சனி, 5 மார்ச், 2011

ஒழிந்தது காங்கிரெஸ் !


அரசியல் சதுரங்கத்தில் கலைஞர் அருமையாக நகர்த்திய காய்கள்
தி.மு.க. தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக மறைமுகமாக அதற்கு போதிய அளவு போட்டியிட வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்க காங்கிரஸ் கட்சி மிகவும் அதிகமான - நடைமுறைக்கு சாத்தியமற்ற - தொகுதிகளை பிடிவாதமாகக் கேட்பதும், கூட்டணி நெறிமுறை களிலேயே கேள்விப்படாத வகையில், தாங்கள்தான் அத்தொகுதிகளையும்கூட தேர்வு செய்வோம் என்று நிபந்தனை விதிப்பதும் என்ற நிலை காங்கிரஸ் கட்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கட்சியாகவும், தி.மு.க. அவர்கள் தொடுக்கும் நிபந்தனை ஏற்கும் ஒரு கட்சியாகவும் உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை மக்களிடையே ஏற்ப்படுத்தி வந்தது .
         
                  சுமுகமாக முடிய வேண்டிய கூட்டணி தொகுதி பங்கிடுகள் காங்கிரெசின் முரட்டு பிடிவாதத்தால் மிரட்டி பார்க்கும் எண்ணத்தாலும் மிக சிக்கலான நிலைமைக்கு எடுத்து சென்றது .திராவிட உணர்வாளர்களும் ,தமிழின பற்றாளர்களும் கலைஞர் காங்கிரசை கழற்றி விட்டாலே பரவாயில்லை என்று எண்ணங்களை தெரிவித்தனர் .இந் நிலையில் தான் விஜயகாந்த் எனது நண்பர். தன்மானம் மிக்கவர். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததாக அவர் இதுவரை வாய் திறக்கவில்லையே. பொறுத்திருந்து பாருங்கள். என்றார் அழகிரி .காங்கிரெஸ் எப்படியாவது நம்மோடு கூட்டணி வைக்காதா என்று எதிர்பார்த்திருந்த விஜயகாந்துக்கு இந்த பேட்டி சிக்கலை உருவாக்கி விட்டது .இனியும் காத்திற்க முடியாது சீக்கிரம் கூட்டணிக்குள் வாருங்கள் அப்போது தான் மற்றவர்களின் இடங்களை முடிவு செய்ய முடியும் என்கிற ஜெயலலிதாவின் வற்புறுத்தலால் வேறு வழி இன்றி  போயஸ் தோட்டம் சென்றார் கூட்டணி அறிவிப்பு வெளியானது .காங்கிரெஸ் க்கு  தோள் கொடுக்க காத்திருந்த கட்சியும் கூட்டணிகுள் சங்கமமாக அரசியல் அனாதையான காங்கிரேச்க்கு பாடம் கற்பிக்க தயாரான கலைஞர் அன்று இரவே காங்கிரெசின் பேச்சு வார்த்தை குறித்து வெளியிட்டு இப்படி நடந்து கொள்வது நியாயம் தான ? என்று கேட்டு அடுத்த நாள் மாலை நடைபெறும் உயர் நிலை செயல்திட்ட குழுவில் உரிய முடிவு எடுக்கப்படும். என கூறியிருந்தார்.மத்திய அரசில் இருந்து திமுக விலகுகிறது என்றும், மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில் இனி ஆதரவு அளிக்கும் என்றும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

                   தொல்.திருமாவளவன் ,தமிழர் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட எராளமான தோழமை அமைப்புகளும் ,தி.மு.க தொண்டர்களும் இந்த முடிவை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்க்க திமுக மிகுந்த உற்சாகமாக ,சுயமரியாதையுடன் தேர்தல் களம் காண தயாராகி விட்டனர் .இனி காங்கிரெஸ் தனித்து போட்டி இட வேண்டும் அல்லது ஜெயலலிதாவிடம் பிச்சை கேட்க வேண்டும் .ஏற்க்கனவே 41 இடங்கள் தேமுதிக கொடுத்து விட்ட நிலையில் கலைஞர் கொடுகிறதாய் சொன்ன 60 இடங்கள் இவர்களுக்கு கொடுக்க படலாம் ஆணால் ஆதிமுகவை நம்பி இருக்கும் கம்யுனிஸ்ட் கள் ,மதிமுக நிலை மிக சிக்கலாகும் .ஒரு வேலை காங்கிரெஸ் தனித்து போட்டி இட்டால் காலி ஆகும்
எப்படியோ காங்கிரேச்க்கு மிக சரியான நேரத்தில் சரியான பாடம் கொடுத்தார் கலைஞர் .தேர்தலுக்கு முன்பே இந்த காங்கிரெஸ் சனியன் தொலைந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக