செவ்வாய், 2 நவம்பர், 2010

சூரியனை அணைக்கின்ற காற்று உண்டா ?

பெரியவராய் நான் ஏற்று மதிப்ப தெல்லாம்
        பெரியாரை மட்டும் தான் .பிறரோ  இங்கு
பெரியவரைய்த் தெரிகின்றார் உருவத்  தாலே ;
       சிரியவராய்த் தெரிகின்றார்  நடத்தை  யாலே .
வரிபுலி போல் நடமாடி கொள்கை  யோடு
      விடபிடியாய்  வாழ்ந்தவரே பெரியார் .இங்கே
சரிநிகர் எவருண்டு அவரை போலே ?
      சூரியனை அணைக்கின்ற காற்று உண்டா ?

நாத்திகனாய் நான் வாழ்ந்து வருவதாலே
     மண் வெறியோ  ,மொழி வெறியோ  எனக்கு இல்லை
 காத்திருந்து பிறர்மீது பதுங்கி பாயும்
      சாதிவெறி சமயவெறி என்றும் இல்லை
சாத்திரத்தை நம்பியவர் கெட்ட துண்டு
     சரித்திரத்தை நம்பியவர் கெட்ட தில்லை
ஆத்திரத்தை வளர்ப்பதுதான் தீயோர் பாதை
     பகுத்தறிவை  வளர்ப்பது தான்  நல்லோர்  பாதை

கற்பனையின் விளைவே தான் மூடபக்தி
      கட்டுக்கதை  வடிவம்தான் புராணமெல்லாம்
கற்பனையில் பொய் வளரும் .குனிந்து நிற்கும்
     தலை நிமிர ஒரு  போதும் வாய்பு இல்லை
கற்பனையால் திராவிடர்கள் அசுர  ரானார்
      அன்னியராம்  ஆரியரோ தேவ  ரானார்
நற்பயனே இலக்கியத்தில் தேவை .என்றும்
    நன்மை தரும் சிந்தனையே நமக்கு தேவை

-----------''கவிதை         துறைமுகம் சுரதா '' நுலில்
                                                                     கவிஞர் .சாகுல் அமித்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக