈரோடு முழுவதும் வலம் வர வைத்து . அந்த ஊர்வலத்தின்போது அறிவாசான் பெரியார் அந்த வண்டியின் பின்னால் நடந்தே வந்து  தனயனிடம் பெட்டிச் சாவியை ஒப்படைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று அறிவித்தாரே  அந்த அக்டோபர் 23 இல் !


சுயமரியாதை சுடரொளிகள் தங்கவேல் ,கே.கே.சி.சினரராஜ் ,எ.டி.கோபால் ,கோவிந்தசாமி ,Dr நாதமுனி ,வடசேரி ஜெகதீசன் ,ஊத்தங்கரை பழனியப்பன் ,கல்லாவி சிதம்பரம் ,ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எண்ணற்ற சுயமரியாதை தீரர்கள் களமாடிய மண்ணாம் திருப்பத்தூரில் திராவிடர் எழுச்சி மாநாடு!


 திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம்அன்றைய தினம்  சனிக்கிழமை காலை 10.30 மணி ஜி.பி. மகால், திருப்பத்தூர் (புதுப்பேட்டை சாலை)யில் மானமிகு ராஜகிரி கோ.தங்கராசு, செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்
அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது .திருச்சியில் நடைபெறவிருக்கும் உலக நாத்திகர்கள் மாநாடு,  வைக்கத்தில் பெரியார் விழா, மற்றும் கழக  பிரச்சாரத் திட்டங்கள்ம குறித்து
மாநிலப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினரகள் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றபட உள்ளன .


மாலை 3 .30 மணியளவில் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் மாநாடு துவங்குகிறது கழகக் கொடியை  தலைமை நிலைய செயல்லாளர் வீ.அன்புராஜ் ஏற்றி வைக்கிறார் .


திராவிடர் கழகம் தொடக்கம் முதல் தந்தை பெரியார் பாதை யைப் பற்றிக் கொண்டு, அய்யா, அம்மா, ஆசிரி யர் ஆகியோர் தலைமை களின் கீழ்  ஆடாமல், அசையாமல் கழகக் கொள்கைகளைக் கடும் பத்தியமாகக் கொண்டு, கழகத்திற்காக தொண்டு, நிதிகளை அளிப்பதோடு அல்லாமல், தமக்குப் பிறகும் தமது குடும்பம் திராவிடர் கழகப் பணிகளில் தொய்வின்றித் தொடர்ச் சியாக ஈடுபட்டுக் கொண் டேயிருக்க வேண்டும் என்பதைக் கருத்தாகக் கொண்ட சுயமரியாதை  சுடரொளி கே.கே.சின்னராஜ் அவர்களின் அன்பு மகனும் திராவிடர் கழக மாணவரணி இளைஞ்சரணி என பல பொறுப்புகளில் இருந்து 1998 ஆம் ஆண்டு கோவை  இல் நடை பெற்ற மத்திய நிர்வாக குழுவில் மிக இளம் வயது மாவட்ட தலைவர் என தலைவரால் அறிமுகபடுத்த பட்ட வரும் பயிற்சி முகாம்,கபடி போட்டிஎன கழகம் தந்த அணைத்து பணிகளையும் திறம்பட செயலாற்றி வருபவருமான மாவட்ட தலைவர் கே.கே.சி எழிலரசன் மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார் 


மாநாட்டில் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு சிறப்பு செய்து நினைவுப் பரிசும  , மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தினைத் திறந்து வைத்து வீர வணக்கம் செலுத்த படும்  ,
இனமான ஏடான விடுதலைக்கு ஆயிரம் சந்தாக்கள் வழங்க படுகிறது , குடிஅரசு 21 தொகுதிகளையும் முக்கியப் பிரமுகர்கள் வாங்குகின்றனர் 


 சென்னை பெரியார் திடலில் இயங்கிவரும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கு- தமிழர் தலைவர் அவர்களுக்கு எடை நாணயம் வழங்கபடுகிறது
இத்தனைக்கும் மேலாக வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் ,தமிழர் தலைவரின் எழுச்சி உரை அத்தனையும் ...!


திருப்பத்தூர் மாவட்ட கழகம் ஓராண்டுக்கு முன்பாக ஊத்தங்கரை ,மத்தூர் ஆகிய இரு ஒன்றியங்களை இணைத்து தமிழர் தலைவரின் செயல்திட்டம் ஏற்ற்று முழுவிச்சில் கழக பணியாற்றும் மாவட்டம் ஆகும் .தமிழர் தலைவர் பொதுகுழு அறிவித்த உடனேயே மாவட்ட தி.க. தலைவர் கே.சி. எழிலரசன்,தலைமையில்  மண்டல செயலாளர் பழ. வெங்கடாசலம், மாவட்ட செயலாளர் க.மகேந் திரன், மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன், பெரியார் சமூகக் காப்பு அணி துணை இயக்குநர் சித. வீரமணி, மாவட்ட துணைச் செய லாளர் எம்.கே.எஸ். இளங்கோவன், மாவட்ட இணைச் செயலாளர் அரங்க. இரவி, மாவட்ட இளைஞரணி தலைவர் வி.ஜி. இளங்கோ, அண்ணா அருணகிரி, கனகராஜ், ஆசிரியர் வையாபுரி, வெற்றிகொண்டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி, எம். ஆனந்தன், சாமி. அரசிளங்கோ, மாவட்ட மகளிரணி தலைவர் எ. அகிலா உள்ளிட்ட தோழர்கள் பலரும் தேனீக்-களாக பறந்து திரிந்து ஏற்பாடுகளைச் செய்து வரு-கின்றனர்!


சுவர் எழுத்துகள், பொதுமக்களின் மத்தியிலே கவனத்தையும் பெரிதும் ஈர்கின்றன கையில், பத்துக்கும் மேற்பட்ட வளைவுகள், 500-க்கும் மேற்பட்ட பதாகை கள் அமைகப்பட்டுள்ளது நகரமே விழா கோலம் பூண்டுள்ளது


எனவேதான், அழைகிறோம் !திராவிடர் களே! கொள்கை சிங்கக் குட்டிகளே, பதவி, பட்டம், புகழ் என்ற போதை-களுக்கோ, ஜாதி, மதப் பேதங்கள் என்ற மயக்க பிஸ்-கெட்டுகளுக்கோ ஆளாகாத மாணவச் செல்வங்களே, உங்களைக் கட்டித் தழுவிடக் காத்திருக்கிறோம்!

உயர்நிலை காண உழைக்கும் தன்னலம் அறியாத தணலின் பிழம்புகளே _ உங்களால் சுட்டெரிக்கப்படக் கூடிய குப்பைகள் அநேகம். சுற்றுச்சூழலைப் பாது-காக்கும் வண்ணம் அதனையும் லாவகமாகச் செய்ய நல்ல திட்டங்களைத் தீட்டிட வாரீர்! வாரீர்!!

படைபோல் தடை உடைத்து வருகவே!

திருப்பம் தர காத்திருக்கிறது திருப்பத்தூர்  வாருங்கள்!
உண்டிக்கல்ல, உயர்வுக்கல்ல;

தொண்டுக்காக தூயவர்களே வாருங்கள்!

அணி அணியாய் வந்து பணிமுடித்து மகிழ படைபோல் வருக!



சமூகத் தடை உடைக்க வருக!

மாநாட்டு குழு  சார்பில் -பழ .பிரபு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக