வியாழன், 16 மார்ச், 2017

NEET தேர்வை எதிர்ப்போம் ! ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வாய்ப்பினை பாதுகாப்போம் !



௦- மருத்துவராக விரும்பும் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியிருக்கிறது
-௦- தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஒளிவுமறைவின்றி நடைபெறுவதில்லை

-௦-. நாடு முழுவதும் நடக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை

என பல்வேறு வகையான காரணங்களை அடுக்கி நீட் தகுதி தேர்வை இந்தக் கல்வியாண்டு தொடங்கியே நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


-நீட் தகுதி தேர்வு என்றால் என்ன?

 
இந்திய மாநிலங்களிலிருந்து 15 விழுக்காடு எம்.பி.பி.எஸ்., இடங்களையும், 50 விழுக்காடு மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான (post graduation ) இடங்களையும் பொதுத் தொகுப்புக்குக் கொண்டு சென்ற மத்திய அரசு அதற்காக ஒரு நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது.அதற்க்கு பெயர் தான் நீட் தேர்வு NEET--(National Eligibility cum Entrance Test)


தற்போது மருத்துவ சேர்கையில் உள்ள நடைமுறை என்ன?

 நாடெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 52,715 இடங்கள் உள்ளன. மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, மொத்தமுள்ள இடங்களில் 15 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்குக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 85 சதவீத இடங்களை அந்தந்த மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, அகில இந்திய ஒதுக்கீடு போக (15 சதவீதம்) மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, அவை மாநில அரசுகளின் ஒதுக்கீட்டிற்கு இடங்களைத் தருவதில்லை. அவை 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தவிர, மீதி 85 சதவீத இடங்களையும் தாமே நிரப்பிக் கொள்கின்றன. இது தற்போது வரை உள்ள நடைமுறை



மருத்துவ சேர்கையில் இனி என்ன நடைமுறை ?


முந்தைய சேர்கை போல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 15 விழுக்காடும், மருத்துவ முதுநிலைப் படிப்புக்கு 50 விழுக்காடும் மாநிலங்களிலிருந்து போது தொகுப்புக்கு கொண்டுசெல்லும் நடைமுறை இல்லாமல் நூறு சதவீத இடங்களும் பொதுத் தொகுப்புக்குக் கொண்டு செல்லப்பட்டு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் அந்த தேர்வின் முடிவின் படியே மருத்துவ கல்லூரியில் சேர்க்கை நடைபெறும்


 நீட் தேர்வை ஏன் எதிர்க்க வேண்டும் ?


-பல்வேறு கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில் குறிப்பிட்ட முறையிலான பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு மட்டும் பயன் அடையும் வகையில் தேர்வு நடத்துவது நியாயத்திற்கு புறம்பானதாகும்

+2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கி இருந்தாலும் அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நீட் தகுதி தேர்வு மதிப்பெண்கள் மட்டும் கணக்கில் எடுத்து கொண்டு மருத்துவ சேர்கை நடத்தினால் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களும், கிராமப்புற முதல் தலைமுறையில் படித்து வரும் மாணவர்களும் வஞ்சிக்கபடுவார்கள்


மாநில அரசுகள் பணம் செலவு செய்து மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி அத்தனை இடங்களையும் பொது தொகுப்புக்குத் தாரை வார்ப்பது மத்திய அரசின் அராஜக போக்கு ஆகும்

பல ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் இந்த நீட் நுழைவுத் தேர்வினால் பலன் பெற்றவர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியிடப்படுவதில்லை

தென் இந்தியாவில் தேர்வுகள் நியாயமாக நேர்மையாக நடைபெறுவதை போல் வட மாநிலங்களில் தேர்வுகள் நேர்மையாக நடைபெறுவதில்லை இரண்டையும் ஒரு தட்டில் வைத்து பார்ப்பது மிக பெரும் தவறு

தமிழ்நாட்டில் உள்ள தரமான மருத்தவ கல்லூரிகள் போல் மற்ற மாநிலங்களில் இருப்பதில்லை நீட் தேர்வின் மூலம் மற்ற மாநிலத்திற்கு அது களவாடப் படும்

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், இப்பொழுதுள்ள தேர்வு முறையில் (+2 தேர்வு அடிப்படையில்) அதிக இடங்களைப் பெற்று விடுகிறார்கள் என்பதால், இதனை எப்படியும் ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சூழ்ச்சி, வஞ்சகம், சதித் திட்டம்தான் அகில இந்திய நுழைவுத் தேர்வு (நீட்) என்பதாகும். ஆகவே தான் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும்


+2 தேர்வு முடிவின் அடிப்படையில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எப்படி இருந்தது ?



தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் 2853. விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 25379. +2 மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர் 10,538, தாழ்த்தப்பட்டோர் 5720, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 5314, பிற்படுத்தப்பட்ட இசுலாமியர்கள் 1419, உயர் வகுப்பினர் 1228, அருந்ததியர் 928, மலை வாழ் மக்கள் 232.

பொதுப் போட்டிக்கான இடங்கள் 884. அதிக மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:

பிற்படுத்தப்பட்டோர் 599, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159, பொதுப் பிரிவினர் (உயர் ஜாதியினர்) 68, இசுலாமியர் 32, தாழ்த்தப்பட்டோர் 23, அருந்ததியர் 2, மலைவாழ் மக்கள் 1 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மூன்று பேர். இந்த மூவரும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆவார்கள்.பார்ப்பன உயர்சாதியினரின் எண்ணிக்கை மூன்று சதவீதம் கூட இல்லை


நீட் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை இருப்பின் எப்படி இருக்கும் ?


ஒடுக்கப்பட்ட ,தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு உயர்ஜாதி ,பார்ப்பனர்கள் பனியாக்கள் ஆக்கிரமித்து இருப்பார்கள்
 

நீட் வேண்டாம் ஆனால் என்ன செய்ய வேண்டும் ?


 
1.
தமிழகப் பாடத்திட்டத்தை தரம் உயர்த்துதல் மிக அவசியம்

  
2.
கற்பித்தலை அறிவு பெறும் கற்றல்என்ற முறையில் மாற்றியமைத்தல்; கற்றலும், கற்றலின் பயன்பாடும் கூர்மையாகும் விதத்தில் பயிற்றுவித்தல்


.
3.
தேர்வு முறையைக் கற்றல்’-ஐ அடிப்படையாகக் கொண்டு, சிறந்த கல்வியாளர்கள் மூலம் மாற்றியமைத்தல்.


 
4.
வினாத்தாள்கள் நீட்போன்ற தேர்வுகளுக்கு கேட்கப்படுவதைப்போல் தரமாக இருக்குமாறு அமைத்தல். இதன்வழி, தனியாக நீட்நுழைவுத்தேர்வுக்குப் பயிற்சி மையங்களுக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தை தேவையற்றதாகச் செய்தல்


.
5.
ஆசிரியர்களின் தரத்தைத் தொடர்பயிற்சிகளின் மூலம் மேம்படுத்துதல்



.
6.
கிராமப் பள்ளி மாணவர்களுக்கு தாராளமான நிதியுதவியும், பயிற்சியும் தர பல்லாயிரம் தன்னார்வலர்களை களமிறக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக