திங்கள், 20 மே, 2019

கியூபா – சில குறிப்புகள்




                              கியூபா – சில குறிப்புகள்                               



தலைநகர் : ஹவானா
மக்கள் தொகை : ஒரு கோடியே முப்பது இலட்சம்
மொழி : ஸ்பானிஷ் , கம்யூனிச நாடு
முக்கிய தொழில் : விவசாயம்
பிரதான பயிர்கள் : கரும்பு ,புகையிலை

உலகின் அதிக  சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு கியூபா எனவே உலகின் “சர்க்கரைக் கிண்ணம்” என்று அழைக்கப்படுகிறது

வரலாறு 

ஸ்பானிய காலனிய நாடாக இருந்து பின் விடுதலை பெற்று, அமெரிக்க ஆதரவு அதிபர்கள் ஆட்சி புரிந்தனர். 1959- இல் கியூபாவில்  பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஆயுதமேந்திய மக்கள் புரட்சி ஏற்பட்டு சர்வாதிகாரி பாடிஸ்டா ஆட்சி  நீக்கப்பட்டு கம்யூனிச நாடாக அறிவிக்கப்பட்டது.


கல்வி

கியூபா  புரட்சி முடியும் போது பாதிக்கும் பாதி எழுத்தறிவில்லாதவர்களாய்   இருந்தனர்.  எனவே எழுத்தறிவிப்பு  படை ஒன்று உருவாக்கப்பட்டு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சிறியவர் முதல் பெரியவர் வரை கல்வி கற்பிக்கப்பட்டது இதன் மூலமாக ஒன்றரை வருடங்களில் எழுத்தறிவில்லாதவர்  எண்ணிக்கை 4% குறைக்கப்பட்டது

  

கல்வி முழுவதும் அரசிடம் உள்ளது. தனியாருக்கு இடமில்லை. தொழிற்கல்வி வரை அனைத்தும் இலவசம்.
 
 ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாய கல்வி

 
ஆரம்பக் கல்வி முதல் மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட அனைத்தும் தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பிலிருந்து ஒரு அயல் மொழி ஆங்கிலம், பிரெஞ்சு ,ருஷ்ய மொழி கற்பிக்கப்படுகிறது

 
 கல்வியின் தரம் மிக சிறப்பாக பேணப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் வகுப்பறையில் தொலைக்காட்சி ,  கணினி  பொருத்தப்பட்டுள்ளது

 
இலத்தின் அமெரிக்க நாடுகளில் மொழியறிவில் கியூபா மாணவர்களே சிறந்து விளங்குவதாக யுனஸ்கோ  அறிவித்துள்ளது

 
மாணவர்கள் மலையில் இருந்தாலும் அவர்களுக்கென்று  பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பத்துக்கும்  குறைவான மாணவர்களோடு மட்டும் 2,000 பள்ளிகள் உள்ளன

 
சராசரியாக 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளார். உலகிலேயே கியூபாவில் இந்த சராசரி இங்கு தான் குறைவு .
              
 

மருத்துவம்

 
மருத்துவக் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது.

 
கியூபா மருத்துவ மாணவர்கள்  மட்டுமன்றி வளரும் நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்களுக்கும் கியூபா இலவச மருத்துவ கல்வி சேவை அளிக்கிறது.

 
170 பேருக்கு ஒரு டாக்டர்  உள்ளார். அமெரிக்காவில் 188 :1  மக்கள் தொகையை  கொண்டு சராசரி கணக்கிட்டால்  உலகிலேயே கியூபா  தான் முதலிடம்.

 
நாட்டில் உள்ள மருத்துவமனைகள் ஒளி-ஒலி துணைக்கொண்டு இணைக்கப்படுகிறது

 
மருத்துவக்கல்வி சேவையாக வழங்கப்படுவதால் கியூபா மருத்துவர்கள் 25 ஆயிரம் பேர் ஆப்பிரிக்கா,வியட்நாம்  போன்ற நாடுகளில் சேவையில் ஈடுபட்டுள்ளனர்

 
கால்பந்து வீரர் மரடோனா கியூபாவில் தான்  சிகிச்சை பெற்றார்

 

பிற சாதனைகள்

 
 ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு அரசே தருகிறது

 
 பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அறிவியல் தொழில்நுட்ப  பணியாளர்களில் 64% பேர் பெண்கள்.

 
விளையாட்டிலும் கியூபா வீரர்கள் சிறந்து விளங்குகின்றனர்.  ஒன்றே கால் கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட கியூபாவில் 10 இலட்சம் மக்களுக்கு  ஒரு தங்கப் பதக்கம் வீதம் வெல்கிறது. (இந்தியாவில் 100 கோடிக்கு ஒரு தங்கம்)

 
அமெரிக்கா கியூபா மீது பொருளாதார தடை விதித்துள்ளது.எனவே கடுமையான நெருக்கடியிலும் கியூபா சாதித்துக் கொண்டிருக்கிறது . உலக வங்கியிடம் கடன் வாங்காமல் இவற்றை  சாதித்துக் கொண்டிருக்கிறது

 
லாட்டரி குதிரைப்பந்தயம் போன்ற அதிர்ஷ்டத்தை நம்பும் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக